இலங்கை ஆசிரிய கல்வியியலாளர் சேவை தரம் 3 க்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. வர்த்தமானி அறிவித்தலில் காணப்படும் முக்கிய அம்சங்கள் குறித்து கவனம் செலுத்துவோம்.
மட்டுப்படுத்தப்பட்ட அடிப்படையில் பின்வருமாறு பாடங்கள், மொழி மூல அடிப்படையில் வெற்றிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த பாடங்களில் ஏதாவது ஒரு பாடத்தை கற்பிக்கின்ற அல்லது தொடர்புபடுகின்ற ஆறு வருடத்திற்கு மேற்பட்ட அனுபங்களைக் கொண்டவர்கள் மாத்திரம் தொடர்ந்து வாசிக்கவும்.
இந்த வெற்றிடங்கள் தேசிய கல்வியியற் கல்லூரிகள், ஆசிரியர் நிலையங்கள், ஆசிரியர் கலாசாலைகளில் காணப்படுகின்றன.
1. இலங்கைக் கல்வி நிர்வாக சேவையிலோ அல்லது அதிபர் சேவையிலோ அல்லது இலங்கை ஆசிரியர் சேவையிலோ பதவி நிரந்தரமாக்கப்பட்டிருத்தல்
2. அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமொன்றிலிருந்து பெற்றுக் கொண்ட பட்டமொன்றுடன் குறித்துரைக்கப்பட்ட பாடப்பரப்பில் தேசிய போதனாவியல் டிப்ளோமா அல்லது ஆசிரியர் பயிற்சிச் சான்றிதழுடன் 7வருடத்திற்குக் குறையாத கற்பித்தல் அனுபவம் ; அல்லது
மேலைத்தேய சங்கீத பாடப்பரப்பில் இருந்து பெற்றுக் கொண்ட தேசிய போதனாவியல் டிப்ளோமா
அல்லது ஆசிரியர் பயிற்சிச் சான்றிதழுடன் குறித்த பயிற்சியின் பின்பு 7வருடங்களுக்குக் குறையாத கற்பித்தல் அனுபவம்; அல்லது.
இலங்கைப் பரீட்சைத்திணைக்கத்தினால் நடாத்தப்படுகின்ற குறித்த பாடம் தொடர்பான டிப்ளோமா சான்றிதழுடன் 10 வருடங்களுக்குக் குறையாத கற்பித்தல் அனுபவம்; அல்லது
கீழ்க் குறிப்பிடப்படும் நிறுவனமொன்றிலிருந்து மேலைத்தேய சங்கீதம் எiii ஆம் தர பிரயோக மற்றும் எழுத்துப் பரீட்சையில் சித்தியடைவதுடன் 7 வருடங்களுக்குக் குறையாத கற்பித்தல் அனுபவம் இருத்தல்.
Department of Examinations, Sri Lanka
Trinity College of Music, London
Royal School of Music, London
London College of Music
Institute of Western Music and Speech, Colombo
ஆங்கிலம்
(i) அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமொன்றின் பட்டமொன்றுடன் இரண்டாம் மொழியாக ஆங்கிலம் கற்பித்தல் தொடர்பாக பட்டப்பின் டிப்ளோமாவூடன் 6 வருட கற்பித்தல் அனுபவம்; அல்லது
(ii) ஆங்கிலம் தொடர்பாக தேசிய கற்பித்தல் டிப்ளோமா சான்றிதழ் அல்லது ஆங்கில ஆசிரிய பயிற்சிச் சான்றிதழுடன் ஆசிரிய பயிற்சியின் பின்னர் 7வருடங்களுக்குக் குறையாத கற்பித்தல் அனுபவம் காணப்படல்.
உடற்கல்வி
(i) உடற்கல்வி தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமொன்றிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட பட்டமொன்றுடன் 7 வருடங்களுக்குக் குறையாத கற்பித்தல் அனுபவம்; அல்லது
(ii) அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமொன்றிலிருந்து அல்லது விளையாட்டு அமைச்சின் மூலம் பெற்றுக்கொண்ட உடற்கல்வி மற்றும் விளையாட்டு தொடர்பான தேசிய கற்பித்தல் டிப்ளோமா அல்லது ஆசிரியர் பயிற்சிச் சான்றிதழுடன் பயிற்சியின் பின்னர் 6வருடங்களுக்குக் குறையாத கற்பித்தல் அனுபவம்; அல்லது
(iii) அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமொன்றிலிருந்து ஏதாவது ஒரு பாடப்பரப்பில் பட்டமொன்றுடன் உடற்கல்வி தொடர்பாக பட்டப்பின் பட்டத்துடன் 6 வருடங்கள் உடற்கல்வி கற்பித்தல் அனுபவம் காணப்படல்; அல்லது.
(iv) அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமொன்றிலிருந்து ஏதாவது பாடப்பரப்பொன்றில் பட்டத்துடன் சுகாதாரம் மற்றும் உடற்கல்விப் பாடம் தொடர்பாக தேசிய கற்பித்தல் டிப்ளோமா சான்றிதழ் அல்லது ஆசிரியர் பயிற்சிச் சான்றிதழ் பெற்று 6வருடங்களுக்குக் குறையாத கற்பித்தல் அனுபவம் காணப்படல்.
தொழில் நுட்பப் பாடங்கள்
i. நிர்மாணத் தொழில்நுட்பம்
ii. இயந்திர தொழில்நுட்பம்
iii. நுண்கலை
iv. மின்சாரம் மற்றும் இலத்திரனியல் தொழில்நுட்பம்
மனைப்பொருளியல்
(i) அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமொன்றிலிருந்து உரிய பாடப்பரப்பு தொடர்பாக பெற்றுக்கொண்ட பட்டமொன்றுடன் 7வருடங்களுக்குக் குறையாத கற்பித்தல் அனுபவம்; அல்லது
(ii) உரிய பாடத்தில் தேசிய கற்பித்தல் டிப்ளோமா அல்லது ஆசிரியர் பயிற்சிச் சான்றிதழுடன் 7 வருடங்களுக்குக் குறையாத கற்பித்தல் அனுபவம்; அல்லது
(iii) அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமொன்றிலிருந்து பெற்றுக்கொண்ட பட்டமொன்றுடன் உரியபாடம் தொடர்பாக தேசிய கற்பித்தல் டிப்ளோமா அல்லது ஆசிரியர் பயிற்சிச் சான்றிதழுடன் 6 வருடங்களுக்குக் குறையாத கற்பித்தல் அனுபவம்; அல்லது
(iv) உரிய பாடம் தொடர்பாக தேசிய கற்பித்தல் டிப்ளோமா அல்லது ஆசிரியர் பயிற்சிச் சான்றிதழுடன் 6வருடங்களுக்குக் குறையாத உரிய பாடக்கற்பித்தல் அனுபவத்துடன் உரிய பாடப்பரப்புக்குரிய கீழ் குறிப்பிடப்படும் ஏதாவது சான்றிதழொன்று காணப்படல்.
ஆரம்பக்கல்விப் பாடங்கள்
ஏதாவது அடிப்படை பட்டத்துடன் குறித்துரைக்கப்பட்ட உரிய பாடத்துறையில் தேசிய கற்பித்தல் டிப்ளோமா அல்லது ஆசிரியர் பயிற்சிச் சான்றிதழுடன் குறித்துரைக்கப்பட்ட உரிய பாடத்துறையில் 7 வருடங்கள் கற்பித்தல் அனுபவம் பெற்றிருத்தல்
விண்ணப்பதாரிகள் மூன்று வினாப்பத்திரங்களுக்கு தயாராக வேண்டும்
1. நுண்ணறிவும் கிரகித்தலும்
2. விடய ஆய்வு
3. கல்வி மூல த்த்துவங்கள்
பரீட்சைக்கான பாடத்திட்டம்
1. நுண்ணறிவும் கிரகித்தலும்
வழங்கப்பட்ட தலைப்பு, கருப்பொருளின் ஊடாக கருத்துக்கள் மற்றும் தகவல்களை சமர்ப்பித்தல், கோவைப்படுத்தல் மற்றும் ஒலிபரப்புச் செய்தல் தொடர்பாக விண்ணப்பதாரி காட்டுகின்ற தர்க்க ரீதியான கற்பனைத் திறனை அளவிடுதல்
ஓரளவூ சிக்கலான பந்தியொன்றை ஆவணமொன்றை அல்லது விஞ்ஞாபனமொன்றை புரிந்து கொள்வதற்கும் அதிலுள்ள பிரதான கருத்துக்களை தமது நடையில் சாராம்சமாக தெளிவாகவூம் சரியாகவூம் வெளிப்படுத்தவூம் வழங்கப்பட்டுள்ள வகுதிக்கேற்ப தெரிவூ செய்வதற்கு விண்ணப்பதாரிக்கு உள்ள திறனை அளவிடுதல், கிரகித்தல் மற்றும் நிலைப்படுத்தல்
எண் மற்றும் உருவவியல் சூழலில் சமர்ப்பிக்கப்படுகின்ற முரண்பாடுகள் தொடர்பாக விண்ணப்பதாரிகளின் முடிவூகளையூம் பதிலையூம் பரீட்சிப்பதனூடாக விண்ணப்பதாரிகளின் கிரகிக்கும் ஆற்றலையூம் நுண்ணறிவையூம் அளவிடுதல் இதன் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது
2. விடய ஆய்வு
ஆசிரியர் கல்வி மற்றும் பாடசாலைகள் கல்வித் துறையினுள் ஏற்படக்கூடியதான நிகழ்வூகள் பல சமர்ப்பிக்கப்பட்டு அந்நிகழ்வூகளுக்கு பதில் வழங்குதல் மற்றும் முரண்பாடுகளைத் தீர்த்தல் தொடர்பாக விண்ணப்பதாரிகளின் திறனை அளவிடும் நோக்கில் வினாக்கள் தரப்படும்.
3. கல்வி மூல தத்துவங்கள்
கல்வித் தத்துவம், கல்வி சமூகவியல், ஆசிரியர் வகிபாகம், கல்விக் கொள்கை மற்றும் நவீன முரண்பாடுகள், கல்வி திட்டமிடல் மற்றும் முகாமைத்துவம், கல்வி மதிப்பீடு, கற்றல் கற்பித்தல் நுணுக்கங்கள் கல்வித் தொழில் நுட்பவியல் மற்றும் கல்வி ஆய்வூ ஆகிய துறைகளுக்கு ஏற்புடையதாக விண்ணப்பதாரிகளின் கிரகித்தல் திறன் இதன் மூலம் பரீட்சிக்கப்படும்
செய்முறைப் பரீட்சை
குறிப்புக்கள்
பரீட்சை நடைபெறும் திகதி – அறிவிக்கப்படவில்லை. பின்னர் பரீட்சைத் திணைக்களத்தினால் அறிவிக்கப்படும்.
பாடங்களுக்கு ஏற்ப தகைமைகள் வேறுபடுகின்றன. எனவே, கட்டாயமாக 6, 7 வருடங்களுக்கு மேற்பட்ட அனுபவங்களைக் கொண்ட அனைவரும் ஒரு முறை வர்த்தமானியை முழுமையாக வாசிப்பது கட்டாயம்.
ஆங்கில பாடத்தை தெரிவு செய்த ஒருவர் பரீட்சைக்கு தெரிவு செய்யும் மொழி யாது சார்?
5 வருட கற்பித்தல் அனுபவம் தானே.நீங்கள் 6வருடம் என்று கூறுகிறீர்கள்.எது சரி