The Principals’ Association of Sri Lanka has announced that the principals will be participating in a one-day symbolic strike nationwide on the 15th.
எதிர்வரும் 15ஆம் திகதி நாடளாவிய ரீதியில் அதிபர்கள் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கை அதிபர்கள் சங்கத்தின் செயலாளர் திரு.பியசிறி பெர்னாண்டோவின் கையொப்பத்துடன் கல்வி அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் பாடசாலைகளில் கடமையாற்றும் 1597 அதிபர்களுக்கு இரண்டு வருட காலமாக பதவி உயர்வு வழங்க அரசாங்கம் தவறியுள்ளதாக அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், திட்டமிட்டபடி உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடாத்துவதற்கு அரசாங்கம் தவறியமைக்கு எதிராகவும், உரிமை கோரி, அநீதிக்கு ஆளான மக்களுக்கும் அரசாங்கத்தின் அழுத்தங்களுக்கு எதிராகவும், இந்த அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிபர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கடந்த 28ஆம் திகதி கல்வி அமைச்சர் திரு.சுசில் பிரேமஜயந்தவுடன் கலந்துரையாடல் இடம்பெற்றதுடன், கலந்துரையாடலில் கலந்துகொண்ட சில அதிகாரிகளின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளின் பிரகாரம் இப்பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு கிடைக்காது எனத் தெரிகிறது என்றும் கடிதததில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ලබන 15 වනදා දිවයින පුරා සිටින විදුහල්පතිවරුන් එක් දින සංකේත වැඩ වර්ජනයක නිරත වන බව ලංකා විදුහල්පති සංගමය පවසනවා.
ලංකා විදුහල්පති සංගමයේ ලේකම් පියසිරි ප්රනාන්දු මහතාගේ අත්සනින් යුතුව අධ්යාපන අමාත්යාංශයේ ලේකම්වරයා වෙත යවා ඇති ලිපියකයි මේ බව සදහන් වන්නේ.
එම නිවේදනයේ වැඩිදුරටත් සඳහන් වන්නේ දිවයින පුරා පාසල්වල සේවය කරන විදුහල්පතිවරුන් 1597 දෙනෙකුට වසර දෙකක කාලයක් පුරා උසස් වීම් ලබා දීමට රජය අහොහොසත් වී ඇති බවයි.
එමෙන්ම තම අයිතිවාසිකම් ඉල්ලා සිටින ජනතාවට සහ අසාධාරණයන්ට ලක්වූවන්ට රජය විසින් මුදා හරින පීඩනයට එරෙහිව මෙන්ම නියමිත පරිදි පළාත් පාලන මැතිවරණය පැවැත්වීමට රජය කටයුතු නොකිරීමට එරෙහිව මෙම සංකේත වැඩ වර්ජනය පැවැත්වීමට තීරණය කර ඇතැයි එම ලිපියේ දැක්වෙනවා.
විදුහල්පතිවරුන් මුහුණ දී ඇති ගැටළු සම්බන්ධයෙන් පසුගිය 28 වැනිදා අධ්යාපන අමාත්ය සුසිල් ප්රේමචන්ද්ර මහතා සමග සාකච්ඡාවක් පවත්වන ලද අතර එම සාකච්ඡාවට සහභාගී වූ ඇතැම් නිලධාරීන්ගේ අදහස් සහ යෝජනා අනුව පෙනී යන්නේ මෙම ගැටළුවලට කඩිනමින් විසඳුමක් නොලැබෙන බවක් යැයි එම ලිපියේ සදහන්.