சுமார் 4 ஆயிரம் கிராம உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பான பணிகள் தற்போது இறுதிக் கட்டத்தில் உள்ளதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக்க பிரியந்த தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் குறித்து ஆராய பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க தலைமையிலான குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டில் உள்ள 14 ஆயிரத்து 22 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளையும் டிஜிட்டல் மயமாக்கும் திட்டம் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கிராம அளவில் பொதுமக்களுக்கு சேவைகளை வழங்கும் கட்டமைப்பான கிராம உத்தியோகத்தர் பதவிகளில் அதிகளவில் வெற்றிடங்கள் நிலவுகின்ற காரணத்தால், மக்களுக்கான நலன்புரி சேவைகள் உட்பட பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதில் சிக்கல்கள் தோன்றியுள்ளன.
தரவரிசையைப் பொருட்படுத்தாமல் அரச சேவை சமநிலைப்படுத்தப்பட வேண்டும். அரசாங்கம், அரச சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதைக் கொள்கை ரீதியில் இடைநிறுத்தி இருந்தாலும், தற்போது வெற்றிடமாக உள்ள சுமார் நான்காயிரம் கிராம உத்தியோகத்தர் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக்க பிரியந்த தெரிவித்துள்ளார்.
පුරප්පාඩුව පවතින ග්රාම සේවා නිලධාරී තනතුරු 4000කට ආසන්න ප්රමාණයක් සඳහා නව බඳවාගැනීම් කඩිනමින් සිදුකිරීමට පියවර ගෙන ඇති බවයි ස්වදේශ කටයුතු රාජ්ය අමාත්ය අශෝක ප්රියන්ත පවසා සිටී.
‘ස්ථාවර රටකට සැවොම එක මඟකට’ මැයෙන් ඊයේ (07) ජනාධිපති මාධ්ය කේන්ද්රයේ පැවති ප්රවෘත්ති සාකච්ඡාවට එක්වෙමින් ඔහු මේ පිළිබඳව සඳහන් කර සිටියා.
රාජ්ය අමාත්යවරයා සඳහන් කර සිටින්නේ, අග්රාමාත්ය ලේකම් අනුර දිසානායක මහතාගේ ප්රධානත්වයෙන් සැදුම්ලත් කමිටුවක් ඒ සම්බන්ධයෙන් කටයුතු කිරීමට පත් කර ඇති බවය.
එමෙන් ම මෙරට ග්රාම සේවා වසම් 14,022ම ඩිජිටල්කරණය කිරීමේ e-GN වැඩසටහන මේ වන විටත් ආරම්භ කර ඇති අතර මෙරට ඇති ආර්ථික තත්ත්වය මෙන්ම තවත් සාධක කිහිපයක් මත රාජ්ය සේවයේ තුලනයක් සිදුවිය යුතුව පවතින අතර එය පැහැදිලිවම තරාතිරම නොබලා සිදුකළ යුතු බවයි අමාත්යවරයා වැඩිදුරටත් සඳහන් කර සිටියේ.