ஆசிரியர்களுக்கு தற்காலிக இணைப்பு – கல்வி அமைச்சின் அறிவிப்பு

தற்போது நிலவும் நெருக்கடி நிலமையில் ஆசிரியர்களுக்கு சலுகை வழங்க கல்வி அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதன்படி,

ஒரே மாகாணத்திற்குள் தேசிய பாடசாலைகளுக்கு இடையில் மற்றும் தேசிய பாடசாலையில் இருந்து மாகாணப் பாடசாலைகளுக்கு ஆசிரியர்களை இணைப்புச் செய்வதற்கான அதிகாரம் மாகாணக் கல்விப் பணிப்பாளருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இரு மாகாணங்களுக்கிடையில் மாகாணப் பாடசாலைகளுக்கிடையில் ஆசிரியர்களை இணைப்புச் செய்வதல், மாகாணங்களில் அரச சேவை ஆணைக்குழு மற்றும் செயலாளரின் அனுமதியுடன் நடைமுறைப்படுத்தப்படும்

மாகாணங்களுக்கிடையில் தேசிய பாடசாலை ஆசிரியர்களின் இணைப்பு கல்வி அமைச்சின் ஆசிரியர் இடமாற்றக் கிளையின் பணிப்பாளர் ஊடாக நடைபெறும்

நிபந்தனைகள்

  1. இணைப்புக் கோரும் ஆசிரியர் மேலதிக ஆளணியைச் சார்ந்திருப்பின் அதற்காக பதில் ஆசிரியர் தேவையில்லை
  2. விண்ணப்பிப்பவர், மேலதிக ஆளணியைச் சாராதவர் என்றிருப்பின் பொருத்தமான பதில் ஆசிரியர் இணைப்பு நிகழ்த்தப்படல் வேண்டும்
  3. அதிபர்களின் இணக்கப்பாடுகளின் அடிப்படையில் ஒத்துமாறல் இடம்பெறும் ஒழுக்கில் அந்த அடிப்படையில் இடம்பெறும் இணைப்புக்கள் நிகழ நடவடிக்கை எடுக்கவேண்டும்.
  4. கர்ப்பிணிகள் மற்றும் வைத்திய காரணங்களினால் இடமாற்றம் கோரபவர்கள் உரிய வைத்திய சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும்
  5. இந்த இணைப்புக்கள் 2022.12.31 வரை மாத்திரமே செல்லுபடியாகும்
  6. குறிப்பிட்ட இணைப்புக்காலத்தில் சம்பளம் நிரந்தர நியமனப் பாடசாலைகளின் ஊடாக வழங்கப்படும்
SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!