தற்போது நடைபெற்று வரும் கடந்த ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் எதிர்வரும் 22 ஆம் திகதி ஆரம்பிக்க திட்டமிடப்பட்டாலும் உரிய திகதியில் மதிப்பீட்டு பணிகள் ஆரம்பமாகாது எனத் தெரியவருகிறது.
விடைத்தாள் கட்டுப்பாட்டு மதிப்பீட்டுப் பணிகள் மற்றும் விடைத்தாள் திருத்தும் பணிகளின் கலந்துரையாடலை பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் புறக்கணித்தமையே இதற்குக் காரணம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சம்மேளனம் தமது உறுப்பினர்கள் இம்முறை நடவடிக்கைகளில் ஈடுபடமாட்டார்கள் என பரீட்சை திணைக்களத்திற்கு அறிவித்துள்ளனர். அரசாங்கத்தின் புதிய வரித் திருத்தங்களுக்கு எதிராகவே அவர்கள் பல்கலைக்கழக கடமைகளுக்கு புறம்பான சேவை வழங்கல் நடவடிக்கைகளில் இருந்து விலகிக் கொள்ள தீர்மானித்துள்ளனர்.
புதிய வரிக் கொள்கையை அரசாங்கம் திரும்பப் பெறும் வரை பரீட்சை கடமைகளில் ஈடுபட வேண்டாம் என அவர்கள் தமது உறுப்பனர்களுக்கு தெரிவித்துள்ளனர்.
2022 ஆம் ஆண்டின் உயர்தர பரிட்சை 17 ஆம் தேதி முடிவடைகிறது. விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யும் பணியை வரும் 22ம் தேதி முதல் ஆரம்பிக்க பரிட்சை திணைக்களம் முன்பு திட்டமிட்டிருந்தது.
எனினும் வினாத்தாள்களை தயாரித்த பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் கட்டுப்பாட்டு விடைதாள் திருத்தும் பணிகளில் ஈடுபட மறுப்புத் தெரிவித்தமையினால் உயர்தர விடைத்தாள் மதிப்பீட்டுக்கான இறுதி புள்ளிவழங்கும் தட்டத்தை தயாரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே குறித்த திகதியில் மதிப்பீட்டுப் பணிகளை மேற்கொள்ள முடியாது என பரீட்சை திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் எம்மிடம் தெரிவித்தார்.
அத்துடன் உயர்தரப் பரீட்சையின் 13 பாடங்கள் தொடர்பான நடைமுறைப் பரீட்சைகள் எதிர்வரும் நாட்களில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. அதற்கான மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பங்கள் 10 ஆம் திகதி முடிவடைந்தது. மதிப்பெண்கள் வழங்கும் செயல்முறை முடியும் வரை அந்த நடவடிக்கைகளும் ஒத்திவைக்கப்பட வேண்டும் எனவும் அதன்படி உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இம்முறையும் தாமதமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயர்தரப் பரீட்சை விடைத்தாள்கள் மதிப்பீடு செய்வதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக எதிர்காலத்தில் நடைபெறவிருந்த தேசியப் பரீட்சைகளும் பிற்போடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பரீட்சைத் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
2023 ஆண்டின் க.பொ.த சாதாரண தரப் பரிட்சை, உயர் தரப் பரீட்சை, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை என்பன திட்டமிடப்பட்ட திகதியில் இருந்து குறைந்தது 02 மாதங்களுக்கு பிற்போடப்படுவது தவிர்க்க முடியாது ஒன்றாக இருக்குமென பரிட்சை திணைக்கள உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.
දැනට පැවැත්වෙන පසුගිය වසරේ උසස් පෙළ විභාගයේ පිළිතුරු පත්රයේ ඇගයීම් කටයුතු ලබන 22 වැනිදා ආරම්භ වීමට නියමිතව තිබුණද නියමිත දිනට ඇගයීම් කටයුතු ආරම්භ නොවන බව දැනගන්නට ඇත.
විශ්වවිද්යාල ආචාර්යවරුන් පිළිතුරු පත්ර පාලන ඇගයීම් කටයුතු සහ පිළිතුරු පත්ර ඇගයීම් කටයුතු පිළිබඳ සාකච්ඡාව නොසලකා හැර ඇති බව වාර්තා වේ.
විශ්වවිද්යාල ආචාර්යවරුන්ගේ සංගමය විභාග දෙපාර්තමේන්තුවට දැනුම් දී ඇත්තේ මෙවර එම කටයුතුවලට තම සාමාජිකයින් සම්බන්ධ කර නොගන්නා බවයි. රජයේ නව බදු ප්රතිසංස්කරණවලට එරෙහිව විශ්වවිද්යාල නොවන සේවා සැපයීමේ කටයුතුවලින් ඈත්වීමට ඔවුන් තීරණය කර තිබේ.
රජය නව බදු ප්රතිපත්තිය හකුලා ගන්නා තුරු විභාග රාජකාරිවල නොයෙදෙන ලෙස ඔවුන් තම සාමාජිකයින්ට පවසා තිබේ.
2022 උසස් පෙළ විභාගය 17 වැනිදා අවසන් වේ. පිළිතුරු පත්ර ඇගයීම් කටයුතු ලබන 22 වැනිදා සිට ආරම්භ කිරීමට විභාග දෙපාර්තමේන්තුව මීට පෙර සැලසුම් කර තිබුණි.
කෙසේ වෙතත් ප්රශ්න පත්ර සකස් කළ විශ්වවිද්යාල ආචාර්යවරුන් පාලන පිළිතුරු පත්ර සංස්කරණය කිරීමේ කාර්යයේ නිරත වීම ප්රතික්ෂේප කිරීම හේතුවෙන් පිළිතුරු පත්ර ඇගයීම සඳහා අවසන් ලකුණු පත්රය සකස් කිරීමට නොහැකි වී ඇත. එබැවින් නියමිත දිනට ඇගයීම් කටයුතු සිදු කළ නොහැකි බවයි විභාග දෙපාර්තමේන්තුවේ උසස් නිලධාරියෙකු කියා සිටියේ.
එමෙන්ම උසස් පෙළ විභාගයේ විෂයන් 13කට අදාළ ප්රායෝගික පරීක්ෂණ ඉදිරි දිනවලදී පැවැත්වීමට නියමිතව තිබුණි. මේ සඳහා අයදුම්පත් භාරගැනීම පසුගිය 10 වැනිදායින් අවසන් විය. පිළිතුරු පත්ර ඇගයීම සඳහා අවසන් ලකුණු පත්රය සකස් කිරීම අවසන් වනතුරු එම කටයුතු ද කල් දැමිය යුතු බවත් ඒ අනුව මෙවරද උසස් පෙළ විභාගයේ ප්රතිඵල නිකුත් කිරීම ප්රමාද වන බවත් දන්වා ඇත.
උසස් පෙළ විභාග පිළිතුරු පත්ර ඇගයීමේ ප්රමාදය ඉදිරි සියලුම ජාතික විභාග කල් දැමීමට හේතුවක් වනු ඇති බව විභාග දෙපාර්තමේන්තුවේ ආරංචි මාර්ග සඳහන් කරමින් නෙත් නියුස් වාර්තා කරයි .
මේ වසරේ පැවැත්වීමට නියමිත ව තිබූ සියලු විභාග අවම වශයෙන් මාස 02ක්වත් ප්රමාද වීම වැළැක්විය නොහැකි බව විභාග දෙපාර්තමේන්තුවේ උසස් නිලධාරියෙක් පැවසූ බව නෙත් නියුස් වාර්තා කරයි .