2023 க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் பிற்போடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
சபையில் உரையாற்றிய அமைச்சர், புதிய திகதி அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.
பரீட்சைகளை நடத்துவதற்கான திருத்தப்பட்ட திகதிகள் பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தினால் அறிவிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இது தொடர்பில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் அண்மையில் பாராளுமன்றத்தில் முன்வைத்த கவலைகளை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் குறிப்பிட்டார்.
பரீட்சைக்கு வரும் மாணவர்களுக்கான தயாராவதற்கான போதிய கால அவகாசம் இல்லாததும் முடிவெடுப்பதற்கான முக்கிய காரணியாகக் கருதப்படுவதாக அவர் மேலும் கூறினார்.
2023 க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் நவம்பர் 27 முதல் டிசம்பர் 21 வரை நடைபெறவிருந்தன.
2023 වසරේ පැවැත්වීමට නියමිතව තිබූ අ.පො.ස උසස් පෙළ විභාග කල් දමන බව අධ්යාපන අමාත්ය සුසිල් ප්රේමජයන්ත අද පාර්ලිමේන්තුවට දැනුම් දුන්නා.
සභාව අමතමින් අමාත්යවරයා ප්රකාශ කළේ නව දිනය ලබන සතියේ ප්රකාශයට පත් කරන බවයි.
විභාග පැවැත්වීමේ සංශෝධිත දිනයන් විභාග කොමසාරිස් ජනරාල්වරයා විසින් ප්රකාශයට පත් කරන බවද ඔහු වැඩිදුරටත් සඳහන් කළේය.
අධ්යාපන අමාත්යවරයා ප්රකාශ කළේ පසුගියදා පාර්ලිමේන්තුවේදී මේ සම්බන්ධයෙන් ආණ්ඩු පක්ෂයේ සහ විපක්ෂයේ මන්ත්රීවරුන් ඉදිරිපත් කළ කරුණු සලකා බැලීමෙන් අනතුරුව මෙම තීරණය ගෙන ඇති බවයි.
විභාගයට පෙනී සිටින සිසුන්ට සූදානම් වීමට කාලය ප්රමාණවත් නොවීම ද තීරණය ගැනීමට ප්රධාන සාධකයක් ලෙස සලකන බව ඔහු පැවසීය.
2023 අ.පො.ස උසස් පෙළ විභාග නොවැම්බර් 27 සිට දෙසැම්බර් 21 දක්වා පැවැත්වීමට නියමිතව තිබුණි.