அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள 5 வருட சம்பளம் இல்லாத விடுமுறை ஆசிரியர், சுகாதார மற்றும் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கானது அல்ல என்று பொது நிருவாக அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
பொது நிருவாக அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே மாயாதுன்ன டெய்லி மிரர் பத்திரிகைக்கு கருத்து வௌியிடும் போது மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
நீண்ட கால விடுமுறை தொடர்பான இந்த சுற்றறிக்கை, பல்வேறு நிறுவனங்களின் மேலதிகமாக உள்ள ஊழியர்களை அரசாங்கம் நீக்குவதற்காகவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டுக்குத் தேவையான அத்தியாவசியப் பிரிவு ஊழியர்களுக்கு இது பொருந்தாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
“நாங்கள் இப்போது இந்த சுற்றறிக்கையை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம்,” என்றும் அவர் கூறினார்