தேசிய கல்வியியல் கல்லூரிகளின் 2018/2020 குழுவினரின் இறுதிப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் 355 பேர் சித்தியடையத் தவறியுள்ளனர்.
இதில் 313 பேர் Referred ஆகவும் 42 பேர் fail ஆகவும் இறுதிப் பெறுபேற்றைப் பெற்றுள்ளனர்.
வவுனியா தேசிய கல்வியியல் கல்லூரியில் 6 Referred பதிவாகியுள்ள அதேவேளை, சிரிபாத கல்லூரியில் 19 Referred பதிவாகியுள்ளது.
அட்டாளைச்சேனையில் 2 Referred வும் 1 fail வும் பதிவாகியுள்ளதோடு, வவுனியா கல்லூரியில் 4 Referred பதிவாகியுள்ளது.
யாழ்ப்பாண கல்லூரியில் Referred எண்ணிக்கை 30 ஆகவும் தர்காநகர் கல்லூரியில் Referred எண்ணிக்கை 3 ஆகவும் 1 fail வும் பதிவாகியுள்ளது. மட்டக்களப்பு தேசிய கல்வியியல் கல்லூரியியல் 4 Referred பதிவாகியுள்ளது.
மட்டக்களப்பு, தர்கா நகர் தேசிய கல்வியியல் கல்லூரிகளின் பெறுபேறுகளின் சுருக்கத்தைப் பார்ப்போம்.
மட்டக்களப்பு தேசிய கல்வியியல் கல்லூரி பெறுபேறுகள்
2018 /2020 கல்வியாண்டில் மட்டக்களப்பு தேசிய கல்வியற் கல்லூரி ஆசிரிய பயிலுனர்கள் இறுதிப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளனர்.
352 ஆசிரியப் பயிலுனர்கள் இறுதிப் பரீட்சைக்குத் தோற்றிய நிலையில்,
- 07 ஆசிரிய பயிலுனர்கள் (Distinction) அதிவிசேட சித்தி பெற்றுள்ளனர்.
- 271 ஆசிரிய பயிலுனர்கள் (Credits ) விஷேட சித்தி பெற்றுள்ளனர்.
- 70 பயிலுனர்கள் சாதாரண சித்தி பெற்றுள்ளனர்
- 4 பேர் ஒரு பாடத்தில் சித்திபெறத் தவறியுள்ளனர்.
அதிவிஷேட சித்தி பெற்ற பயிலுனர்களின் பெயர்கள் பின்வருமாறு:
வடிவமைப்பு நிர்மாணத் தொழிநுட்ப பிரிவு
1. தியாகராஜா நிசாந்தன்
விஞ்ஞானப் பிரிவு
1.மொகிடீன் ஜீனத் பானு
2.மீராலெப்பை சீபா ஸனா
3.தாவூர் ஜேம்ஸ் றூத் சௌமி
சமூக விஞ்ஞான பிரிவு
1.முஹம்மத் சிஹார்டீன் பாதிமா ஸப்னா
2.கோபாலசிங்கம் கோகிலவேணி
3.அஹ்மத் ஹஸன் பாதிமா ஆமிலா
மேற்படி அடைவுமட்டத்துக்குப் பாடுபட்ட உப-பீடாதிபதிகள், இணைப்பாளர்கள், விரிவுரையாளர்கள் ஆகியோருக்கு நன்றிகளை தெரிவிப்பதோடு சித்தியடைந்த அனைத்துப் பயிலுனர்களுக்கும் கல்லூரியின் பீடாதிபதி த.கணேசரத்தினம் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
தர்காதகர் தேசிய கல்வியியல் கல்லூரி பெறுபேறுகள்
234 பேர் தோற்றிய இறுதிப் பரீட்சையில் 4 பேர் தவிர அனைவரும் சித்திபெற்றுள்ளனர்.
இதில் 2 மாணவர்கள் அதி விசேட சித்தி (Distinction) பெற்றுள்ளதோடு 200 மாணவர்கள் விசேட சித்தி (Credit) பெற்றுள்ளனர். 28 மாணவர்கள் சாதாரண சித்தியைப் பெற்றுள்ளனர்.
அதி விசேட சித்தி பெற்றவர்கள் (Distinction)
ஆரம்பக் கல்வித் துறை – அபூபக்கர் அறபா
மனைப் பொருளியல் பாடநெறியில் – மாடசாமி றிஷ்வினி
அனைவருக்கும் வாழ்த்துக்கள்