College lecturers on Sick leave tomorrow
ஒன்பது கோரிக்கைகளை முன்வைத்து தேசிய கல்வியியல் கல்லூரிகளின் விரிவுரையாளர்கள் அனைவரும் சுகயீன விடுமுறை போராட்டத்தில் நாளை (23ம் திகதி) ஈடுபடவுள்ளனர்.
நிறைவேற்று தர சேவையான இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவையின் உத்தியோகத்தர்களுக்கு ஏற்பட்டுள்ள சம்பள முரண்பாடுகளை நீக்கி அரச ரீதியிலான சேவைகளுக்கு மாத்திரம் பொருந்தக்கூடிய தடங்கலற்ற பதவி உயர்வு முறையை வழங்குவதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை ஒரு வாரத்திற்குள் சமர்ப்பித்தல். ஆசிரியர் சேவையின் சம்பள அதிகரிப்பு மூலம் ஏற்பட்ட சம்பள முரண்பாடுகளை நீக்குமாறும் அதுவரை ஆசிரியர் கல்வியியலார் சேவையினருக்கு முப்பதாயிரம் ரூபா இடைக்கால கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
மேலும், ஆசிரியர்களுக்கான பல்கலைக்கழகத்தை விரைவில் ஆரம்பித்தல், சேவை பிரமாணக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பணியிடங்களுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுத்தல், கல்லூரிகளில் இருக்க வேண்டிய கல்வி சுதந்திரம் மற்றும் சுதந்திரத்தை பாதிக்கும் 3/2023 என்ற சுற்றறிக்கையை ரத்து செய்தல் முதலான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இரண்டு வாரங்களுக்குள் இந்த கோரிக்கைகளுக்கு அமைச்சு பதிலளிக்காவிட்டால் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக ஆசிரிய கல்வியியலாளது சங்கம் தெரிவித்துள்ளது.
கல்லூரிகளின் தங்குமிடங்கள் மற்றும் இதர வசதிகள் முறையாக வழங்கப்படும் வரை, புதிய ஆட்சேர்ப்புகளில் இருந்து விலகி இருக்களதொ போவதாகவும் சங்கம் எச்சரித்துள்ளது..
ඉල්ලීම් නවයක් මුල් කර ගනිමින් ජාතික අධ්යාපන විද්යාපීඨවල සියලු කථිකාචාර්යවරු හෙට (23 වැනිදා) අසනීප නිවාඩු දමා සේවයට නොපැමිණෙති.
දීප ව්යාප්ත සේවාවන්ට පමණක් ක්රියාත්මක වන නිර්බාධ උසස්වීම් ක්රමය විධායක ගණයේ සේවාවක් වන ශ්රී ලංකා ගුරු අධ්යාපනඥ සේවා නිලධාරීන්ට ද ලබාදීම සඳහා සතියක් ඇතුළත කැබිනට් පත්රිකාවක් ඉදිරිපත් කිරීම, ගුරු සේවයේ වැටුප් වැඩි කිරීම නිසා ගුරු අධ්යාපනඥ සේවයේ නිලධාරීන්ට ඇති වූ වැටුප් විෂමතාව ඉවත් කිරීම සහ එම වැටුප් විෂමතාව ඉවත් කරන තෙක් එම නිලධාරීන්ට රුපියල් තිස් දහසක දීමනාවක් ලබා දීම ද ඔවුන්ගේ ඉල්ලීම් අතර වෙයි.
එමෙන් ම ගුරු අධ්යාපන විශ්වවිද්යාලය හැකි ඉක්මනින්ම ආරම්භ කිරීම, සේවා ව්යවස්ථාවේ සඳහන් තනතුරු සඳහා මාසිකව දීමනාවක් ලබාදීමට පියවර ගැනීම, විද්යාපීඨවල පැවතිය යුතු ශාස්ත්රීය නිදහස සහ ස්වාධීනත්වයට හානි වන ලෙස ඉදිරිපත් කර තිබෙන 3/2023 චක්රලේඛය අහෝසි කිරීම යන ඉල්ලීම් ද ඉදිරිපත් කර තිබේ.
මෙම ඉල්ලීම් සම්බන්ධයෙන් සති දෙකක් තුළ අමාත්යාංශය ප්රතිචාරයක් නොදක්වන්නේ නම් අඛණ්ඩ වර්ජනයක් ආරම්භ කරන බවද ශ්රී ලංකා ගුරු අධ්යාපනඥ සේවා සංගමය පවසයි
එමෙන්ම විද්යාපීඨවල නේවාසිකාගාර ඇතුළු සෙසු පහසුකම් නිසි පරිදි ලැබෙන තෙක් නව බඳවා ගැනීම්වලින් ඉවත්ව සිටීමේ වෘත්තීය ක්රියාමාර්ගය එලෙසම පවතින බවද එම සංගමය සඳහන් කළේය.