இலங்கையில் வேலையில்லா பிரச்சினையன்றி வேலைக்கு ஏற்ற தகைமையுடையோர் இல்லை என்று இலங்கைக்கு வருகை தந்த சமூக துறைசார் விஞ்ஞானியான டட்லி சியர்ஸ் குறிப்பிட்டுள்ளார். தொழிலுக்கு ஏற்ற தகைமையானோரை இலங்கை கல்வி முறைமை உருவாக்காததே இந்நிலைமை ஏற்பட காரணமாக இருக்க கூடும் என எம்மால் கணித்துக் கொள்ள முடியும்.
பின்லாந்து, சுவிட்ஸர்லாந்து ஆகிய நாடுகளில் சாதாரண கல்வி முறைமையின் கீழ் தொழில் துறை கல்விக்கு மாணவர்கள் உள்வாங்கப்படுகின்றனர். இதனால் தொழில் ரீதியான திறமைகளுடன் கூடிய பிரஜைகளே பாடசாலைகளில் இருந்து வெளியேறுவதனை அந்நாடுகளில் நடைமுறையிலுள்ள கல்வி முறைமை உறுதிப்படுத்தியுள்ளது.
இலங்கையிலும் வரலாறு தொடக்கம் தொழில் கல்வியை பாடசாலை கட்டமைப்புக்குள் உள்வாங்க முயற்சிகளை முன்னெடுத்த போதிலும் அது முடியாமல் போனது. சமூகத்தில் குறித்த திட்டத்திற்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்ட போது அது தடைப்பட்டது. இதனால் தொழில் ரீதியான திறமையானவர்களை உருவாக்குவதற்கு முடியாமல் போனது.
இதனால் தான் தடைப்பட்ட முயற்சிக்கு வலுவூட்டும் வகையில் எல்லைகளை தாண்டிய எதிர்காலத்திற்காக பாடசாலை மாணவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் வழிகாட்டலின் கீழ் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களினால் 13 வருட கட்டாய கல்வி வேலைத்திட்டம் தொழில் பிரவேசம் என்னும் பெயரில் ஆரம்பிக்கப்பட்டது.
இதன்படி 2017 ஆம் ஆண்டில் ஒழுங்கு முறை திட்டத்தின் கீழ் 42 பாடசாலைகளை தேர்ந்தெடுத்து ஆரம்பிக்கப்பட்ட இந்த வேலைத்திட்டம், 2018 இல் 154 பாடசாலைகளிலும்,2019 இல் 114 பாடசாலைகளிலுமாக மொத்தம் 310 பாடசாலைகளில் 13 வருட கட்டாய கல்வி தற்போது வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
சிங்கள மொழி மூலமாக மாத்திரமின்றி தமிழ் மொழி மூலமாகவும் தொழில் கல்வியை பயில்வதற்கு மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன்பிரகாரம் 106 பாடசாலைகளில் தமிழ் மொழி மூலமாக தொழில் கல்வி போதிக்கப்பட்டு வருகின்றது. தொழில் கல்விக்கு உட்பட்ட பாடங்களை கற்கும் மாணவர்களுக்கு இரு வருட பயிற்சியின் பின்னர் என்.வி.கியு 4 சான்றிதழும் வழங்கப்படும். இந்த சான்றிதழை கொண்டு பல்கலைகழகங்களில் தொழில் கல்வி சார்ந்த பாடநெறிகளை தெரிவு செய்து கொள்ள முடிவதுடன் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்கும் செல்ல முடியும்.
க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சித்தி பெற்றாலும் பெறாவிட்டாலும் உயர்தரம் வரை சென்று தொழில் கல்வியை பயில்வதற்கு மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும். 13 வருட கட்டாய கல்வியின் ஊடாக 26 பாடநெறிகளை மாணவர்களுக்கு பயில முடியும். எதிர்கால தொழில் உலகிற்கு ஏற்றவாறு மேற்குறிப்பிட்ட 26 பாடநெறிகளும் அமைந்துள்ளன. இதன்படி சுகாதாரம் மற்றும் சமூக பாதுகாப்பு, சிறுவர் உளவியல், உடற்கல்வி மற்றும் விளையாட்டு ,கால்நடை உற்பத்தி தொழில்நுட்பம், உணவு உற்பத்தி தயாரிப்பு தொழில்நுட்பம், நிர்மாணத்துறைசார் தொழில்நுட்ப கல்வி,மின் மற்றும் மின்னியல் துறைசார் கற்கை, சுற்றுலா மற்றும் விருத்தினர் உபசரிப்பு உட்பட 26 பாடநெறிகள் 13 வருட கட்டாய கல்வியின் ஊடாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
உயர்தரத்தில் தொழில் கல்வியை பயிலும் மாணவர்கள் ஒரு வருடம் தெர்ந்தெடுக்கப்பட்ட 3 பாடங்களை பயின்று தத்துவார்த்த பயிற்சி வழங்கப்பட்ட பின்னர் இரண்டாவது வருடத்தில் மிகவும் விருப்பமான பாடநெறியை தெரிவு செய்து அதற்கான வேலைவாய்ப்புடன் கூடிய பயிற்சி வழங்கப்படும்.
இதன்படி 13 வருட கட்டாய கல்வியின் ஊடாக உயர்தரத்தில் தொழில் கல்வியை பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் நாளாந்தம் 500 கொடுப்பனவை வழங்குவதற்கு கல்வி அமைச்சினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி தொழில் கல்வி பயிற்சி பெறும் காலம் வரை குறித்த கொடுப்பனவு வழங்கப்படும். 13 வருட கட்டாய கல்வி வேலைத்திட்டத்திற்கு வலுசேர்க்கும் முகமாகவே இந்த கொடுப்பனவு வழங்க திட்டமிடப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.