கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான விடைத்தாள் மதிப்பீட்டுச் செயல்முறையை அடுத்த சில நாட்களுக்குள் தொடங்க வாய்ப்புள்ளதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு (FUTA) தெரிவித்துள்ளது.
இது தொடர்பான இறுதி முடிவு அடுத்த சில நாட்களில் சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களினதும் பங்குபற்றுதலுடனான கலந்துரையாடலின் பின்னர் எடுக்கப்படும் என FUTA இன் செய்தித் தொடர்பாளர் விளக்கினார்.
இதுவரையில் தமது கோரிக்கைகளுக்கு அரசாங்கத்திடம் இருந்து சாதகமான பதில் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, அகில இலங்கை ஆசிரியர் சங்கத்தின் (AITU) தலைவர் வண. யல்வெல பன்யசேகர தேரர், பல்கலைக்கழக விரிவுரையாளர்களை கூடிய விரைவில் சந்தித்து விடைத்தாள் மதிப்பீட்டுச் செயல்முறை குறித்து கலந்துரையாடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
நேற்று (18) நடைபெற்ற மாநாட்டில் உரையாற்றிய கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளுக்கான கொடுப்பனவு 90 வீதம் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் விரைவில் சாதகமான முடிவை எடுப்பார்கள் என நம்பிக்கை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
අධ්යාපන සාමාන්ය උසස් පෙළ විභාගයේ පිළිතුරු පත්රය ඇගයීමේ කටයුතු ඉදිරි දින කිහිපය තුළ ආරම්භ කිරීමට ඉඩ ඇති බව විශ්වවිද්යාල ආචාර්යවරුන්ගේ සමිති සම්මේලනය පවසයි.
සංගමයේ සියලුම සාමාජිකයින්ගේ සහභාගීත්වයෙන් පැවැත්වෙන සාකච්ඡාවකින් අනතුරුව ඉදිරි දින කිහිපය තුළ මේ සම්බන්ධයෙන් අවසන් තීරණය ගැනීමට නියමිත බව FUTA ප්රකාශකයා පැහැදිලි කළා.
තම ඉල්ලීම් සඳහා රජයෙන් යහපත් ප්රතිචාරයක් මේ වන විට ලැබී ඇති බවද ඔහු සඳහන් කළේය.
මේ අතර, සමස්ත ශ්රී ලංකා ගුරු සංගමයේ (AITU) සභාපති යාල්වේල පඤ්ඤාසේකර හිමියෝ පිළිතුරු පත්ර ඇගයීම් ක්රියාවලිය පිළිබඳව සාකච්ඡා කිරීම සඳහා හැකි ඉක්මනින් විශ්වවිද්යාල ආචාර්යවරුන් හමුවීමට කටයුතු කරමින් සිටින බව පැවසූහ.
ඊයේ (18) පැවති සම්මන්ත්රණයකට එක්වෙමින් අධ්යාපන අමාත්ය සුසිල් ප්රේමජයන්ත මහතා ප්රකාශ කළේ විශ්වවිද්යාල ආචාර්යවරුන්ගේ ඉල්ලීම් මත ප්රශ්න පත්ර සලකුණු කිරීමේ ක්රියාවලිය සඳහා 90%කට වඩා වැඩි ප්රමාණයකින් වැටුප් වැඩි කළ බව හෙළි කරමින් නුදුරේදීම විශ්වවිද්යාල ආචාර්යවරුන් මේ සම්බන්ධයෙන් යහපත් තීරණයකට එළැඹෙනු ඇති බවයි.