Name list of Diploma Holders has sent to provinces
தேசிய கல்வியியல் கல்லூரி டிப்ளோமாதாரிகளின் நியமனப் பட்டியல் மாகாணங்களுக்கு அனுப்பி வைப்பு
தேசிய கல்வியியல் கல்லூரிகளின் டிப்ளோமாதாரிகளுக்கான நியனமங்களை ஜுன் 15 ஆம் திகதியளவில் வழங்குவதற்கு கல்வி அமைச்சு உறுதியான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மாகாணப் பாடசாலைகளில் நியமிக்கப்படவுள்ள டிப்ளோமாதாரிகளின் பெயர் பட்டியலை கல்வி அமைச்சு குறிப்பிட்ட மாகாணங்களுக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் கல்வி அமைச்சின் உயர் அதிகாரி எம்மிடம் தெரிவித்தார்.
குறிப்பிட்ட மாகாணங்கள் பட்டியலில் உள்ள டிப்ளோமாதாரிகளுக்கான நியமனங்களை வழங்குவதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எனவும் அவர் குறிப்பிட்டார். அதே போல் தேசிய பாடசாலைகளுக்கு நியமிக்கப்படவுள்ள டிப்ளோமாதாரிகளுக்கான நியமனக் கடிதத்தை வழங்குவதற்கான நடவடிக்கைகளை கல்வி அமைச்சு மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வடக்கு மாகாணத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ள பெயர் பட்டியலை வெளியிட்டுள்ள போதிலும் ஏனைய மாகாணங்கள் அவ்வாறு பெயர் பட்டியலை பகிரங்கமாக வெளியிடும் என உறுதியாக கூற முடியாது. அவர்கள் குறிப்பிட்ட நியமனம் பெறவுள்ளவர்களுக்கு மாத்திரம் அறியப்படுத்துவதற்கு மாற்றுவழிகளைக் கையாளக் கூடும் எனவும் அவர் தெரிவித்தார்.
வடக்கு மாகாணத்திற்கு நியமிக்கப்படவுள்ள டிப்ளோமாதாரிகளின் பெயர் விபரங்களை பெற்றுக் கொள்ளுங்கள்.
ජාතික අධ්යාපන විද්යාපීඨ ඩිප්ලෝමාධාරීන්ගේ නාම ලැයිස්තුව පළාත්වලට යැවීම
ජාතික අධ්යාපන විද්යාපීඨවල ඩිප්ලෝමා සිසුන් සඳහා ජුනි මස 15 වැනිදා වන විට පත්වීම් ලබාදීමට අධ්යාපන අමාත්යාංශය දැඩි පියවර ගනිමින් සිටින බව උසස් නිලධාරියෙක් පැවසීය.
අධ්යාපන අමාත්යාංශය විසින් පළාත් පාසල්වලට පත් කිරීමට නියමිත ඩිප්ලෝමා සිසුන්ගේ නාම ලේඛනය පළාත්වලට යවා ඇති බවද අධ්යාපන අමාත්යාංශයේ ජ්යෙෂ්ඨ නිලධාරියෙක් අප වෙත පැවසීය.
පලාත් අධ්යාපන දෙපාර්තෙම්න්තුව ලැයිස්තුවේ නම් සදහන් ඩිප්ලෝමාධාරීන්ට පත්වීම් ලබාදීමට මූලික පියවර ගන්නා බවද ඔහු සඳහන් කළේය. ජාතික පාසල් සඳහා පත්වීම් ලබන ඩිප්ලෝමා සිසුන් සඳහා පත්වීම් ලිපිය නිකුත් කිරීමට අධ්යාපන අමාත්යාංශය කටයුතු කරමින් සිටින බවද ඔහු සඳහන් කළේය.
උතුරු පළාත සඳහා වූ නාම ලේඛනය මේ වන විට නිකුත් කර ඇතත් අනෙකුත් පළාත් එම ලැයිස්තුවම ප්රසිද්ධියේ නිකුත් කරනු ඇතැයි නිශ්චිතව කිව නොහැක. පත් කිරීමට නියමිත අයට පමණක් දැනුම් දීමට විකල්ප ක්රම භාවිත කළ හැකි බවද ඔහු දන්වා සිටියේය.
උතුරු පළාතට පත් කිරීමට නියමිත රාජ්ය තාන්ත්රික නිලධාරීන්ගේ නම් විස්තර ලබා ගන්න.