கலைத்திட்டத்திலுள்ள கற்றல்இலக்குகளை அடைவதில் மாணவர்கள் எந்தளவுமுன்னேற்றம் அடைந்துள்ளார்கள் என்பதனைத் தொடர்ந்து மதிப்பீடுசெய்தல் ஆசிரியர்கள், அதிபர்கள், கல்வி நிர்வாகிகள் போன்றோரின்முக்கிய பணியாகக் கருதப்படுகின்றது. கற்றல்இலக்குகளை மாணவர்கள் அடைந்துள்ளனரா எனமதிப்பிடவும், கற்றல் இடர்பாடுகளைக் கண்டறிந்துஅதற்கான பரிகார வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்திஅனைத்து மாணவர்களும் குறித்த கற்றல் இலக்கைஅடையச் செய்வதற்கு மதிப்பீடு இன்றியமையாதது ஆகும். இதுவே மதிப்பீட்டின் பிரதான நோக்கமாகவும் கருதப்படுகின்றது. அத்துடன் பாடசாலைகளில் மாணவர்களின் கல்வித்தரத்துடன் சமூகப் பண்புகள், ஆளுமைகள், ஒழுக்கப் பண்புகள் போன்றவற்றையும் ஆசிரியர்கள்மதிப்பிட்டு அறிவது இன்றியமையாதது ஆகும். மதிப்பீட்டுப்பணி ஆசிரியர்களின் உயர் தொழில் பொறுப்புக்களில்இன்றியமையாத கூறாகக் காணப்படுகின்றது. ஆரம்பகாலங்களில் ஆசிரியர்கள் தமது மாணவர்களின் பாடப்பொருள்அறிவை மாத்திரம் அறிய முற்பட்டனர். அதற்கு பாடசாலைப் பரீட்சைகள் பயன்பட்டன. இப் பரீட்சை முறைகளில்பல்வேறு குறைபாடுகள் உள்ளன. இன்றைய சூழலில்பரீட்சை முறையில் தரத்தை உயர்த்துதல்பற்றி கல்வியியலாளர்களின்கவனம் திரும்பியுள்ளது. இந்தியக் கல்வியியலாளர் கலாநிதிஇராதகிருஸ்ணன் கல்வியில் ஒரே ஒருசீர்திருத்தத்துக்கு மட்டுமே இடம் உண்டுஎனின் அச் சீர்திருத்தம் பரீட்சைமுறைதொடர்பாகவே இருக்க வேண்டும் என்கின்றார். இவ்நிலையில் புதிதாக பதவியேற்ற அரசுபல கல்விச் சீர்திருத்தங்களைக்கொண்டுவரவுள்ளதாகக் கூறுகின்றது. அரசாங்கத்தினால் எவ்வகையான சீர்திருத்தம் கொண்டுவரப்பட்டாலும்இலங்கையில் மாணவர்களை மதிப்பிடும் முறைகளில்சீர்திருத்தம் மேற்கொள்ளப்படும் வரை எந்த சீர்திருத்தங்களும்பயன் தரப்போவதில்லை.
இலங்கையின் கலைத்திட்டம் ஆனது பரீட்சையினால் மூழ்கடிக்கப்பட்ட ஒன்றாகவே காணப்படுகின்றது. கல்வி ஆணைக்குழுவின் கல்வித்தரத்தை உயர்த்துதல் தொடர்பாகஅறிக்கையில் குறிப்பிட்டது போல் பரீட்சைகள் நாயைஆட்டும் வால் போல் கலைத்திட்டத்திற்குஆணையிடுகின்றன. இப் பரீட்சைமுறை ஒழியும்வரை மாணவர்களுக்கு எதிர்காலத்துக்குத்தேவையான என்ன என்ன திறனைகளைக்கற்பிக்க வேண்டும் என்றுஆசிரியர்களுக்கு விளங்கப்போவதில்லை. மாணவர்களின் வகுப்பறை மதிப்பீடுகளில்எதிர்காலத்துக்குத் தேவையான திறன்கள் குறித்துஆசிரியர்கள் கவனம் செலுத்த வேண்டும். கற்றல் என்பது தனியே பாடநூல்களாலும், ஆசிரியர்களாலும், பாடசாலையினாலும் மேற்கொள்ளப்படும் விடய அறிவு மாத்திரம் அன்று என்பதனை அனைவரும்புரிந்து கொள்ள வேண்டும். கற்றல்தொடர்பான பழைமையான மாயையினை நீக்குவதற்குநன்கு வடிவமைத்த மதிப்பீட்டு அணுகுமுறைகளைஅமுல்படுத்த வேண்டும். பாடசாலைக்கு வெளியே சமூகத்தில்வாழ்க்கைக்குத் தேவையான திறன்களில் தமதுஅறிவைப் பிரயோகிக்க உதவுவதாக மதிப்பீட்டு முறைகளை வடிவமைக்கவேண்டும்.
நவீன கல்வியியல் சிந்தனையாளரும்பாடசாலைகள் அற்ற சமூகம் என்றநூலின் ஆசிரியருமான இவான் இலிச் தனிமனித வளர்ச்சி என்பது அளவிடமுடியாதது, மதிப்பிடமுடியாதது என்று கூறுகின்றார். அத்தோடுவேறு ஒருவரின் அடைவோடும் அதனைஒப்பிட முடியாது என்றும் கூறுகின்றார். அத்தோடு கற்றல் என்பது அளவிடமுடியாத படைப்பாற்றல் அதனை மதிப்பிடுவதால் மாணவர்களின்படைப்பாற்றல் திறனில் பாதிப்பு ஏற்படும் என்கின்றார்.
இன்றைய நிலையில் கற்றலைப்பாடப் பகுதிகளாக்கி முன்னரே ஆயத்தப்படுத்தப்பட்ட கட்டமைப்புக்களாகப்பாடத்திட்டத்தை அமைத்து அதனை மாணவருக்குப் புகுத்திஅதனை அளக்க முயல்வதாக அரசுகாட்டிக் கொள்கின்றது. மாணவர்கள் தமது தனிப்பட்டவளர்ச்சிகளை அளக்க மற்றவர்கள் தரும்அளவீட்டுக்கு தம்மை உட்படுத்திக் கொள்கின்றனர். இதனால் மாணவர்களின் படைப்பாற்றல் திறன் காணாமல் போய்விடுகின்றது. மதிப்பீடுகளை உண்டாக்கவும் அளவிடவும் முடியும் என்றகருத்தை அரசு நிறுவன மயப்படுத்தப்பட்ட அமைப்புக்களான பாடசாலைகள், பரீட்சைத் திணைக்களம் மூலம் அனைவரையும் ஏற்றுக்கொள்ளச் செய்கின்றது.
இதேசமயம் மாணவர்கள் ஒவ்வொருவரும்தனியாள் வேறுபாடுகளைக் கொண்டு அமைந்தவர்கள் அவர்களில்சிலர் கட்புலம் சார்ந்த கற்றல்பாங்குகளை உடையவர்களாகக் காணப்படுவார் சிலர் தர்க்கம் சார்ந்தகற்றல் பாங்கையுடையவர்களாகக் காணப்படுவார் சிலர் மொழி சார்ந்தகற்றல் பாங்கையுடையவர்களாகக் காணப்படுவார். சிலர் உடல் இயக்கம்சார்ந்த கற்றல்பாங்கையுடையவர்களாகக் காணப்படுவார். சிலர் இயற்கையுடன் இணைந்தகற்றல் பாங்கையுடையவர்களாகக் காணப்படுவர். இதேபோல் வேறுவேறு கற்றல்பாங்குகளை உடைய மாணவர்களை ஒரேவகுப்பறையில் வைத்து இருந்து ஒரேவகையான கற்றல் கற்பித்தலை நடாத்திஅவர்களை ஒரே வகையான மதிப்பீட்டுக்குஉட்படுத்தலை எந்தவகையில்தரமான மதிப்பீடாகக் கொள்ள முடியும். அவர்அவர் தனித் திறமைகளைக் கருத்தில்கொள்ளாமல் நடைபெறும் கற்றல் கற்பித்தல்எந்தளவு வெற்றிகரமான கற்றல் கற்பித்தலாகஇருக்க முடியும். தனித்தனி வகையானகற்றல் பாங்கையுடையவர்களை வகுப்பின் இறிதியில் எழுத்துச்சோதனையினை மூலம் மாத்திரம் அளவிட்டுமதிப்பிடுதல் எந்தவகையில் சிறப்பான மதிப்பீடாக இருக்கமுடியும். இவ்வாறான மதிப்பீடுகள் அம்மாணவர்களின் தனித்திறமைகளை புதைக்கின்ற செயற்பாடாவே அமையும் என்பது வெளிப்படையானது. எனவே மதிப்பீடு என்பது மாணவர்களின்தனியாள் வேறுபாடுகளைக் கருத்திற் கொண்டே மேற்கொள்ளப்படவேண்டும். அதற்கு மதிப்பீடு அந்தஅந்த கற்றல் பாங்குகளுக்கு ஏற்பவேதிட்டமிடப்பட வேண்டும். அத்தோடு இலங்கையில்குறிப்பாக வடமாகாணத்தில் பெரும்பாலான பாடசாலைகளில் மாணவர்களைச் சமாந்தர வகுப்புகளாகப் பிரித்தல்பரீட்சைப் புள்ளிகளை அடிப்படையாகக் கொண்டேமேற்கொள்ளப்படுகின்றது. இதனால் மாணவர்கள் உளரீதியாகப்பாதிக்கப்படுகின்றனர். உண்மையிலேயே மாணவர்களை சமாந்தர வகுப்புக்களாகப்பிரித்தல் அவர்களின் கற்றல் பாங்குகள்அடிப்படையிலேயே மேற்கொள்ளப்பட வேண்டும். அப்போது தான்அவர்களின் கற்றல் பாங்குகளுக்கு ஏற்பகற்றல் கற்பித்தலைத் திட்டமிட்டுக் கொள்ளலாம். அத்தோடு மதிப்பீடுகளையும் திட்டமிட்டுக்கொள்ளலாம். பன்முக நுண்மதிக் கொள்கையினைவெளியிட்ட ஹவாட் காடுனரின் கருத்துப்படிமாணவர்களின் நுண்மதி ஆற்றலுக்குப் பொருத்தமாககற்றல் கற்பித்தல், மதிப்பீடு என்பவற்றைத் திட்டமிடாமல்அந்த கற்றல் கற்பித்தல் வெற்றியளிக்கமாட்டாது என்கின்றகருத்தும் நோக்கத்தக்கது.
இதேசமயம் கல்வி மதிப்பீடுகள்சில எடுகோள்களின் அடிப்படையிலானவைஎன்பதனை அனைவரும் விளங்கிக் கொள்ளவேண்டும். ஒரு பரீட்சை மூலம்மாணவர்களின் நடத்தை முழுவதையும் அவதானிப்பதோஅளவிடுவதோ முடியாத விடயம் அளவிடப்படும்நடத்தைகள் அவதானிக்கப்படாத நடத்தைகளாலும் பிரதிநிதித்துவம் செய்கின்றது என்கிற அடிப்படையில் தான்கல்வியில் மதிப்பீடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. பல வருடங்கள்கற்ற கல்வியினை ஒரு வினாத்தாள்மூலம் அந்த மாணவனை மூன்றுமணித்தியாலங்களில் அவனது எதிர்காலத்தை மதிப்பிட முடியும்; எனின்பரீட்சைகள் தான் உலகின் முதல்யோசியக்காரனாக இருக்க வேண்டும். எனவேஇவ்வாறான இறுதி மதிப்பீடுகளைக் குறைத்துதொடர்மதிப்பீடுகள், மாணவர் சுயவிபரப் பதிவேடு, பாடசாலை மட்டக்கணிப்பீடு போன்றவற்றை வலுப்படுத்துவதன் மூலம் மாணவர் தொடர்பானசிறந்த மதிப்பீடுகளைப் பெறமுடியும்.
இதேசமயம் ஒவ்வொரு மாணவர்களும்தனியாள் வேறுபாடுகளைக் கொண்டவர்கள். எனவே இவ் வருடம்பரீட்சை எடுத்த மாணவர்களின் பெறுபேறுகளைசென்ற ஆண்டு பரீட்சை எடுத்தமாணவர்களின் பரீட்சைப் பெறுபேறுகளுடன் ஒப்பிடுவதுதவறானது ஆகும். இந்த ஆண்டுபரீட்சை எடுத்த மாணவர்கள் வேறுசென்ற ஆண்டு பரீட்சை எடுத்தமாணவர்கள் வேறு எனவே இவ்வாறானமதிப்பீடுகளை கல்வி அதிகாரிகள் நிறுத்திக்கொள்ள வேண்டும். இன்று கல்விமதிப்பீடு என்பது புள்ளிவிபரங்களாகவே சுருங்கிவிட்டது. அடைவு மட்டம் எவ்வளவு? கடந்தவருடத்தை விட இந்த வருடம்எத்தனை சதவீதம் அதிக அடைவுமட்டம்என எண்களுக்கே அதிகமுக்கியத்துவம் வழங்கப்படுகிறது. ஒரு வகுப்பறை என்பதுபுள்ளிவிபரங்களின் தொகுப்பு அல்ல என்பதனைகல்வி அதிகாரிகள் விளங்கிக் கொள்ள வேண்டும். அவ்வாறு புரிந்து கொள்வார்கள் எனின்தரம் 5, தரம் 11 பரீட்சைகளின் மதிப்பீடுகள்வெளியிடப்படும் போது வெற்றுக் கூச்சல்களைக்காணமுடியாது.
இதேசமயம் ஒரு பரீட்சையில்ஒரு மாணவன் பூச்சியம்புள்ளிகளைப் பெற்றான் ஆயின் அவனுக்குஅப்பாடம் பற்றிய அறிவு பூச்சியம்என்பதல்ல அந்த அளவீட்டு கருவிவினாத்தாள் அடிப்படையிலேயே அவனது புள்ளி பூச்சியம். வேறு ஒரு அளவீட்டுக் கருவியின்அடிப்படையில் அந்த மாணவனை மதிப்பிட்டால்அவனால் சிறந்த புள்ளிகளைப் பெறமுடியும்என்பதனையும் அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும். குறித்த காலத்தில் சிறந்தஅளவீட்டு கருவியாகக் காணப்படுவது சிறிது காலத்தில் சிறந்தஅளவீட்டு கருவியாக இருக்க வேண்டும்; என்பதல்ல. மாணவர் அடைவு என்பதுஅறிகை, மனவெழுச்சி, உளஇயக்க ஆட்சிகளில், மாணவர்களின்நடத்தை மாற்றத்தை குறிப்பிடுகின்றது. கூடுதலாகஅடைவுச் சோதனைகளில் அறிகை ஆட்சியினை மாத்திரம்கருதுகின்றனர். மாணவனின் அடைவை அளவிடஎழுத்துச் சோதனை மூலம் பெறப்படும்தகவல்கள் போதுமானவையல்ல மாணவனின் சொல்சார், எண்கள்சார்அறிவை வைத்து மாணவரின் உடல்சார்தொழிற்பாடு தொடர்பான அனுமானங்களை மேற்கொள்ளமுடியாது என்பதனையும் கருத்தில் கொள்ள வேண்டும். இவை போன்ற பல்வேறுஎடுகோள்களின் அடிப்படையில் தான் மதிப்பீடு மேற்கொள்ளப்படுகின்றதுஎன்பது நோக்கப்பட வேண்டிய விடயம்ஆகும்.
இதேவேளை இலங்கையின் கல்விமதிப்பீட்டு முறைகளுக்கும் யதார்த்தத்துக்கும் இடையில் பாரிய இடைவெளிகாணப்படுவதனை அவதானிக்க முடியும். ஒரு பரீட்சையில் கரும்புஎங்கு விளைகின்றது என்பது வினா ஆயின்ஒரு மாணவனுக்கு பாடப்புத்தகத்திலுள்ளவிடை தெரியும். எழுதினான் புள்ளிகிடைத்தது. ஆனால் மற்றைய மாணவனுக்குபாடப்புத்தகத்தினுள்ள விடை ஞாபகம் வரவில்லை. ஆனால் அவனது கிராமத்தில் கரும்புவிளைகின்றது. ஆனால் அது பாடப்புத்தகத்தில்இல்லை அதனை எழுத முடியாது. அதனால் புள்ளி இல்லை. இப்போதுஇரண்டு மாணவர்களுக்கு முன்பும் கரும்பை வைத்துஇதன் பெயர் என்ன என்றுகேட்டால். சரியான விடை எழுதியமாணவனுக்கு அதன் பெயர் கரும்புஎன தெரியாது. விடைஎழுதாமல் புள்ளி எடுக்காத மாணவனுக்குதமது ஊரில் விளையும் கரும்புபற்றி நிறையவே தெரியும். எனவேஎமது நாட்டில் கல்வி நடைமுறையிலிருந்துஎவ்வளவு விலகியுள்ளது என்பதனையே இது காட்டிநிற்கின்றது. எனவே தனியாக புத்தக அறிவைமாத்திரம் அளவிடும் மதிப்பீட்டு முறைகளில்மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும்.
இதேசமயம் குறித்த வகுப்புக்கானதிறன்களாக வரையறுக்கப்பட்டவை அந்த வயதுக்குரிய சராசரிகுழந்தைகளை மனதில் கொண்டே தயாரிக்கப்பட்டுள்ளன. இதனால் சில குழந்தைகளின் அடைவுஎன்பது சில சமயங்களில் சாத்தியப்படாதுபோகலாம். இலங்கையின் பாடநூல் தயாரிப்பில் இந்தவயதுக்கு இந்த திறன் பொருத்தமானதுஎன்பது தொடர்பான விஞ்ஞான ரீதியானஆய்வின் அடிப்படையில் பாடநூல்கள் தயாரிக்கப்படுவதாகத் தெரியவில்லை. இலங்கையில் கலைத்திட்ட மாற்றம் என்பது தனியேபாடப்புத்தகங்களின் மட்டை மாற்றுவதாகவும் பாடவரிசைமாற்றுவதாகவுமே காணப்படுகின்றது. குறித்த வகுப்பு மாணவர்களுக்குஇந்த திறன்கள் போதியது எனகலைத்திட்டக் குழுவே தீர்மானிக்கின்றது. இதுசராசரி மாணவனை அடிப்படையாகக் கொண்டேதீர்மானிக்கப்படுகின்றது. எனவே சராசரி மாணவனைவிட குறைந்தவர்கள் கற்றலில்இடர்படுதல் கட்டாயம் நடைபெறும் ஒன்றாகவேகாணப்படும். எனவே இதனை பயன்படுத்தியமதிப்பீடுகள் எந்தளவு நம்பகம் மிக்கனஎன்பதும் சிந்திக்க வேண்டியது அத்தோடுகலைத்திட்ட மாற்றம் ஆனது நவீனமதிப்பீடு முறைகளுடன் இணைந்ததாகவே இருக்க வேண்டும். இதேவேளைஎனக்கு இவை எல்லாம் தெரியும்என்கின்ற புரிதல் மாணவருக்கு ஏற்படும்போது மட்டுமே தெரியாத விடயங்கள்தொடர்பாக சிந்திக்க முடியும். மாணவர்களுக்குஎது தெரியும் என்றஅடிப்படையில் மாணவர் மதிப்பீட்டை வைத்துமாணவர் சார்பாக நியாயம் கூறும்ஆசிரியர்கள், அதிகாரிகள் இன்மையும் கவலைதரும் விடயம்ஆகும்.
இதேசமயம் இன்றைய மதிப்பீட்டுமுறைகளால் பாடசாலை என்பது தனியேஅறிவை தேடும் இடமாகவே கருதப்படுகின்றது. இன்று ஒரு மாணவன் அறிவைமட்டும் தேடி பாடசாலைக்கு வரவேண்டியஅவசியம் இல்லை. அறிவு இணையம்முழுவதும் கிடைக்கின்றது. திறன்களை வளர்த்துக் கொள்ளத்தான்பாடசாலைக்கு வரவேண்டும். எனவே அறிவை மட்டும்சோதித்து அதன் தோல்விகளை மட்டும்பேசும் கல்வி மதிப்பீட்டுமுறைகள் முடிவுக்குகொண்டு வருவது அவசியமானது. மாணவர்களின்தோல்வியை நினைவுபடுத்திக் கொண்டு இராத மாணவர்களின்பல்திறனுக்கு மதிப்பளிக்கும் மதிப்பீட்டு முறை காலத்தில் தேவையாகும். திறமையில்லாத மாணவர் என்று ஒருவர்கூட இல்லை. ஒவ்வொருவரிடமும்ஒவ்வோர் ஆற்றல் பொதிந்துள்ளது. அதுவெளிப்படும் இடமும் நேரமும் வேறுஆக இருக்கலாம். சிலர்படிப்பில் கெட்டிக்காரராக இருக்கலாம். சிலர் விளையாட்டில் சிலர்நடனத்தில் என அத்தனைபேரின் திறமைகளையும் வெளிப்படுத்தும் மதிப்பீட்டு முறை அத்தியாவசியமானது ஆகும்.
இதேவேளை ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்கானகல்விமுறை என்ற நூலின் ஆசிரியரானபின் நவீனத்துவக் கல்விச் சிந்தனையாளர் போலோபிறைரே இன்றைய கல்வி முறையினைவங்கி முறைக்கல்வி என விமர்சிக்கின்றார். கல்வி என்பது வங்கியில் பணத்தைப்போட்டு வைப்பது போன்ற வேலைஎன்கின்றார். ஆசிரியர் பணம் போடுபவன்போல் செய்திகளை அதிலே போடுபவராகஇத்தகைய செய்திகள் சேமித்து வைக்கும்பகுதியாக மாணவர் இருப்பதால் அதனைஏற்றுக் கொண்டு அதனை மனப்பாடம்செய்து திரும்பச் சொல்பவர்களாக இன்றையகல்விமுறை இருப்பதாகக் குற்றம்சாட்டுகின்றார். இவ்வாறான கல்விமுறை மற்றும்மதிப்பீட்டு முறைகளால் மாணவர்கள் இலகுவில்ஒடுக்கப்படுபவர்களாக மாற்றப்படுவதாகவும் குற்றம் காண்கின்றார். இதேவேளைஇவற்றான கல்வி, மதிப்பீட்டு முறைகள்மாணவர்களை சுயசிந்தனை அற்றவர்களாக படைப்பாற்றல்திறன் அற்றவர்களாக மாற்றுகின்றது. எனவே இவ்வாறான கற்பித்தல்முறைகளும், மதிப்பீட்டு முறைகளும் நிச்சயம் மாற்றம்ஏற்படுதல் அவசியமாகும். சோக்கிரடிஸ் சிந்தனையைத் தூண்டுவது தான் உண்மையானகல்விமுறை என்று கூறுகின்றார் என்பதும்நோக்கத்தக்கது.
இன்றைய மாணவர்களின் வன்முறைமற்றும் போதைப்பொருள் பாவனைக்கும் நாட்டில் மதிப்பீடு முறைக்கும்நெருங்கிய தொடர்பு காணப்படுகின்றது. மாணவர்களின்தோல்வியை மாத்திரம் வெளிப்படுத்தும் மதிப்பீடுகளினால்மாணவர்கள் மனரீதியான அழுத்தங்களுக்கு உள்ளாகின்றனர். இதுவே வன்முறையாக மாற்றம் அடைகின்றது. நாட்டில்கல்வி மதிப்பீட்டு முறை அனைத்து மாணவர்களின்பன்முகத்தன்மைக்கு ஏற்ப மாற்றம் ஏற்படும்போது இவ்வாறான புறத்தாக்கங்கள் குறைந்துசெல்லும் என்று கல்வியியலாளர்கள் கூறுகின்றார்கள்.
எனவேபரீட்சை என்பது தெரிந்ததை வெளிக்கொண்டுவரும் வாய்ப்பாக நோக்க வேண்டும். மாணவர் கல்வி பெறும் விதத்தைஒரு அறிவுப்பரிமாற்றமாக நோக்காமல்பலவகையான கற்றல் அனுபவங்களைப் பெறுபவையாககற்றல் கற்பித்தல் மாற்றமடைய வேண்டும். நாம்எங்கு இருக்கின்றோம் என்று அறிவதற்கு பரீட்சைகள்முக்கியமானவை தான் பரீட்சை என்பதுஎன்றோ ஒருநாள் என்னும் போதுதான் சிரமங்கள் ஏற்படுகின்றது. தெரிந்தவிடயங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக பகிரும்பரீட்சை முறை அறிமுகப்படுத்த வேண்டும். பதினொரு ஆண்டுகள் கற்ற ஒருமாணவர் ஒரு நாளிலேயே சித்தியடையவில்லைஎன்கின்ற அறிவிப்புக்கள் உளவியல் ரீதியாக அபத்தமானவை. இதே வேளை உலகின்அனைவராலும் பாராட்டப்படும் கல்விக் கொள்கையினைக் கொண்டபின்லாந்தில் பரீட்சையினை அடிப்படையாகக் கொள்ளாத கல்வி முறையேஉள்ளது. ஆனால் அங்கு பயிலும்மாணவர்கள் சர்வதேசரீதியாகப்போட்டிப் பரீட்சைகளில் முதலிடம் பெறுகின்றனர் என்பதுஅவதானிக்கப்பட வேண்டிய விடயம் ஆகும்.
இதேவேளை பின் நவீனத்துவகல்விச் சிந்தனையாளர் இவான் இலிச் கற்பித்தலைக்கற்றலோடு குழம்பிக் கொள்ளக் கூடாது. அதிக புள்ளி பெறுதலை கல்வியோடுகுழப்பிக் கொள்ளக் கூடாது. பட்டங்களைத்தகுதியோடு குழப்பிக் கொள்ளக்கூடாது. சரளமானபேச்சை புதியன சொல்லும் ஆற்றலோடுகுழப்பிக் கொள்ளக்கூடாது என்று கூறுகின்றார். அத்தோடுமருத்துவச் சிகிச்சையினை உடல் நலன் பேணல்என்றும் பொலிஸ் தரும் பாதுகாப்பைஉறுதி என்றும் வணிகப் போட்டியைவளர்ச்சி என்றும் கொள்ளப்படுவது போல்மாணவர் பெறும் பரீட்சை மதிப்பீடுகளைகல்வி அடைவு என்று தவறாக் கொள்கின்றோம் என்கின்றார்.
இதேசமயம்திறன்களை அடிப்படையாகக் கொண்டு புதிய அரசுகல்வி மறுசீரமைப்புக்களை மேற்கொள்ளப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தற்போதுள்ள தேர்ச்சிஅடிப்படையாகக் கொண்ட கலைத்திட்டத்தை விடசிறப்பாக இருக்க வேண்டும் ஆனால்தற்போதுள்ள பரீட்சையின் கனதி குறைக்கப்பட்டு பிரயோகஅடிப்படையில் பரீட்சைகள் மாற்றப்பட வேண்டும் இதனால்வேலைவாய்ப்பு அற்றோர் தொகை குறைந்துநாடு அபிவிருத்தி நோக்கி நகரும் என்பதுதிண்ணம்.
அதுஎவ்வாறு இருந்த போதும் ஒவ்வொருமாணவரிடமும் வேறுவேறு ஆற்றல்கள் காணப்படும். எனவே ஒவ்வொரு மாணவரையும் மதிப்பிடதனித்தனி தராசு வேண்டும் எல்லா மாணவரையும் ஒரேமுறையில் மதிப்பிட முடியாது. ஒரேஉடையினை வைத்துக் கொண்டு எல்லாஉடல்களிலும் நுழைக்க முனைகின்றோம். அதுபொருந்தவில்லை என்கின்ற போது அதுஉடையின் கோளாறு என்பதையும் புரிந்துகொள்ளாமல் யாரோ ஒருவர் மீதுகுற்றம் காணமுயல்கின்றோம். எனவே மதிப்பீட்டின் நவீனஅணுகுமுறைகளைப் பயன்படுத்துவதன் மூலம் புதிய அரசுநடைமுறைப்படுத்த போவதாகக் குறிப்பிடும் நாட்டிற்குபொருத்தமான கலைத்திட்டத்தை அர்த்தமுள்ளதாக மாற்ற முயற்சிக்க வேண்டும்.
இராமச்சந்திரன் நிர்மலன்
ஆசிரியர்