பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு நியமித்தல் – அமைச்சரவைக்கு சமர்ப்பிப்பு
பட்டதாரி பயிலுனர்களாக இணைக்கப்பட்டு பின்னர் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமனம் பெற்றுள்ளவர்களுக்கு ஆசிரியர் நியமனம் வழங்குவதற்கு கல்வி அமைச்சு சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கும் பொருட்டு ஜனாதிபதி அலுவலகம் அனைத்து மாகாண ஆளுனர்களுக்கும் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டடுள்ளதை teachmore.lk உறுதிப்படுத்தியுள்ளது.
கல்வி அமைச்சு இந்த யோசனையை டிசம்பர் 05 திகதி அன்று சமர்ப்பித்திருந்தது. ED/EST/22/37(III) என்ற இலக்கம் கொண்ட அமைச்சரவைப் பத்திரத்தினூடாக சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு மாகாண ஆளுனர்களின் இணக்கப்பாடு கோரப்பட்டுள்ளது. இணக்கம் தெரிவிக்கும் மாகாணங்களுக்கான மற்றும் தேசிய பாடசாலைகளுக்கான வெற்றிடங்கள் ஒரு பரீட்சையின் ஊடாக நிரப்பப்படும்.
இந்த இணக்கப்பாட்டை டிசம்பர் 30 க்கு முன்னர் வழங்குமாறு ஜனாதிபதி செயலகம் கோரிக்கை விடுத்துள்ளது.
யோசனையின் முக்கிய அம்சங்கள் வருமாறு
- அரச சேவையிலுள்ள அனைத்து பட்டதாரிகளுக்கும் இதற்கான சந்தர்ப்பம் வழங்குதல்
- தேசிய பாடசாலை மற்றும் இணக்கம் தெரிவிக்கும் மாகாணங்களின் பாடசாலைகளின் வெற்றிடங்களை அடிப்படையாகக் கொண்டு விண்ணப்பம் கோரல்
- இலங்கை பரீட்சைத் திணைக்களம் பொது விண்ணப்பம் ஒன்றைக் கோரும்.
- இலங்கை ஆசிரியர் சேவை பிரமாணக் குறிப்பின் படி, பொதுப் போட்டிப் பரீட்சை ஒன்றை பரீட்சைத் திணைக்களம் நடாத்தும்
- தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளுக்கு தனித்தனியாக விருப்பம் கோரப்படும்
- தேசிய பாடசாலைகளுக்கு விண்ணப்பித்தவர்களில் சித்தியடைந்தவர்களின் பெயர் பட்டியல் கல்வி அமைச்சுக்கும் மாகாணங்களின் பட்டியல் அந்தந்த மாகாணங்களுக்கும் அனுப்பபடும்
- சேவை பிரமாணக் குறிப்பின் படி, நேர்முகத் தேர்வு நடைபெறும்
- நேர்முகத் தேர்வில் தெரிவு செய்யப்படுவோர், பிரயோகப் பரீட்சைக்கு முகங்கொடுப்பர்
- எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வு பெறுபேறுகளின் இறுதிப் புள்ளிகளின் படி, நிலவும் வெற்றிடங்களுக்கு ஏற்ப இறுதிப்பட்டியல் தயாராகும்
- நிலவும் பாடசாலை மட்ட ஆசிரிய வெற்றிடங்களுக்கு ஏற்ப விண்ணப்பதாரிகளின் தகைமைக்கு ஏற்ப நியமனப் பாடசாலைகளுக்கு நியமனம் வழங்கப்படும்
மேலும் தொடரும்