க.பொ.த (உயர்தர) பரீட்சையை ஜனவரி 23ஆம் திகதி முதல் பெப்ரவரி 17ஆம் திகதி வரை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் எச். ஜே. எம். அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் 2,200 பரீட்சை நிலையங்களில் பரீட்சை நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, 17ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணி முதல் பரீட்சை முழுமையாக முடியும் வரை பரீட்சார்த்திகளுக்கான பயிற்றுவிப்பு வகுப்புகளை ஏற்பாடு செய்தல் மற்றும் அந்த வகுப்புகளை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், பாடம் தொடர்பான விரிவுரைகள், கருத்தரங்குகள், பயிலரங்குகள் நடத்துதல், உரிய தேர்வுகளுக்கான யூக வினாக்கள் அடங்கிய வினாத்தாள்களை அச்சடித்து விநியோகித்தல், சுவரொட்டிகள், பதாகைகள், மின்னணு, அச்சிடப்பட்ட ஊடகங்கள் அல்லது சமூக ஊடகங்களில் பரீட்சை தாள்களில் கேள்விகள் வழங்கப்படும் அல்லது அதுபோன்று கேள்விகள் அடங்கிய ஆவணங்களை வெளியிடுவது அல்லது வைத்திருப்பது தடைசெய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்தவொரு நபரோ அல்லது நிறுவனமோ அல்லது வேறு தரப்பினரோ இந்த உத்தரவுகளை மீறி செயற்பட்டால், அந்த நபரோ அல்லது நிறுவனமோ அல்லது அந்த தரப்பினரோ குற்றவாளிகள் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
எந்தவொரு நபரோ அல்லது நிறுவனமோ அல்லது தரப்பினரோ இந்த உத்தரவுகளை மீறினால் அருகில் உள்ள பொலிஸ் நிலையம் அல்லது பொலிஸ் தலைமையகம் அல்லது இலங்கை பரீட்சை திணைக்களத்திற்கு பின்வரும் இலக்கங்களில் முறைப்பாடு செய்யுமாறும் அமித் ஜயசுந்தர கேட்டுக் கொண்டார்.
* பொலிஸ் தலைமையகம் – 011 242 1111
* பொலிஸ் அவசர எண் – 119
* இலங்கை பரீட்சை திணைக்கள அவசர தொலைபேசி இலக்கம் – 1911
* பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தின் அலுவலகம் – 0112 785 211 / 0112 785 212
* பாடசாலை பரீட்சைகள் ஒழுங்களைப்பு மற்றும் முடிவுகள் கிளை – 0112 784 208 / 0112 784 537
අපොස (උසස් පෙළ) විභාගය ජනවාරි මස 23 වනදා සිට පෙබරවාරි මස 17 වනදා දක්වා පැවැත්වීමට කටයුතු සංවිධානය කර තිබෙන බව විභාග කොමසාරිස් ජනරාල් එච්. ජේ. එම්. අමිත් ජයසුන්දර පවසයි.
දිවයින පුරා විභාග මධ්යස්ථාන 2,200කදී විභාගය පැවැත්වීමට කටයුතු කර ඇති බව ඔහු නිකුත් කළ නිවේදනයක සඳහන් වෙයි.
ඒ අනුව එළඹෙන 17 වනදා මධ්යම රාත්රී 12.00 සිට සම්පූර්ණයෙන් විභාගය අවසන් වන තෙක් විභාග අපේක්ෂකයින් සඳහා උපකාරක පන්ති සංවිධානය කිරීම සහ එම පන්ති මෙහෙයවීම තහනම් කර තිබේ.
එමෙන්ම, විෂයානුබද්ධ දේශන, සම්මන්ත්රණ, වැඩමුළු පැවැත්වීම, උක්ත විභාග සඳහා අනුමාන ප්රශ්න ඇතුළත් ප්රශ්න පත්ර මුද්රණය කිරීම සහ ඒවා බෙදා හැරීම, විභාග ප්රශ්න පත්රවල ප්රශ්න ලබාදෙන බවට හෝ ඒ හා සමාන ප්රශ්න ලබාදෙන බවට පොස්ටර්, බැනර්, අත්පත්රිකා විද්යුත්, මුද්රිත මාධ්ය හෝ සමාජ මාධ්යජාල මගින් ප්රසිද්ධ කිරීම හෝ එවැනි දෑ ළඟ තබාගැනීම තහනම් බව දන්වා ඇත.
යම් අයෙක් හෝ ආයතනයක් හෝ වෙනත් පාර්ශවයක් මෙකී නියෝග නොසලකා ක්රියා කළහොත් ඒ තැනැත්තා හෝ ආයතනය හෝ එම පාර්ශවය වරදකරුවෙකු වන බවද විභාග කොමසාරිස් ජනරාල්වරයා පවසයි.
කිසියම් තැනැත්තෙකු හෝ ආයතනයක් හෝ පාර්ශවයක් මෙම නියෝග යම් ආකාරයකින් කඩකිරීමක් හෝ උල්ලංඝනය කිරීමක් හෝ සිදුකළහොත් ඒ පිළිබඳව ළඟම පවතින පොලිස් ස්ථානය හෝ පොලිස් මුලස්ථානය හෝ ශ්රී ලංකා විභාග දෙපාර්තමේන්තුව වෙත පහත අංක ඔස්සේ පැමිණිලි කරන ලෙසද අමිත් ජයසුන්දර ඉල්ලා සිටි.
* පොලිස් මුලස්ථානය – 011 242 1111
* පොලිස් හදිසි ඇමතුම් අංකය – 119
* ශ්රී ලංකා විභාග දෙපාර්තමේන්තුවේ ක්ෂණික ඇමතුම් අංකය – 1911
* විභාග කොමසාරිස් ජනරාල් කාර්යාලය – 0112 785 211 / 0112 785 212
* පාසල් විභාග සංවිධාන හා ප්රතිඵල ශාඛාව – 0112 784 208 / 0112 784 537