உலகவரலாறுகளில் கல்வி எப்போதும் சமத்துவமாகஇருந்ததில்லை. உயர் சமூக அடுக்கமைவுகளைச்சார்ந்தோருக்கும், மதரீதியாகவும், இனரீதியுமாகவே கல்வி வழங்கப்பட்டு வந்துஇருக்கின்றது. குருகுலக்காலத்தில் சாதாரண மக்களுக்கு கல்விஎன்பது எப்போதும் விலக்களிக்கப்பட்டது தான். இலங்கையிலே கலாநிதி கன்னங்கராவினால் கொண்டுவரப்பட்டகல்வி மறுசிரமைப்புக்கள் கல்வியினை சமத்துவமாக அனைவருக்கும்வழங்குவதற்கு மேற்கொள்ளப்பட்ட மிக முக்கியமான நடவடிக்கையாகக்கருதப்படுகின்றது. சமத்துவம் என்பது அளவுக்குஏற்பவோ, தாக்கத்திற்கு ஏற்பவோ, பெறுமானத்திற்கு ஏற்பவோ, பதவிநிலைக்கு ஏற்பவோ பாகுபாடுகாட்டாமல் சமனாகமதித்தலைக் குறிக்கின்றது.
கல்வியிலே சமத்துவத்தை ஏற்படுத்தும்நோக்கிலேயே கலாநிதி கன்னங்கரா பாலர்முதல் பல்கலைக்கழகம் வரை அனைவருக்கும் இலவசக்கல்வியினை அறிமுகப்படுத்தினார். அதேபோல் ஆரம்பமட்டத்தில் தாய்மொழிக்கல்வி, விடுதிவசதிகளுடன் அமைந்த மத்திய மகாவித்தியாலயங்கள், சமயகல்வியை அறிமுகம் செய்தமை, ஆசிரியர்களுக்கானமாதச் சம்பளங்களை நிலையாக வழங்கியமை, கலைத்திட்டத்தையும்பரீட்சைகளையும் நாட்டுக்குரிய தாக்கியமை, தன்னாட்சியான பல்கலைக்கழகம் போன்ற முற்போக்கான சிந்தனைகளைஇலங்கையில் அறிமுகப்படுத்தினார். இதனாலேயே இலங்கையில்இன்றும் எழுத்தறிவு வீதம் உயர்வானதாகக் காணப்படுகிறது. ஆனபோதிலும் இலங்கையில் இலவசக் கல்வியினை அறிமுகப்படுத்தியிருக்காவிடின்நாடு விவசாய உற்பத்திகளிலாவது தன்னிறைவுபெற்றுஇருக்கும் என்று பொருளியலாளர்கள் கூறுவதும்நோக்கத்தக்கது.
இன்றைய நிலையில் கன்னங்கராவால்அறிமுகப்படுத்தப்பட்ட சில திட்டங்களுக்கு ஒப்பாகமேலும் சில சமத்துவத்தை வலியுறுத்தும்திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்படுகின்றன. கன்னங்கராவால்அறிமுகப்படுத்தப்பட்ட மத்திய மகா வித்தியாலயத்திட்டதிற்குஒப்பாக கிராமப்புற மாணவர்கள் உயர்தரத்தில் நகர்புறமாணவர்கள் போல் கல்வியைத் தொடர்வதற்காகஇசுறு பாடசாலைத்திட்டம், 1000 பாடசாலைத்திட்டம், அண்மையிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலைத்திட்டம்போன்ற திட்டங்கள் ஒவ்வொருபிரதேச செயலக மட்டத்திலும் அமுல்படுத்தப்படுகின்றன. அத் திட்டங்களில் தொழில்நுட்பஆய்வு கூடங்கள், கணிதஅறைகள், செயற்பாட்டுஅறைகள், ஆசிரியர் விடுதிகள் போன்றவைநகர கிராம வேறுபாடுகளின்றிஒரே அமைப்பில் மேற்கொள்ளுகின்றமைகுறிப்பிடத்தக்கது. இருந்தபோதும் ஆய்வுகூடங்களுக்கான உபகரணப் பகிர்வில் நகரகிராமப்புற பாடசாலைகளுக்கு இடையில் சமத்துவம் பேணப்படவில்லைஎன்பது சமத்துவத்தைப் பாதுகாப்பதற்கு அரசு எடுத்த நடவடிக்கையிலுள்ள குறைபாடுஆகும்.
தரம் ஐந்து மாணவர்களுக்குபுலமைப்பரிசில் வழங்குதல் ஊடாக வறியமாணவர்களுக்கு சிறந்த கல்வி வாய்ப்புக்களைவழங்குவதற்கும் சிறந்த இடைநிலைப் பாடசாலைகளைதெரிவு செய்வதற்காகவும் புலமைப்பரிசில் பரீட்சையினை நடாத்துவதன் மூலம் புலமைப்பரிசில் வழங்குவதற்குஅரசு எடுத்த நடவடிக்கை கல்வியைச்சமத்துவப்படுத்த எடுத்த நடவடிக்கை என்பதிலும்பார்க்க கல்வியில் ஒப்புரவை ஏற்படுத்தமேற்கொண்ட நடவடிக்கையாகவே கொள்ளலாம். இருந்தபோதிலும் இன்று தரம் ஐந்துபுலமைப்பரிசில் பரீட்சையானது மாணவர்களுடைய பெற்றோருக்கு ஒரு கௌரவப் பரீட்சையாகவுள்ளது. அதற்காகப் பெருமளவு நிதியினைப் பெற்றோர்செலவு செய்கின்றனர். வறிய மாணவரின் கல்விக்குநிதியளிப்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட பரீட்சை இன்று அதன்நோக்கத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது. அதேவேளை இன்றைய சூழலில்அரச நிறுவனங்களே மாணவர்களுக்குஇணையவழிக் கல்வியினை வழங்குதல் மூலம்பரீட்சைக்கு தயார்படுத்துதல் என்பது கல்வியில் சமத்துவம்பற்றிய சிந்தனைகளுக்கு எதிர்மறையானது.
இலவசப்பாடநூல், இலவசப்புத்தகம் என்பனவும் கல்வியினை சமத்துவமாகவழங்குவதற்கு அரசு எடுத்த நடவடிக்கைகளாகும். இருந்தபோதும் இலவசப் பாடநூல்கள் இன்றுபல பின்தங்கிய பிரதேசப்பாடசாலைகளுக்கு உரிய நேரத்தில் கிடைப்பதில்லை. இதேநேரம் தேசிய கல்வி நிறுவகம், கல்வி வெளியீட்டுத் திணைக்களம் போன்றவை வெளியிடுகின்ற வளநூல்கள், மொழிபெயர்ப்பு நூல்கள், பாடச்செயற்பாட்டுப் புத்தகங்கள்போன்றவைகளில் சிங்கள மொழியில் வெளியிடப்படும்நூல்களின் எண்ணிக்கைக்கும் தமிழ் மொழியில் வெளியிடப்படும்நூல்களின் எண்ணிக்கைக்கும் இடையில் வேறுபாடுகள் உள்ளன. இவையும் கல்வியில் சமத்துவத்தை ஏற்படுத்துவதில்உள்ள குறைபாடுகள் ஆகும். இதேநேரம் தமிழ்மொழிமூலமான பாட நூல்களில் மொழிபெயர்ப்பில் உள்ள தவறுகளும் வரலாற்றுப்பாடத்தில் அனைத்து இன வரலாறுகளும்சேர்க்கப்படவில்லை என்கின்ற விமர்சனமும் நோக்கத்தக்கது.
கற்றல் குறைபாடு, விசேடதேவைகளுடைய பிள்ளைகளுக்கு கற்றலுக்கான போதிய வசதிகள் இன்மைஎன்பது கல்வியைச் சமத்துவப்படுத்துவதில் உள்ளகுறைபாடு ஆகும். அதேபோல் போரின்தாக்கம் காரணமாக வடகிழக்கு மாகாணங்களில்பல ஆயிரக்கணக்கான மாணவர்கள்கற்றலில் பின்தங்கியுள்ளனர். அரசு இப் பிரதேசங்களுக்குமேலதீக நிதியினை ஒதுக்கி விசேட செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்துவதன்ஊடாக கல்வியில் ஒப்புரவுக் கொள்கையினைஏற்படுத்துவதன் மூலம் சமத்துவத்தை ஏற்படுத்தஅரசு முயற்சிக்கவில்லை. இதேவேளை சில புலம்பெயர்ந்தஅமைப்புக்கள், மற்றும் தனிநபர்கள் அதற்கானவசதிகளை வழங்க முன்வந்தாலும் அவர்களில்சிலர் அதன் மூலம் கல்விஅதிகாரிகளின் சுயாதீனத்தை முடக்குவதற்கு மறைமுகமாக முயற்சிக்கின்றார்கள். அதேவேளைகல்வியில் சமத்துவத்தை ஏற்படுத்துதல் பற்றிச் சிந்திக்காமல் பரீட்சைப்பெறுபேறுகளை உயர்த்துதல் தொடர்பாக மாத்திரம் சிந்திப்பவர்களாகவேகாணப்படுகின்றனர். இவர்களின் நோக்கம் சிந்தனைக்குரியதாகவேகாணப்படுகின்றது.
இன்றைய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டமாணவர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் சுரஸ்ச காப்புறுதியானதுசமத்துவத்தை ஏற்படுத்த மேற்கொண்ட திட்டமாகவேகருதப்படுகின்றது. ஆனபோதிலும் இது மருத்துவத்துறையை தனியார்மயப்படுத்துவதற்கு எடுத்த நடவடிக்கையாகவே சிலகல்வியாளர்களால் நோக்கப்படுகின்றது. மாணவர்களைத் தனியார் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெறுவதற்கு வழிசமைப்பதன் ஊடாகமருத்துவத்துறையினைத் தனியார் மயப்படுத்தும் சிந்தனையாகவேஇது கருதப்படுகின்றமை நோக்கத்தக்கது. இதேவேளை பின்தங்கிய பிரதேச மாணவர்களுக்கு வழங்கப்படும்மதியஉணவு, காலணிகள் என்பவை கல்வியினைஒப்புரவுக் கொள்கையூடாகச் சமத்துவத்தை ஏற்படுத்த மேற்கொள்ளப்படும்நடவடிக்கையாகக் கொள்ளலாம். இவை போன்ற முற்போக்கானதிட்டங்கள் வரவேற்கப்பட வேண்டியவை.
அதேவேளை பாடசாலைகளுக்கு இடையிலானஆசிரியர் பங்கீடு என்பது கல்வியினைச்சமத்துவத்தை ஏற்படுத்துவதில் உள்ள சவாலான விடயம்ஆகும். குறித்த ஒரு ஆசிரியர்ஒரு வார வேளையில்குறைந்தது 20 மணித்தியாலம் கற்பித்தலில் ஈடுபடவேண்டும் என கூறப்பட்டுள்ளபோதும் கிராம நகரப்புற ஆசிரியர்பரப்பலுக்கு ஏற்ப இது வேறுபடுகின்றது. பின்தங்கிய பிரதேசங்களில் உள்ள மாணவர்களுக்கு கல்விகற்பிப்பதற்கு ஆசிரியர் பற்றாக்குறை பாடஅடிப்படையில் உள்ளமை சமத்துவத்தை ஏற்படுத்துவதிலுள்ளபிரதான குறைபாடு ஆகும். இதேவேளைபத்திரிகையில் வெளிவருகின்ற மணிவிழா வாழ்த்துக்களை நோக்கும்போது குறித்த ஆசிரியர்கள் 15, 20 வருடங்களாகஒரே பாடசாலையில் கற்பித்தநல்லாசிரியராகக் காணப்படுகின்றார். ஆசிரியர் இடமாற்றம் தொடர்பாகதேசியக் கொள்கை உள்ள போதும், அதனை நடைமுறைப்படுத்தாமை கல்வியில் சமத்துவத்தை ஏற்படுத்துவதிலுள்ளமிகப் பெரிய குறைபாடு ஆகும்.
அதேவேளை மாணவர்கள் ஒவ்வொருவரும்தனியாள் வேறுபாடுகளைக் கொண்டவர்கள் அவர்களின் ஒவ்வொருவரும் வேறுவேறானகற்றல் பாங்குகளைக் கொண்டு இருப்பார்கள். ஆனால்பாடசாலைகளில் பெரும்பாலும் ஒரே முறையிலான கற்பித்தல்முறைகளையே பயன்படுத்துகின்றனர். இதனால் வேறு வேறுகற்றல் பாங்குளைக் கொண்ட மாணவர்கள் கற்றலில்பின்தங்குகின்றார்கள் இன்றைய கற்பித்தல் முறைகளும்கல்வியில் சமத்துவத்தைப் பாதிக்கின்றது. பன்முகநுண்மதிக் கொள்கையினை வெளியிட்ட காடினரின் கருத்துப்படிஅவர் எட்டு வகையான கற்றல்பாங்குகளை அறிமுகம் செய்கின்றார். அதன்அடிப்படையில் ஆசிரியர் தனது கற்பித்தலில்பன்முகநுண்மதிக் கொள்கையினைப் பயன்படுத்துவதன் மூலம்சமத்துவத்தை ஓரளவு பேணலாம்.
அதேசமயம் பொது மீத்திறன்என்ற எண்ணக்கருவை நீக்கி ஒவ்வொரு மாணவரின்உட்பொதிந்துள்ள தனித்துவ மீத்திறனை வளர்ப்பதற்குரியசெயற்பாடுகள் பாடசாலைகளில் மேற்கொள்ள வேண்டும். அத்தோடுபரீட்சை முறையிலுள்ள தவறுகளை வைத்துக் கொண்டுமாணவரை விலத்தும் செயன்முறையைத் தவிர்ப்பதுவும்முக்கியமானது.
இதேசமயம் கல்வியில் தனியார்கல்விநிலையங்களின் ஆதிக்கம், நிதிவசதியுடையவர்கள் வெளிநாட்டுப்பல்கலைக்கழகங்களில் கல்வி கற்பதற்கான வாய்ப்புக்கள்,அனுமதி பெறாத தனியார்பல்கலைக்கழகங்கள், அரச பல்கலைக்கழகம் செல்வதற்கானஅனுமதிகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமை, கல்விக் கொள்கைகள் அரசாங்கம்மாறும் போது மாற்றமடைதல் போன்றபல்வேறு காரணிகள் கல்வி சமத்துவமாக இல்லைஎன்பதற்கான ஆதாரங்கள் ஆகும்.
எதுஎவ்வாறு இருப்பினும் இலங்கையில் கல்வியில் சமத்துவத்தை ஏற்படுத்துவதற்கானபல திட்டங்கள் கொண்டுவரப்பட்டாலும் அதனை நடைமுறைப்படுத்தவதில் சமத்துவம்பேணப்படவில்லை. தனியே சமத்துவம் இலவசப்பாட நூல், இலவசச்சிருடை, இலவசக் கல்வியுடன் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டதாக இருப்பதால் கல்விசமத்துவமானது என்று கூறமுடியாது. அடித்தட்டுமக்கள் ஒதுக்கப்பட்ட மக்களின் வசதி வாய்ப்புக்களில்மாற்றம் ஏற்படாதவரையில் அல்லது மாற்றம் ஏற்படுத்தமுயற்சிக்காத வரையில் சமத்துவம் என்பதுசாத்தியம் அற்றது சமத்துவம் அற்றகல்விக்கட்டமைப்பை வைத்துக் கொண்ட வேறுவேறான தனித் தனி மாணவர்களைஒப்பிடுதல் தவறானது ஒவ்வொரு மாணவர்களும்வேறு வேறானவர்கள் அவர்களை ஒப்பிடுதல் தவறானதுஎன்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும். இவைஎல்லாவற்றுக்கும் மேலாக பின் நவீனசிந்தனையாளர்போலோ பிறைறியின் புகழ் பெற்ற கூற்றான கல்வி என்றும் நடுநிலையானது அல்ல ஆசிரியர்களும் நடுநிலையானவர் அல்ல என்ற கூற்றைநோக்குதல் சாலப் பொருத்தமானது
இராமச்சந்திரன் நிர்மலன்
புற்றளை