களுத்துறை மாவட்டத்தில் உள்ள பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து பாலியல் கல்வித் திட்டத்தை நடைமுறைப்படுத்த தயாராக உள்ளதாக களுத்துறை பிரதேச சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரசாஞ்சலி ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
இதுபோன்ற கல்வித் திட்டங்கள் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட வேண்டும் என்றும், குழந்தைகளுக்கான பாலியல் சுகாதாரக் கல்வி குறித்த குறைந்தபட்ச அறிவை வளர்க்க சுகாதாரத் துறை மற்றும் கல்வித் துறைகள் தலையிட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பான கலந்துரையாடல் தற்போது இடம்பெற்று வருவதுடன், 15-18 வயதுக்கு இடைப்பட்ட பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
எதிர்வரும் ஜூன் மாதம் முதல் இந்த நிகழ்ச்சித் தொடரை ஆரம்பிக்க முடியும் எனவும், இது தொடர்பில் பல சுற்று கலந்துரையாடல்களை மேற்கொண்டதன் பின்னரே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
මෙවැනි අධ්යාපනික වැඩසටහන් රට පුරා ක්රියාත්මක කළයුතු බවත් දරුවන්ට ලිංගික සෞඛ්ය අධ්යාපන පිළිබඳව පවතින අවම දැනුම වර්ධනයට සෞඛ්ය අංශය හා අධ්යාපන අංශයන් මැදිහත් විය යුතු බවත් ඇය සඳහන් කළාය.
මේ සම්බන්ධයෙන් මේ වන විට සාකච්ඡාවක් පැවැත්වෙන අතර වයස අවුරුදු 15-18 අතර පාසල් සිසුන් ඉලක්ක කර ගනිමින් මෙම වැඩසටහන ක්රියාත්මකය.
මෙම වැඩසටහන් මාලාව ලබන ජූනි මාසයේ සිට ඇරඹීමට හැකි බවත් ඒ සම්බන්ධයෙන් සාකච්ඡා වට කිහිපයක් පැවැත්වූ පසු මෙම තීරණය ගනු ලැබූ බවත් ඇය පැවසුවාය.