Sajith requests the officials to postpone the GCE A/L
உயர்தரத்தை ஒத்திவைக்குமாறு சஜித் அதிகாரிகளிடம் கோரிக்கை
எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையை ஒத்திவைப்பதன் மூலம் மாணவர்களுக்கு ஏற்படும் அநீதியைத் தடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் திரு.சஜித் பிரேமதாச வலியுறுத்துகின்றார்.
ஆட்சியாளர்களின் தோல்வியை மறைக்க உயர்தர மாணவர்களின் எதிர்காலத்தை பலிகடா ஆக்குவதை நிறுத்துமாறு அவர் விடுத்துள்ள அறிவிப்பிலேயே எதிர்க்கட்சித் தலைவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அதில், இந்த ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர் மாணவர்களின் உரிமைகள் மற்றும் நடைமுறை நிலைமைகளைப் புறக்கணித்து பரீட்சை திணைக்களம் செயற்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
கல்வி அதிகாரிகள் தமது நிர்வாக அட்டவணைகளை வெற்றியடையச் செய்ய வேண்டும் என்ற இலக்குடன் செயற்பட்டு வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
2022 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகாததன் பின்னணியில் இவ்வருட உயர்தரப் பரீட்சையை எதிர்வரும் நவம்பர் மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளமையினால் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவர்.
அத்தோடு பரீட்சைக்கு தயாராகும் மாணவர்களுக்கு நவம்பர் மாதம் பரீட்சைக்கான திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளமையால் இரண்டு மாதங்களுக்கும் குறைவான காலப்பகுதியே உள்ளதாக திரு.சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.
பாடங்களை மாற்றி மீண்டும் பரீட்சைக்கு தோற்றும் பிள்ளைகளுக்கு இந்த இரு மாத காலம் போதுமானதல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் சில மாணவர்களின் பல்கலைக்கழக கனவு மங்கலாகிவிடும் என எதிர்க்கட்சித் தலைவர் திரு.சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார்.
උසස් පෙළ කල්දමන්නැයි සජිත් බලධාරීන්ගෙන් ඉල්ලයි
එළැඹෙන නොවැම්බර් මාසයේ දී පැවැත්වීමට නියමිත අධ්යයන පොදු සහතික පත්ර උසස් පෙළ විභාගය කල්දමා දරුවන්ට සිදුවන අසාධාරණය වළක්වාලීමට කටයුතු කරන ලෙස විපක්ෂනායක සජිත් ප්රේමදාස මහතා අවධාරණය කරයි.
පාලකයන්ගේ අසමත්භාවය වසා ගැනීමට උසස් පෙළ සිසුන්ගේ අනාගතය බිලිදීම නවතා දමනු යන මාතෘකාව යටතේ නිවේදනයක් නිකුත් කරමින් විපක්ෂනායකවරයා මේ බව සඳහන් කර තිබේ.
එහිදි ඔහු පෙන්වාදෙන්නේ මෙම වර්ෂයේ අධ්යයන පොදු සහතික පත්ර උසස් පෙළ සිසුන්ගේ අයිතිවාසිකම් සහ ප්රායෝගික තත්ත්වයන් නොසලකා හරිමින් විභාග දෙපාර්තමේන්තුව කටයුතු කරමින් සිටින බවය.
කෙසේ හෝ තම පරිපාලන කාලසටහන් සාර්ථක කරගැනීමේ මිලේඡ් අරමුණක අධ්යාපන බලධාරීන් කටයුතු කරමින් සිටින බවද විපක්ෂනායකවරයා සඳහන් කළේය.
2022 වසරේ උසස් පෙළ ප්රතිඵල නිකුත් කර නොමැති පසුබිමක මෙම වසරේ උසස් පෙළ විභාගය එළැඹෙන නොවැම්බර් මාසයේ දී පැවැත්වීමට සැලසුම් කිරීම හේතුවෙන් දරුවන්ට දැඩි ආසාධාරණයක් සිදුවන බවද විපක්ෂනායකවරයා පෙන්වාදෙයි.
නොවැම්බර් මාසයට විභාග දින නියම කිරීම හේතුවෙන් දෙවන වර විභාගයට සුදානම් වීමට සිටින දරුවන්ට ඒ සඳහා ඉතිරිව ඇත්තේ මාස දෙකකටත් වඩා අඩු කාලසීමාවක් බව සජිත් ප්රේමදාස මහතා සඳහන් කළේය.
එමෙන්ම විෂයන් වෙනස් කර යළිත් විභාගයට පෙනී සිටින දරුවන්ට මෙය කිසිසේත්ම ප්රමාණවත් කාලසීමාවක් නොවන බවද ඔහු සඳහන් කළේය.
මෙම තත්ත්වය තුළ ඇතැම් සිසුන්ගේ සරසවි සිහිනය ද බොදවනු ඇති බව විපක්ෂනායක සජිත් ප්රේමදාස මහතා පෙන්වාදෙයි.