மாணவர்களின் ஹோர்மோன்களின் தொழில்பாடுகளை ஆசிரியர்கள் முகாமை செய்தல்
ஆசிரியர்களே உங்களின் நண்பர்கள் Dopamine Hormone மற்றும் Glutamate Hormone உங்களின் எதிரி Melotonin Hormone.
ஆசிரியம் வெற்றிபெற மேல்வரும் Dopamine மற்றும் Glutamate ஹார்மோன்களை மாணவர்களின் மூளையில் சுரக்கச் செய்வதிலும் Melotonin ஹார்மோனை சுரக்காமல் தவிர்ப்பதிலுமே உங்களுடைய வெற்றி தங்கியுள்ளது.பிள்ளைகளின் மூளைகளில் ஏற்படும் ஹார்மோன் சுரப்புக்களை ஆசிரியர்கள் கட்டுப்படுத்த முடியுமா? ஆம். கட்டுப்படுத்த முடியும்.
அதற்கு ஆசிரியர்களாகிய நாம் என்ன செய்யவேண்டும் என்பதை இங்கு தொடர்ந்து நோக்குவோம்.
Dopamine எனும் வேதிப் பொருளை மருத்துவர்கள் பல ஆண்டுகளாக அறிவார்கள் மனிதனின் அன்றாட உணர்வுபூர்வ செயல்பாடு பலவற்றில் இந்த ஹார்மோன் முக்கிய பங்காற்றுகிறது.
இது நமக்கு சிந்திக்க தூண்டுதல், செயலில் ஈடுபாடு, உத்வேகம் ஏற்பட செய்தல், வெற்றிக்கான இலக்கு அமைத்தல், நல்லிணக்கம் ,மனத்திருப்தி, உடல்வளர்ச்சி மற்றும் புதியனவற்றை கற்றல் என யாவற்றிலும் பங்காற்றுகிறது. உற்சாகத்தோடு விரும்பி குழந்தைகள் செய்யும் ஒவ்வொரு விடயத்திலும் Dopamine தூண்டுதல் உண்டு என்கிறார்கள் உடற்கூற்று உளவியலாளர்கள். (உதாரணமாக பாடசாலைக்கு லீவு போடுவதாக இருக்கும் போது கூட)
ஆதலால் ஆசிரியர்கள் தனது வகுப்பறையில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் dopamine னை சுரக்க வைத்து விட்டால் அதுவே ஆசிரியரின் வெற்றி . இந்த Dopamine கூடவே Glutamate எனும் ஹார்மோன் சுரக்கிறது இது கற்றலின் நினைவுகளை தக்கவைக்கும் ஹார்மோன் ஆகும்.
கற்றலில் உற்சாகமாகவும் விருப்பத்துடனும் ஈடுபட வைக்க Dopamine தேவையாகின்றது. அவ்விதமே கற்றதை நினைவுபடுத்தி தக்கவைக்க Glutamate எனும் ஹார்மோன் தேவைப்படுகின்றது.
ஹார்மோன்களில் Melotonin எனும் ஹார்மோன் இருள் ஹார்மோன் எனப்படுகின்றது. கொட்டாவிக்கு காரணமான இந்த ஹார்மோனை கட்டுப்படுத்த முடியாமல் போனால் கோமாவில் கொண்டுபோய் விட்டு விடும். அதீதமான உற்சாகமின்மை ஏற்படும் போது சுரக்கும் இது கற்றலுக்கு முழுதும் எதிரானது என்கிறார் டாக்டர் மிஹாலி. ஆக மெலட்டோனின்(Melotonin) ஹார்மோன் ஆசிரியர்களின் பரம எதிரி.
சரி அப்படியாயின் ஆசிரியர்களாகிய நாம் இந்த ஹார்மோன் சுரக்க வைப்பதற்கு என்ன செய்ய முடியும்.
உற்சாகமான நிலை ஏற்பட்டு நம்மட சேர்/ ரீச்சர் வரப்போற என்ற விருப்பு மனநிலையும் நமக்கு பாராட்டும் புகழும் பரிசும் குவியப் போகிறது. மிகுந்த மன நிறைவு ஏற்படப்போகிறது நாம் புதிய அனுபவத்தை இன்று பெற இருக்கிறோம் என்ற உணர்வு நிலையை வகுப்பறையில் இருக்கும் மாணவர்களுக்கு ஏற்படுத்திவிட்டால் ஆசிரியர்களின் நண்பனான Dopamine எனும் ஹார்மோனை மாணவர்களின் மூளையில் சுரக்கச் செய்துவிடலாம்.அவ்வாறு சுரந்துவிட்டால் கற்றல் வினைத்திறனாக மாற்றமுறும். கூடவே Glutamate ஹார்மோன் சுரப்பதால் கற்றவை நினைவில் தங்கும் வாய்ப்புக்கள் ஏற்படுகின்றது.
மாறாக ஆசிரியர் தனது பாடத்தை மிரட்டி இங்கே கவனி…!!! இல்லையென்றால் கட்டித் தொங்க விடுவேன்…!!! என்று வகுப்பை கவனிக்க வைத்தாலும் Dopamine எனும் ஹார்மோன் சுரக்கும் ஆனாலும் குளுட்டாமேட் (Glutamate) எனும் ஹார்மோன் சுரக்காது . இதனால் கற்றல் நடக்கும் ஆனால் கற்ற விடயங்களை நினைவுபடுத்தி தக்கவைக்க முடியாத அதேவேளை படித்ததும் நினைவில் தங்காது.
ஆதலால் Dopamine மற்றும் Glutamate சரிவிகிதத்தில் சுரக்க வைக்க ஆசிரியர்கள் ஒவ்வொரு பாட வேளையையும் அதிக ஆர்வமும் ஈடுபாடும் கொள்ளும் வண்ணம் உற்சாக அரங்கமாக மாற்றவேண்டும். பாடவேளை தோறும் இடம் மாற்றி வெவ்வேறு சகாக்களோடு உட்கார வைத்தல், பலவிதத்தில் விவாதம், வினாடிவினா,மகிழ்வுடனான கற்பித்தல் குழு விளையாட்டு என தொடங்கும் போது மட்டுமே அனைத்தும் சாத்தியமாகின்றது.
கட்டளையிடும் அதிகாரிகளாக செல்லாது குழந்தைகளின் வகுப்பறைக்குள் குழந்தைகளாக செல்வோம். ஆசிரியத்தால் உலகை வெல்வோம்.
S.J.Aathy
Child psychology .
Mu/vidyananda college