வடமேல் மாகாண பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் எதிர்வரும் 18 ஆம் திகதி வழங்கப்படவுள்ளதாக வடமேல்மாகாணக் கல்வித் திணைக்களம் அறிவித்துள்ளது.
நியமனம் பெற்றுக் கொள்ளும் ஆசிரியர்களுக்கான திசைமுகப்படுத்தல் பயிற்சி 20 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் தமிழ் மொழி மூல ஆசிரியர்களுக்கான பயிற்சிகள் மின்னேரியவில் நடைபெறும் என வடமேல் மாகாண கல்வித் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் ஒருவர் தெரிவித்தார்.