தேசிய கல்வி நிறுவகத்தின் தொழிநுட்பக் கல்வித் துறை நடாத்தும் பொறியியல் தொழிநுட்பவியல் கல்வி தொடர்பான விசேட கல்விமாணி (Bachelor of Education honours in Eng.Tech. Education) பாடநெறியின் அங்குரார்ப்பன வைபவம் இன்று காலை 9.30 மணியளவில் நடைபெற்றது.
தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் திருமதி கலாநிதி ஜயந்தி குணசேகர தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில் கல்வி அமைச்சின் அலுவலர்கள், பல்கலைக்கழ விரிவுரையாளர்கள், தேசிய கல்வி நிறுவக விரிவுரையாளர்கள் உட்பட பல கல்வியிலாளர்கள் உட்பட பாடநெறிக்கு தெரிவு செய்யப்பட்டவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பேராசிரியர் அ. அற்புதராஜா (பீடாதிபதி, பொறியியல் பீடம், யாழ்ப்பாணம்), பேராசிரியர் சமன் திலகசிரி, (பீடாதிபதி, பொறியியல் பீடம், SLIIT), கலாநிதி ஹர்ஷ சூரியராச்சி (பீடாதிபதி, பொறியியல் பீடம், றுஹுனு பல்கலைக்கழகம்), கலாநிதி BGLT. சமரநாயக்க (பணிப்பாளர், பொறியியல் வடிவமைப்பு நிலையம், பொறியியல் பீடம், பேராதனைப் பல்கலைக்கழகம்) ஆகியோர் சிறப்பு விருந்தினராக்க் கலந்து கொண்டு உரையாற்றினர்.
நான்கு வருட காலத்தைக் கொண்ட இப்பாடநெறியின் முதல் குழு 2016 ஆம் ஆண்டு ஆரம்பமானது.
இரண்டாவது (2019-2022) குழுவினருக்கான ஆரம்ப வைபவமே இன்று நடைபெற்றது. இம்முறை விசேட கலைமாணியாக நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
உயர் தரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பொறியியல் தொழில்நுட்பவியல் பாடத்துறையைக் கற்பிக்கும் ஆசிரியர்களை வலுவூட்டுவதற்கான இப்பாடநெறி ஆங்கில மொழி மூலம் நடைபெறுகின்றது.
190 மாணவர்களை உள்வாங்கி ஆரம்பமாகும் இப்பாடநெறி கொழும்பு (SLIIT), பேராதனை, றுஹுனு, யாழ்ப்பாணம் ஆகிய நான்கு பல்கலைக்கழக நிலையங்களில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.