College of Education student admission delay – warning to the Ministry of Education
2019 க.பொ.த உயர் தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு மாணவர்களை உள்ளீர்ப்புச் செய்வது தொடர்ந்தும் காலதாமதம் அடைவதற்கு எதிர்ப்புத் தெரிவவித்தும் இது தொடர்பான துரித செயற்பாடுகள் மேற்கொள்ளப்படாதவிடத்து மாணவர்களுடன் போராட்ட நடவடிக்கையை முன்னறிவித்தலின்றி தொடரவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கள் எச்சரித்துள்ளது
குறித்த சங்கம் கல்வி அமைச்சுக்க அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இது குறித்து குறிபிபட்டுள்ளது.
இப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஆசிரியர் சங்கம் பின்வரும் முன்மொழிவுகளை பரிந்துரைத்துள்ளது.
இறுதியாக நடைபெற்ற கலந்துரையாடலில் பீடாதிபதிகள் நடவடிக்கைகளை தாமதப்படுவத்துவதாக ஆணையாளர் குற்றம் சாட்டியுள்ளார்.
மாணவர்கள் நிரந்தர வதிவிட அடிப்படையில் உள்ளீர்க்கப்படும் போது அவர்கள் அடிக்கடி வீடுகளுக்கு செல்லுவதாக பீடாதிபதிகள் குற்றம் குற்றம் சாட்டியுள்ளைமை பீடாதிபதிகளின் நிர்வாக் குறைபாடு என சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போது ஒரு மாணவரின் உணவு மற்றும் விடுதி வசதிக்காக ஒதுக்கப்பட்டுள்ள 5000 ரூபா எந்தவகையிலும் போதுமானது அல்ல என்று குறிப்பிட்டுள்ள ஆசிரியர் சங்கம், இப்பிரச்சினைகளில் தலையிட மாணவர்களின் பெற்றோருக்கு விசேட நிவாரணம் அளிக்க வேண்டும் என சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இம்மாணவர்களின் உள்ளீர்ப்பு தொடர்ந்தும் தாமப்படுத்தப்படும் போது மாணவர்களின் உரிமைக்காக மீண்டும் அறிவித்தல் எதுவும் விடுக்காது வேறு நடவடிக்கைகளில் இறங்குவதற்கு இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கம் தயாராக உள்ளதாக குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.