K.t.Brownsen,
Career Guidance & Counselling,
(J/Aliyawalai C.C.T.M)
&
Assistant Lecturer
( Amazon College)
கொரோனாகால விடுமுறையை மாணவர்கள் பயனுள்ள முறையில் பயன்படுத்திக் கொள்வதற்கான அறிவூ ரீதியான வழிகாட்டல்களும் ஆலோசனைகளும்.
6. சிறுகுறிப்பு எழுதிக் கொள்வோம். தரம் 08 க்கு மேற்பட்ட மாணவர்கள் தினமும் கற்கும் விடயங்களை சிறுகுறிப்புகளாக எழுதிக்கொள்ள வேண்டும். சுயமாக வாசித்து, விளங்கி, சுருக்கத்தை எழுதிக்கொள்ள வேண்டும். சில பாடங்களை அட்டவணைகளாக வரைபுகளாக மாற்றி இலகுவில் நினைவில் வைத்துக்கொள்ள வழிசெய்யலாம்.
14. கல்வி ரீதியான மீளாய்வு செய்வோம் கடந்த தவணையில் நான் பெற்ற பெறுபேறுகள் எப்படி இருந்தன? அதில் திருப்தியாக அமைந்த பெறுபேறுகள் எவை? அதற்குக் காரணம் என்ன? அதில் பெறுபேறுகள் திருப்திகரமாக அமையாத பாடங்கள் எவை? அதற்கான காரணம் என்ன? அடுத்த பரீட்சையில் எப்படி அதனை நிவர்த்திக்கலாம்? என்று Survey – மீளாய்வு ஒன்றை செய்து நமது பலம் பலவீனங்களை அடையாளம் காணலாம்.
உடலையும் மனதையும் பாதிக்கும் திரைப்படங்களைத் தவிர்த்து நல்ல கருத்துள்ள குறுந் திரைப்படங்களைப் பார்வையிடலாம்.
22. பொருட்களை திருத்துவோம். நேரமின்மையால் பல பாவனைக்குதவாத பொருட்கள் வீடுகளில் களஞ்சிய அறையில் குவிக்கப்பட்டு இருக்கும். அவற்றில் உடைந்த மின்சாதனப் பொருட்களை திருத்துதல், சைக்கிள் முதலானவற்றை திருத்துதல் போன்ற காரியங்களில் ஈடுபடுவதோடு சில பொருட்களை மீள் சுழற்சி நிலையங்களுக்கு விற்பனை செய்யலாம்.
1.
வீடுகளை வகுப்பறையாக்குவோம். பாடசாலைகள் மூடப்பட்டாலும் கற்றலுக்கான வாய்ப்புகள் மூடப்படவில்லை. எனவே வீட்டில் ஓர் அறையை வகுப்பறையாக்குவோம். கற்பதற்கான மேசை, வெண்பலகை என்பவற்றை ஏற்பாடு செய்துகொள்வோம்.2.
நேரசூசி தயாரித்து சுயகற்றலில் ஈடுபடுவோம். பாடசாலைப் பாடங்கள் ஒவ்வொன்றையும் சுயமாகக் கற்க ஆரம்பிப்போம். சுயகற்றலே பிரதானமானது. ஆகவே நேரசூசிப்படி ஏற்கனவே கற்ற பாடங்களை மீட்டுவதோடு புதிய பாடங்களையும் கற்றுக்கொள்ள முயற்சிக்கலாம். பாடநூல்களை வீட்டிலிருந்து கற்பதற்கு பெற்றோர் வழிகாட்டலாம்.3.
உறவினர்களிடமிருந்து கற்றுக்கொள்வோம். வீட்டில் உள்ள பெற்றோர்கள் கற்றுக்கொடுக்கக் கூடியவர்களாக இருப்பின் பெற்றோர்களிடமும் அல்லது மூத்த சகோதர சகோதரிகள் , உறவினர்கள் இருப்பின் அவர்கள் மூலமாக சுயமாகக் கற்று விளங்க முடியாத விடயங்களை கற்றுக்கொள்ளலாம்.4.
பயிற்சிகளில் ஈடுபடுவோம். கடந்தகால வினாத்தாள்கள், செயலட்டைகள், மாதிரி வினாத்தாள்கள் என்பவற்றை பயன்படுத்தி கற்ற விடயங்களில் பயிற்சிகளில் ஈடுபடுவது அவசியமாகும். இதற்காக www.moe.gov.lk, www.nie.lk, www.edupub.gov.lk, www.doenets.lk, www.np.gov.lk, www.teachmore.lk போன்ற இணையத்தளங்களில் மேற்சொன்ன விடயங்களை இலவசமாக டவுன்லோட் செய்ய முடியும். அத்தோடு School Exam & Seminar Papers Grade 1-13, School Exam & Seminar Papers போன்ற பல முகநூல் பக்கங்களினூடாகவும் பெற்றுக்கொள்ள முடியும்.5.
பாடநூல் வாசிப்பதற்கு நேரம் ஒதுக்குவோம் கற்றலில் மிக முக்கியமானது மேலதிக வாசிப்பாகும். எனவே களைப்பான நேரங்களில் கூட அமர்ந்து கொண்டோ அல்லது கட்டிலில் சாய்ந்து கொண்டோ வாசிக்க முடியுமான பாட நூல்களை வாசிக்கலாம். குறிப்பாக கணிதம், விஞ்ஞானம் தவிர்ந்த ஏனைய பாடநூல்கள் அவ்வாறாக வாசிக்கப்பட முடியும்.6. சிறுகுறிப்பு எழுதிக் கொள்வோம். தரம் 08 க்கு மேற்பட்ட மாணவர்கள் தினமும் கற்கும் விடயங்களை சிறுகுறிப்புகளாக எழுதிக்கொள்ள வேண்டும். சுயமாக வாசித்து, விளங்கி, சுருக்கத்தை எழுதிக்கொள்ள வேண்டும். சில பாடங்களை அட்டவணைகளாக வரைபுகளாக மாற்றி இலகுவில் நினைவில் வைத்துக்கொள்ள வழிசெய்யலாம்.
7.
மனனமிட வேண்டியவைகளை மனனமிடுவோம். பரீட்சையில் கூடுதலான புள்ளிகளைப்பெற மனனம் முக்கியமானது. ஆகவே மனனமிடவேண்டிய விடயங்களை வேறாக எழுதி அதிகாலையில் சற்று நேரம் ஒதுக்கி மனனமிட்டு வரலாம். புத்தகங்களை அப்படியே மனனமிடாது ஏற்கனவே தயாரித்த சுருக்கக் குறிப்புகளை அல்லது வினாவிடைகளை மனனமிடலாம்.8.
வானொலி மூலம் கற்றிடுவோம். தற்போதைய நிலையைக் கருத்திற்கொண்டு வானொலிகள் மூலமாக இலவசமாகப் பாடங்கள் இடம்பெறுகின்றன. ஆகவே குறித்த நேரத்தில் வானொலியை செவிமடுப்பதன் மூலமும் கற்றுக்கொள்ளலாம். தென்றல் அலைவரிசையில் தினமும் காலை 09 மணி முதல் 11மணி வரை தரம் 11 பாடங்களும் 11மணி முதல் 12மணி வரை தரம் 12,13 பாடங்களும் தமிழ் சேவை அலைவரிசையிலே மாலை 04மணி முதல் 05மணி வரை தரம் 06 முதல் தரம் 10 வரையான பாடங்களும் கற்பிக்கப்படுகின்றன.9.
தொலைக்காட்சி மூலமாகக் கற்போம். கல்வி அமைச்சினால் நெனச எனும் கல்வித் தொலைக்காட்சிச் சேவை நடாத்தப்படுகிறது. அதன்படி தரம் 10 மற்றும் 11 ஆம் வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்களுக்கான பாடத்திட்டங்கள் ஆசிரியர்களால் கற்பிக்கப்பட்டு, அக் காணொலிகள் ‘நெனச’ தொலைக்காட்சியின் மூலம் ஒளிபரப்பப்படுகின்றன. டயலொக் டீவி மூலம் இதனைப் பார்வையிட முடியும்.10.
இணையக்கற்றலில் ஈடுபடுவோம். ஒன்லைன் மூலமாக கற்றல் வழிகாட்டிகள், தகவல்கள், மேலதிக நூல்களைத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். குறிப்பாக கல்வியமைச்சின் மூலம் நடாத்தப்படும் http://www.e-thaksalawa.moe.gov.lk ‘ஈ தக்சலாவ” என்ற இணையத்தளம் மூலம் 1 – 13 வரையான வகுப்பு மாணவர்களுக்கான பாடங்கள், அதனைக் கற்பதற்கு இலகுவான விதத்தில் மும்மொழியில் தயாரிக்கப்பட்டுள்ளன. அதற்கும் மேலதிகமாக இணைய நூலகம், விசேட கற்றல், வினாப்பத்திரங்கள், இணையவழிப் பரீட்சைகள், செயலட்டைகள், பாடங்களை செயன்முறை அடிப்படையில் கற்கும் விதமாகக் காணொலிகள் ஆகியன உள்ளடக்கப்பட்டுள்ளன. மேலும் தமிழில் இலகுவாக கற்பதற்கு ஈ–கல்வி http://www.ekalvi.org/e-lessons இணையத்தளமும் பல்வேறு அறிவியல் விடயங்களைக் கற்றுக்கொள்ள https://www.khanacademy.org இணையத்தளமும் தேசிய கல்வி நிறுவகத்தின் கல்வி ரீதியான வெளியீடுகளைப் பெற்றுக்கொள்ள https://www.khanacademy.org இணையத்தளமும் இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தின் கடந்தகால வினாப்பத்திரங்கள், புள்ளிவழங்கல் திட்டம் என்பவற்றைப் பெற்றுக்கொள்ள https://doenets.lk இணையத்தளமும் காணப்படுகின்றன.11.
ஒன்லைன் மூலமான குறுங்கால பாடநெறிகளைத் தொடர்வோம். வெளிநாடுகளில் பெரும்பாலான மாணவர்கள் பாடசாலையில் கற்கும் அதேவேளை பகுதி நேரமாக இணையவழி குறுங்காலப் பாடநெறிகளைத் தொடர்ந்து தமது தகைமைகளையும் ஆற்றல்களையும் வளர்த்துக்கொள்கின்றனர். நமது நாட்டில் இவ்வழக்கம் மிகக் குறைவு. எனினும் இவ்விடுமுறை காலத்தில் நாமும் இவ்வாறான பாடநெறிகளைத் தொடர முடியும். ஆங்கிலப்பாடநெறி, கணணிப்பாடநெறிகள், திறன்விருத்திப் பாடநெறிகள் பல காணப்படுகின்றன. இதற்கு சிறந்த இணையத்தளம் https://www.udemy.com இதன் மூலம் இதுவரை நூற்றுக்கும் அதிகமான பாடநெறிகளை 40 மில்லியனுக்கும் அதிகமான மாணவர்கள் கற்றிருக்கிறார்கள்12.
காணொலிகள் மூலம் அதிகம் கற்போம்.ATVL STYLES
எனும் நிறுவனம் இலங்கைப் பாடசாலை பாடத்திட்டம் முழுவதையும் வீடியோவோக கற்பிக்கும் முயற்சியில் வெற்றி கண்டுள்ளனர். இவர்களது இறுவட்டுக்களை பெறுவதன் மூலம் வீடியோக்களை பார்வையிடுவதன் மூலமாகவே கற்றுவிடலாம். விடயங்கள் இலகுவில் நினைவில் பதிந்து விடும். மேலும் “உன்னால் முடியும்” யூடியூப் அலைவரிசையிலும் குறித்த சில பாடங்களுக்கான வீடியோ பாடங்களை பார்வையிடலாம். “தமிழ்மேசை” யூடியூப் அலைவரிசையும் இத்தகைய முயற்சியில் வெற்றிகண்டுள்ளது.13.
ஆவணத்திரைப்படங்கள் மூலம் ( Documentaries) அறிவைப் பெருக்குவோம் விஞ்ஞானம், வரலாறு போன்ற பாடங்களின் மேலதிக அறிவைப் பெருக்கிக்கொள்ள ஆவணத்திரைப்படங்கள் மிகவும் உதவியாக இருக்கும். மன்னர்களின் வரலாறுகள், முக்கிய இடங்களின் வரலாறுகள், விஞ்ஞான ஆராய்ச்சிகள் என்பவற்றை ஆவணத்திரைப்படங்கள் மூலம் அறியலாம். இதற்கு “Encarta encyclopedia” போன்ற இலத்திரனியல் கலைக்களஞ்சியங்கள் பெரிதும் உதவும்.14. கல்வி ரீதியான மீளாய்வு செய்வோம் கடந்த தவணையில் நான் பெற்ற பெறுபேறுகள் எப்படி இருந்தன? அதில் திருப்தியாக அமைந்த பெறுபேறுகள் எவை? அதற்குக் காரணம் என்ன? அதில் பெறுபேறுகள் திருப்திகரமாக அமையாத பாடங்கள் எவை? அதற்கான காரணம் என்ன? அடுத்த பரீட்சையில் எப்படி அதனை நிவர்த்திக்கலாம்? என்று Survey – மீளாய்வு ஒன்றை செய்து நமது பலம் பலவீனங்களை அடையாளம் காணலாம்.
15.
குறுங்காலத் திட்டம் வகுத்து படிப்படியாக முன்னேற முயற்சிப்போம். பலம், பலவீனங்களை அடிப்படையாகக் கொண்டு அடுத்த தவணைக்கான குறுங்கால கல்வி இலக்குகளை தயார் செய்து குறுங்கால செயற்திட்டங்களை உருவாக்கி படிப்படியாக அவற்றை நிறைவேற்றி வெற்றியை நோக்கி நகர முயற்சிப்போம்.16.
பயனுள்ள பொழுதுபோக்கில் ஈடுபடுவோம். தினமும் மனதுக்கு இதமளிக்கும் பயனுள்ள பொழுதுபோக்குகளில் ஈடுபட நேரம் ஒதுக்குவோம்.17.
தினம் ஒரு திரைப்படம் பார்ப்போம்உடலையும் மனதையும் பாதிக்கும் திரைப்படங்களைத் தவிர்த்து நல்ல கருத்துள்ள குறுந் திரைப்படங்களைப் பார்வையிடலாம்.
18.
கார்டூன் பார்ப்பதில் நேரம் செலவழிப்போம். வீட்டிலுள்ள சிறுவயதினருக்கு திரைப்படங்களை விட நல்ல கார்டூன்களை பார்வையிடச் சந்தர்ப்பம் வழங்கலாம்.19.
கணினி விளையாட்டுக்கள் விளையாட நேரம் ஒதுக்குவோம் பொதுவாக கணினி விளையாட்டுகள் பிள்ளையின் உடல் வளர்ச்சியைப் பாதிப்பதோடு பிள்ளையின் மூளையின் செயற்பாட்டை வன்முறைக்கு சார்பானதாக மாற்றுகின்றது. மனஅழுத்தம், மற்றும் பதகளிப்பு முதலானவற்றுக்கு பிள்ளைகள் ஆளாகுகின்றனர். எனினும் குறுகிய நேரம் பொருத்தமான கல்வி சார்ந்த விளையாட்டுக்களை விளையாடுவதற்கு அனுமதி வழங்க முடியும். நுண்ணறிவையும் ஆற்றலையும் வளர்க்கும் Spell Master, Typing Master, Scrabble, Chess, IQ Quiz போன்ற கணினி விளையாட்டுக்களை பழக்கப்படுத்தலாம்.20.
சித்திரம் வரைவோம். வரையும் ஆற்றல் கொண்ட பிள்ளைகள் இருப்பின் சித்திரங்களை வரைய முயற்சிப்பதோடு அவற்றை பத்திரிகைகளுக்கு அனுப்பலாம். அல்லது சித்திரங்கள் அடங்கிய அல்பம் ஒன்றை உருவாக்க முயற்சிக்கலாம்.21.
ஆக்கம் செய்வோம். புத்தாக்க சிந்தனைக்கு இடம்கொடுத்து கண்டுபிடிப்பு, கழிவுப் பொருள் மூலம் ஆக்கம் செய்தல் போன்ற காரியங்களில் ஈடுபடலாம். பாடசாலை நாட்களில் அதற்கான சந்தர்ப்பம் கிடைப்பதில்லை. எனவே விடுமுறையில் அவ்வாறாவற்றிக்கு சந்தர்ப்பங்கள் வழங்க முடியும்.22. பொருட்களை திருத்துவோம். நேரமின்மையால் பல பாவனைக்குதவாத பொருட்கள் வீடுகளில் களஞ்சிய அறையில் குவிக்கப்பட்டு இருக்கும். அவற்றில் உடைந்த மின்சாதனப் பொருட்களை திருத்துதல், சைக்கிள் முதலானவற்றை திருத்துதல் போன்ற காரியங்களில் ஈடுபடுவதோடு சில பொருட்களை மீள் சுழற்சி நிலையங்களுக்கு விற்பனை செய்யலாம்.
23.
மாலைநேரம் மனம் குளிர விளையாடுவோம். வீட்டு முற்றத்திலே சகோதர சகோதரிகளோடு விளையாடுவதற்கான வாய்ப்புக்களை வழங்கலாம்.மேற்குறித்த அறிவூரீதியான வழிகாட்டல்களை மாணவர்கள் பின்பற்றுவதற்கு பெற்றௌர் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுப்பதன் ஊடாக விடுமுறைக் காலத்தினை பயனுள்ளதாக மாற்றியமைப்பதோடு மட்டுமன்றி எமது எதிர்காலச் சந்ததியினை ஆக்கபூர்மான சிந்தனை கொண்டவர்களாக உருவாக்கிக் கொள்ள முடியூம்.