2022 A Level Controlling Examiners meeting today
2022 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீடு தொடர்பான கட்டுப்பாட்டுப் மதிப்பீட்டாளர்களின் கூட்டம் இன்று (24) பரீட்சை திணைக்களத்தில் இடம்பெறவுள்ளது.
10 பாடங்கள் தொடர்பான விடைத்தாள்கள் மதிப்பீட்டு பணியை ஆரம்ப கட்டம் குறித்து இங்கு கலந்துரையாடப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.
இந்து, கிறிஸ்தவம், இந்து நாகரிகம், கலை, இந்திய நடனம், கீழைத்தேய இசை, கர்நாடக இசை, மேற்கத்திய இசை, நாடகமும் அரங்கியலும் மற்றும் ஹிந்தி ஆகிய பாடங்கள் தொடர்பான விடைத்தாள்கள் திருத்தும் நடவடிக்கைகள் முதலில் ஆரம்பிக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
ஏனைய பாடங்களுக்கான விடைத்தாள்களை மதிப்பீடு செய்தல் இந்த வாரத்தில் ஆரம்பிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீடு செய்வது தொடர்பில் எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பதற்காக செயற்குழு கூட்டம் நாளை நடைபெறவுள்ளதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
தங்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கினால் மிகக் குறுகிய காலத்தில் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளை முடிக்க முடியும் என அதன் தலைவர் பேராசிரியர் ஷியாம பன்னஹக்க தெரிவித்தார்.
எவ்வாறாயினும், 2022 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சையின் மதிப்பீடுகள் தொடர்பான கொடுப்பனவுகள் இன்னும் பலருக்கு கிடைக்கவில்லை என பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனத்தின் தலைவர் பேராசிரியர் ஷியாம பன்னஹக்க தெரிவித்துள்ளார்.
2022 උසස් පෙළ විභාගයේ පිළිතුරු පත්ර ඇඟයිම හා සම්බන්ධ පාලක පරීක්ෂකවරුන්ගේ රැස්වීමක් අද (24) විභාග දෙපාර්තමේන්තුවේ දී පැවැත්වෙනවා.
විෂයන් 10කට අදාළ පිළිතුරු පත් ඇඟයීමේ මූලික අදියර කඩිනමින් ආරම්භ කිරීම සම්බන්ධයෙන් මෙහි දී සාකච්ඡා කිරීමට නියමිත බවයි විභාග කොමසාරිස් ජනරාල් අමිත් ජයසුන්දර සඳහන් කළේ.
හින්දු ධර්මය, ක්රිස්තියානි ධර්මය, හින්දු ශිෂ්ඨාචාරය, චිත්ර කලාව, භරත නර්තනය, පෙරදිග සංගීතය, කර්නාටක සංගීතය, බටහිර සංගීතය, නාට්ය හා රංග කලාව සහ හින්දි යන විෂයන්ට අදාළ පිළිතුරු පත් ඇඟයීමේ කටයුතු එලෙස පළමුව ආරම්භ කරන බවයි වාර්තා වන්නේ.
සෙසු විෂයන් හි පිළිතුරු පත් ඇඟයීමේ කටයුතු ද මෙම සතිය තුළ දී ආරම්භ කිරීමට අවශ්ය පියවර ගනිමින් සිටින බවද විභාග කොමසාරිස් ජනරාල්වරයා වැඩිදුරටත් සඳහන් කළා.
මේ අතර උසස් පෙළ විභාගයේ පිළිතුරුපත් ඇගයීම් සම්බන්ධයෙන් ගනු ලබන ඉදිරි ක්රියාමාර්ග පිළිබඳ සාකච්ඡා කිරීම සඳහා හෙට විධායක සභා රැස්වීමක් පැවැත්වෙන බව විශ්වවිද්යාල ආචාර්යවරුන්ගේ සමිති සම්මේලනය ප්රකාශ කළා.
එහි සභාපති මහාචාර්ය ශ්යාම බන්නැහැක කියා සිටියේ සිය ගැටලුවලට විසඳුම් ලබාදෙන්නේ නම් ඉතා කෙටි කාලයක් තුළ පිළිතුරු පත්ර ඇගයීම් කටයුතු අවසන් කිරීමට හැකියාව පවතින බවයි.
කෙසේවෙතත් විශ්වවිද්යාල ආචාර්යවරුන්ගේ සමිති සම්මේලනයේ සභාපති මහාචාර්ය ශ්යාම බන්නැහැක කියා සිටියේ 2022 උසස් පෙළ විභාගයේ ඇගයීම්වලට අදාළ ගෙවීම් ද බොහෝ පිරිසකට තවමත් ලැබී නොමැති බවයි.