Cabinet Sub-Committee to Prepare New National Education Policy Framework
புதிய தேசிய கல்விக் கொள்கை சட்டகம் தயாரிப்பதற்கான அமைச்சரவை உபகுழு நியமனம்
புதிய தேசிய கல்விக் கொள்கை சட்டகம் ஒன்றைத் தயாரிப்பதற்கு அமைச்சரவை உபகுழு நியமிக்கப்படுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நாட்டில் பொருளாதார ஸ்தீரத்தை அடைந்து கொள்ளும் செயன்முறையிடையே, விரைவாக மறுசீரமைப்பை அறிமுகப்படுத்துவற்கான பிரதான துறையாக அரசு கல்வித் துறையை இனங்கண்டுள்ளது. அதன்படி, உரிய அனைத்து தரப்பினின் பங்களிப்போடு புதிய கல்விக் கொள்கைச் சட்டகம் ஒன்றைத் தயாரித்து நடைமுறைப்படுத்த வேண்டியுள்ளது. அடுத்த 25 வருடங்களுக்கான தேசிய கல்விக் கொள்கை சட்டகம் மற்றும் உரிய அனைத்து மறுசீரமைப்பு முன்மொழிவுகளை பாராளுன்றிற்கு முன்வைத்து முன்னுரிமை அடிப்படையில் நடைமுறைப்படுத்துவற்கு தேவையான ஆலோசனை மற்றும் வழிகாட்டலை வழங்குவதற்கு கெளரவ ஜனாதிபதியின் தலைமையில் மற்றும் கெளரவ பிரதமரின் மற்றும் கல்வி அமைச்சரின் பங்குபற்றுதலோடு 10 பேர் கொண்ட அமைச்சரவை உபகுழு ஒன்றை நியமிப்பதற்காக கெளரவ ஜனாதிபதி முன்வைத்த முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது