2017 ஆம் ஆண்டு வௌியாகிய க.பொ. உயர் தர பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்டு அரச பல்கலைக்கழகமல்லாத பின்வரும் உயர் கல்வி நிறுவனங்களில் நடாத்தப்படும் பட்டக் கற்கைகளுக்குத் தெரிவு செய்யப்படும் மாணவர்களுக்கான வட்டியற்ற கடன் வழங்குவதற்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
கீழே குறிப்பிடப்பட்டுள்ள 9 உயர் கல்வி நிறுனங்களில் பட்டக்கற்கையைத் தொடருவதற்காகவே கடன்பெற்றுக் கொள்ள முடியும்
i. Sri Lanka Institute of Information Technology Guarantee Ltd- SLIIT
ii. National School of Business Management- NSBM
iii. Colombo International Nautical and Engineering College- CINEC
iv. Sri Lanka Institute of Buddhist Academy -SIBA
v. Institute of Chartered Accountants of Sri Lanka- ICASL
vi. SANASA Campus Ltd- SANASA
vii. Horizon College of Business and Technology Ltd – HORIZON
viii. KAATSU Highly Advanced Medical Technology Training Centre-KIU
ix. SLT Campus (Pvt) Ltd., – SLTC x. SAEGIS Campus (Private) Limited– SAEGIS
பின்வரும் கற்றல் துறைகளில் காணப்படும் பாடநெறிகளுக்கு கடன் பெற்றுக் கொள்ளமுடியும்
1. Humanities and Social Sciences
2. Commerce
3. Biological Science
4. Engineering & Technology
5. Information and Communication Technology
கடன் வழங்குவதற்கான பாடநெறிகள் மற்றும் நிபந்தனைகள் உள்ளடங்கிய கையேட்டைப் பின்வரும் இணைப்பில் பெற்றுக் கொள்ளலாம்.
பின்வரும் இணையத்தளத்தில் ஒன்லைனில் மூலம் 2019.01.14 முதல் 2019.02.15 நள்ளிரவு வரை விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும்.