மத்திய கல்வி அமைச்சினால் வட மாகாண பாடசாலைகளுக்கு ஆசிரியர்களாக நியமனம் செய்யப்படுவதற்கு தெரிவுசெய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்ட 355 கற்பித்தல் தொடர்பான தேசிய போதனாவியல் டிப்ளோமாதாரர்களுக்கு வட மாகாணத்தில் வெற்றிடம் உள்ள பாடசாலைகள் முன்னுரிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கான நியமனக் கடிதங்கள் தயார் செய்யப்பட்டு அவர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கப்படவுள்ளன.
மேலும் வட மாகாண சபையின் கீழுள்ள பாடசாலைகளுக்கு நியமனம் செய்யப்பட்டுள்ள கற்பித்தல் தொடர்பான தேசிய போதனாவியல் ஆசிரியர்களின் விபரங்களை வட மாகாண சபை இணையத்தளம் www.np.gov.lk வட மாகாண கல்வி அமைச்சின் இணையத்தளம் www.edumin.np.gov.lk ஆகியவற்றில் பார்வையிட முடியும்.
எனவே 2022.04.29 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 09.00 மணிக்கு யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியில் தங்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கப்படவுள்ளமையினால் நியமனம் செய்யப்பட்டுள்ள டிப்ளோமாதாரர்கள் ஆசிரிய பணிக்குரிய கௌரவத்துடன் (பெண்கள் இள வர்ண சேலையுடனும் ஆண்கள் கறுப்பு வர்ண நீள காற்சட்டை மற்றும் வெள்ளை நிற மேற்சட்டையும் (சேட்) அணிவதுடன் கழுத்துப் பட்டி (tie) அணிதல் வேண்டும்.) 08.30 மணிக்கு பிந்தாமல் வருகைதரல் வேண்டும்.
மேலும் தெரிவுசெய்யப்பட்ட நியமனதாரர்கள் தமது ஆளடையாளத்தினை நிரூபிக்கும் வகையில் தேசிய அடையாள அட்டை ஃ செல்லுபடியாகும் கடவுச்சீட்டின் மூலம் தமது ஆளடையாளத்தினை உறுதிப்படுத்தி நியமனக் கடிதங்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பதுடன் நியமனதாரர்கள் தவிர்ந்த எவரும் நியமனக் கடிதங்களை பெற்றுக்கொள்ள முடியாது என்பதனையும் அறியத்தருகின்றேன்.
தமது பெயருக்கெதிரே காணப்படும் தொடர்பிலக்கத்தினைக் (Ref.No.) குறித்துக் கொள்வது தங்களுக்கான ஆசனங்களை இனங்காண்பதற்கு இலகுவாய் அமையும்.
போதனாவியல் ஆசிரியர்களின் விபரங்கள் – Click Here