நீங்கள் யார் என்பதை உலகிற்கு அறிமுகம் செய்யுங்கள்….!
உலக படைப்பாற்றல் மற்றும் புத்தாக்க தினம் – ஏப்ரல்21
வி.பிரசாந்தன் – ஆசிரியர்
தலவாக்கலை
தலவாக்கலை
2018ஆம் ஆண்டுஏப்ரல் 21ஆம் திகதியை முதன்முறையாக உலகபடைப்பாற்றல் மற்றும் புத்தாக்கத் தினமாக ஐக்கிய நாடுகள் சபைஅதிகாரப்பூர்வமாகஅறிவித்துள்ளது. ஏப்ரல் 15 முதல் ஏப்ரல்21 வரை உலக படைப்பாற்றல் மற்றும் புத்தாக்க வாரமாககொண்டாடப்படுகின்றது. இதன் கொண்டாட்டமானது லியோனர்டோ டாவின்சியின் பிறந்ததினமான ஏப்ரல் 15ஆம்திகதி தொடங்கி, உலகபடைப்பாற்றல் மற்றும் புத்தாக்க நாளான ஏப்ரல் இன்றுநிவைடைகின்றது. ‘ஆயக்கலைகள் அறுபத்து நான்கு’ – என்று சொன்னாலும், நம்மிடம் இருக்கும் ஒன்றிரண்டு கலையைகாப்பாற்றி கொண்டு போகவே படாதபாடு படவேண்டியிருக்கிறது. நம்மிடம் கதை எழுதும் ஆற்றல்இருக்கலாம். ரசனையுடன் ஓவியத்தை தீட்டும் திறமை இருக்கலாம். ஒருசிறு உளி, சுத்திக்கொண்டு அழகியசிலையை செதுக்கும் சிந்தனை இருக்கலாம். ஆனால், இவற்றை எல்லாம் தட்டிக்கொடுத்து கொண்டாட யாராவது இருந்தால் நாம்எவ்வளவு மகிழ்வோம். அப்படி மிகச்சிறந்த படைப்பாற்றல் திறமைகொண்டவர்களை கொண்டாடுவதே ‘தேசிய படைப்பாற்றல் தினம்’ ஆகும்.
இந்தபூமியில் பிறக்கும் ஒவ்வொருவருக்கும் ஏதாவதுஒரு விதத்தில் நல்லபடைப்பாற்றல் இருக்கும். கூடதலாகவோ அல்லதுகுறைவாகவோ, அத்தகைய படைப்பாற்றல் மட்டுமேஒருவரை அவருக்கே தெரியாமல்இந்த வாழ்க்கையை ரசித்துவாழ வைத்துக் கொண்டிருக்கிறது. எனினும், இந்த படைப்பாற்றல்ரசிப்பதற்கு மட்டுமல்லாமல், இதன் தூண்டுகோலாகபல புதிய படைப்புகள்உருவாகிக்கொண்டிருகிறது. சிறு குழந்தைகள்முதல் பெரியவர்கள் வரைநல்ல கற்பனை செய்யும்திறனோடு தான் இருக்கிறார்கள். அதை பக்குவப்படுத்தி, சரியானவழியில் அதிகரிக்கச் செய்தால்நீங்கள் மேலும் நல்லமுன்னேற்றத்தை உங்கள் வாழ்க்கையில்அடையலாம். இதனோடு உங்கள் படைப்புகளும் அதிகரிக்கும்.உங்கள் கற்பனையைஅல்லது உங்கள் யோசனைகளைபயன் படுத்தி ஒன்றைஉருவாக்குவது படைப்பாற்றலாகும். உங்களுக்கு ஒரு புதுமையானயோசனை தோன்றினால் அதனைமேலும் உங்கள் கற்பனையைக்கொண்டு மெருகூட்டி ஒருநல்ல வடிவத்தை உண்டாக்கிஅதனை வெற்றிகரமாக செயல்படுத்துவது படைபாற்றலாகும். இந்த திறன்பெரும்பாலும் அனைவருக்குமே உள்ளது. எனினும், அதற்கு வெகு சிலரேமுக்கியத்துவம் கொடுத்து தங்கள் திறமையைஅதிகப்படுத்திக் கொள்கிறார்கள். நீங்கள் உங்கள் படைப்பாற்றலைவளர்த்துக்கொள்ள விரும்பினால் அதனை நீங்கள்எளிதாக சில விடயங்களைபின்பற்றுவதால் செய்துக்கொள்ளலாம். இந்த திறன்நிச்சயம் உங்கள் வாழ்க்கையில்முன்னேற்றம் அடைய உதவியாகஇருக்கும்.
பிரபல திரைக்கதை ஆசிரியர், எழுத்தாளர் ஹல் கிராஸ்மன். ஹாலிவுட் எண்ணற்ற படங்களுக்கு திரைக்கதைஎழுதி உள்ளார். அதுமட்டுமல்ல… திரைக்கதையை வடிவமைக்கும் விதம்குறித்தும் ஏராளமான புத்தகங்கள் எழுதிஇருக்கிறார். தன்னைப்போல எத்தனையோ பேர்திறமை இருந்தும் வெளியில்வராமல் இருக்கின்றனர். அவர்களைமுன்னேற்றப்பாதையில் கொண்டு செல்லயாருமே இல்லையே எனவருந்தினார். இவர்களை அடையாளம் காண்பதற்காகவும், படைப்பாற்றல் திறமை கொண்டவர்களைவெளியில் கொண்டு வருவதற்காகவும், ஒரு நாளை உருவாக்கஎண்ணினார். அதுதான் படைப்பாற்றல் தினம்.
பொதுவாக, எழுத்து, கதை, கட்டுரை, ஒவியம் என பலவிதபடைப்பாற்றல் முயற்சி எடுப்பவர்கள், தங்களதுஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள்முடக்கிக் கொள்கின்றனர். அது மிகவும்தவறு. தொடர்ந்து தங்களதுபடைப்புகளை வெளிக்கொணர வேண்டும். மக்களின்கவனத்திற்கு அதை கொண்டுசேர்ப்பதில் ஆர்வம் காட்டவேண்டும். அப்போதுதான் நமது படைப்புகளில், மக்களுக்கு பிடித்தது எது? படைப்பில்சேர்க்க வேண்டியது, நீக்கவேண்டியது எது? என்பதுஉள்ளிட்ட விஷயங்களை நாம் தெரிந்துகொள்ள முடியும்.
அதே நேரத்தில் ஒருவரின்படைப்பாற்றல் திறமையை ஊக்குவிக்கும் மனப்பான்மையும்கட்டாயம் வேண்டும் என்கிறார் ஹல்கிராஸ்மன். அவர் நமக்குபோட்டியாளர் என்று எண்ணக்கூடாது. அதே நேரம் அவரதுதிறமையை போற்ற வேண்டும். அவரின் மாறுபட்ட முயற்சியைநாம் வேறு விதத்தில்முயற்சித்து பார்க்க வேண்டும். படைப்புகளில்பலவித சம்பவங்களை தொட்டிருக்கவேண்டும். ஒரே எண்ணத்தில், ஒரே சிந்தனையிலே உழன்றுகொண்டிருப்பதை தவிர்க்க வேண்டும். வெவ்வேறுதளத்தில், களத்தில் நமது சிந்தனையைசெலுத்த வேண்டும். அப்போதுதான்நமது படைப்புகள் பேசப்படும். படைப்பாற்றல் புகழப்படும்.
புத்தாக்கம் என்பதுபுதிதான ஒரு எண்ணக்கருவைஅல்லது புதிய சிந்தனையைக்கொண்டு புதுமுறையையோ அமைப்பையோவடிவமைத்து உருவாக்கி நடைமுறைப்படுத்துவதாகும். இன்று தொழில்மற்றும் தொழில்நுட்பத்துறைகளில்அடிக்கடி உபயோகிக்கப்படும்வார்த்தை புத்தாக்கம். மேம்போக்காக புத்தாக்கம் என்றால் “புது விதமாக யோசித்தல்” என்று புரிந்து கொள்ளப்பட்டாலும் அதன்சற்றே ஆழமான விளக்கத்தை பார்க்கலாம். படைப்பாற்றல் என்றசொல்லும் புத்தாக்கம் என்ற சொல்லும் ஒரேஅர்த்தத்தை தான் தருவது போலதோன்றும். ஆனால் இரண்டு வார்த்தைகளுக்கும் நடைமுறையில் வெவ்வேறு அர்த்தம் உண்டு. இந்த நுணுக்கங்களை புதுயுக தொழில்முனைவோரும் தொழில்நுட்ப வல்லுனர்களாக மலரத்துடிக்கும்இளைஞர்களும் புரிந்து கொள்வது அவசியம். கிரியேட்டிவிட்டிஎன்பது ஒரு ஐடியாவின் பிறப்பு – ஒருமாறுபட்ட சிந்தனை வடிவத்தின் வெளிப்பாடு – ஒரு பிரச்சினை அல்லதுதேவைக்கான புதுமையான தீர்வு எண்ணம். ஆக படைப்பாற்றல் அல்லதுகிரியேட்டிவிட்டிஎன்பது ஒரு மாறுபட்ட எண்ணம்மட்டுமே. அந்த மாறுபட்ட புதுமையான எண்ணத்துக்கு சரியானவழிமுறையில் திறன் மிக்க செயல்வடிவம் கொடுத்து, அந்தசெயல் வடிவம் நல்லதொரு விளைவைஉருவாக்குமானால்அது தான் புத்தாக்கம் என்றுஅழைக்கப்படும்.
உங்களுக்குபிடித்த விடயங்களை அதிகம்செய்ய முயலும் போதுஉங்கள் திறன் அதிகரித்துக்கொண்டே இருக்கும். உங்களுக்குபிடித்த பொழுதுபோக்குகளில் அதிகஈடுபாடு செலுத்துங்கள். உங்கள்மனதை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளஉதவும் எந்த விடயமாகஇருந்தாலும் அது நீங்கள்எதிர் பார்த்த பலனைஉங்களுக்கு விரைவில் தரும். இதுமட்டுமல்லாமல், நீங்கள் உங்களுக்கு பிடித்தபுத்தகங்களை அதிகம் படிக்குமுயற்சி செய்யுங்கள். அதிகம்புத்தகங்கள் படிக்கும் போது உங்கள்மூளைத் திறன் அதிகரிக்கும். இதனால் உங்கள் சிந்திக்கும்திறனும் அதிகரிக்கும். இதுஉங்கள் படைப்பாற்றலை அதிகரிக்கஒரு சிறந்த வழியாகஇருக்கும்.