கல்வியல் கல்லூரி அனுமதியில் தொகுதிப்பாடங்களின் செல்வாக்கு
கல்வியல் கல்லூரிக்கான அடிப்படைத்
தகைமைகளாக, க .பொ .த .(உ .த )ல் பிரதான 03 பாடங்களில் ஒரே தடவையில் சித்தியடைந்திருப்பதோடு,
க .பொ .த .(சா.த ) ல் இரண்டு அமர்வுகளுக்கு மேற்படாமல், ஊடக மொழி (தமிழ் /சிங்களம்) மற்றும் கணிதம் உள்ளடங்கலாக யாதேனும்
06 பாடங்கள் சித்தியடைந்திருக்க வேண்டும்.
அல்லது முதற் தடவையில் ஊடகமொழி, கணிதம் உட்பட யாதேனும் 05 பாடங்களில் சித்தியடைந்திருப்பதோடு அடுத்து வரும் தடவையில் ஏனைய தகைமைகளை பூரணப்படுதியிருக்க வேண்டும்.
இதேபோல், க .பொ .த .(சா.த )ல் தொகுதிப் பாடம் சார்பாக சில சிறப்பு தமைகளும் வேண்டப்படுகின்றன. அவை தொடர்பான அறிவை தூண்டுவதாகவே இவ்விளக்கம் அமைகிறது.
இங்கு தொகுதிப் பாடங்களின் தேவைப்பாடு கொண்ட கற்கை நெறிகளே முன்வைக்கப் படுவதோடு, தனித்து தொகுதிப்பாட தேவைப்பாடுகளை மட்டும் சுட்டிக்காட்டப்படுகின்றன.
01.சமூகவிஞ்ஞானம்
இப்பாடத்தினை தெரிவுசெய்ய தொகுதிப் பாடத்தில் குடியிருமைக்கல்வி /புவியியலில் திறமை சித்தி வேண்டப்படுகிறது. (அல்லது பிரதானபாடம் வரலாறு )
02.சித்திரம் :- சித்திரபாடத்தில் சித்தி
03.நாடகமும்அரங்கவியலும்
நாடகம் /நடனம் /சித்திரம் /சங்கீதம் ஆகிய வற்றில் ஏதாவது ஒன்றில் சித்தி.
04.வடிவமைப்புகட்டிடதொழில்நுட்பம்
நிர்மாண தொழில் நுட்பம் / இயந்திர தொழில் நுட்பம் / ஆக்கத்திறனும் தொழில் நுட்பவியலும். இதில் ஒரு பாடத்தில் சித்தி.
05.நடனம் (பரதம் ):- பரத நடனந்ததில் சித்தி
06.சங்கீதம் (கர்நாட):- கர்நாடக சங்கீதத்தில் சித்தி
07.இரண்டாம்மொழி (தமிழ் )
இரண்டாம் மொழி சிங்களத்தில் சித்தி (அல்லது அரசகரும மொழி சிங்களம் உயர்
பாடநெறி சித்தி / விருப்பத்திற்குரிய சிங்களம் சித்தி)
08.சங்கீதம் (மேற்கத்தேய ):- மேற்கத்தேய சங்கீதம் சித்தி.
09.தகவல்தொடர்பாடல்தொழில்நுட்பம்
(பிரதான ஆங்கில மொழியில் திறமை சித்தியுடன்) ஆங்கில இலக்கிய நயத்தில் சாதாரண சித்தி அல்லது தகவல் தொடரபாடல் தொழில் நுட்பத்தில் திறமை சித்தி.
10.தொழில்நுட்பகற்கை (கலையும் கைப்பணியும்)
கலையும் கைப்பணியும் / சிற்பக்கலையில் சித்தி.
மேற்கூறப்பட்ட தகைமைகள் தொகுதிப் பாடங்கள் சார்பானதே, இவற்றினை விடவும் சில தேவைப்பாடுகள் உண்டு.
மேலும் தரம் 10 தொகுதிப் பாடத்தேர்வின் முக்கியத்துவம் அறியவே இங்கு இவ்விளக்கம் தரப்பட்டது. இதனையும் கவனத்தில் எடுத்து தொகுதிப் பாடங்களை தேர்வு செய்தல் நன்று.
உங்கள்,
– சேரா –