ஆசிரியர் தினத்திற்கு பணம் வழங்காமைக்காக தும்புத்தடியால் மாணவி ஒருவரைத் தாக்கியதாக குற்றஞ்சாட்டப்பட்ட அதிபருக்கு ஆதரவாக இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
ஆசிரியர் தினத்திற்கு பணம் வழங்காததால் மாணவியொருவரை தாக்கியதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு போலியானது எனவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ள அதிபரை, மீண்டும் தமது பாடசாலைக்கு நியமிக்குமாறு வலியுறுத்தி கொட்டகலை, பத்தனை – போகாவத்த சிங்கள வித்தியாலய மாணவர்கள், பெற்றோர் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.
தாக்குதலுக்குள்ளான மாணவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் குறித்த அதிபர் இடமாற்றம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.