அதிபரது முகாமைத்துவ வகிபங்கு மற்றும் தொழிற்பாடுகள்
Effective management role and Functions of school principal
S.Logarajah
Lecturer, Batticaloa National College of Education
இலங்கை அதிபர் சேவைக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்காக நடாத்தப்பட்ட எழுத்துப் பரீட்சையின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட நேர்முகப்பரீட்சைக்கு மீளவும் ஒரு தொகுதி ஆசிரியர்கள் அழைக்கப்பட்டுள்ள இந்நாட்களில் இக் கட்டுரையை ஆக்குவது பயன்மிக்கது எனக் கருதுகின்றேன். “அதிபரது முகாமைத்துவ வகிபங்கு” பற்றிய முன்வைப்பொன்றுக்குத் தயாராகும் உங்களுக்கு இக்கட்டுரை உதவக்கூடும். படித்துப் பயன்பெற்று கூடிய மதிப்பெண்களைப் பெற்றுக் கொள்வதோடு அதிபர் சேவைக்கு நியமனம் பெற்று சிறந்த அதிபராக மிளிர உங்கள் அனைவரையும் வாழ்த்துகின்றேன்.
பாடசாலை நிர்வாகம் என்ற ஒழுங்கமைப்பிற்கு அடித்தளம் போன்றவர் அதிபர் ஆவார். அதிபரைச் சார்ந்தே பாடசாலையின் பணிகள் அனைத்தும் அமைந்துள்ளன. தன்னுடைய வகிபங்கு காரணமாக> கல்வித் திணைக்களத்திற்கும் பாடசாலைக்கும்> பாடசாலை நிர்வாகத்திற்கும் பணியாளர்களுக்கும்> ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும்> பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையே உறவை மேம்படுத்துபவராகத் திகழ்கின்றார்.
பாடசாலையின் அதிபர் ஒரு முகாமையாளர்> ஒரு பன்முகப் பணியாளர்> பாடசாலையின்; தரத்தை பேணும் காவலர், மாணவர் நலன்களுக்குப் பொறுப்பானவர்> சமுதாயத்தின் நண்பன்> சக ஆசிரியர்களின் தலைவர்> கல்வி ஆர்வலர்> என்றும் கற்க விரும்பும் மாணவன்> பாடசாலைக்கும்; கல்வித்துறைக்கும் இடையிலான இணைப்பாளர்> வழிகாட்டும் ஆர்வம் மிக்க முன்மாதிரியான ஆசிரியர் எனச் சொல்லிக் கொண்டே போகலாம்.
அதிபர் பெற்றிருக்க வேண்டிய குண நலன்கs;
- கடமையுணர்வு
- கருணையுள்ளம்
- பணியாற்றுவதில் ஆர்வம்
- சுய கட்டுப்பாடு
- போதுமான தொழில் வாண்மை
- உடல் நலம்
- மனவெழுச்சிகளை கட்டுப்படுத்துதல்
- சுய மதிப்பீடு
- மனிதநேயம்
அதிபரின் முக்கிய வகிபாகங்கள்
(Major Role of the Principal)
அதிபர் பாடசாலையின் நிறைவேற்றுத் தலைவராவார். பாடசாலையின் செயற்பாடுகளை அதன் இலக்கு மற்றும் குறிக்கோள்களை நோக்கி வழிநடாத்துபவர். குறிக்கோள்களை வெற்றிகரமாக அடைய அதிபர் பாடசாலை ஒழுங்கமைப்பிலுள்ள ஏனையவர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும். அவர்களை ஊக்கவிக்க வேண்டும்.
அதிபர் தனது பாடசாலையின் மீது கட்டுப்பாட்டைச் செலுத்துபவராக> மாணவர்கள்> ஆசிரியர்களின் ஒழுக்கத்தைப் பராமரிப்பவராக> கற்றல் களத்தைத் திட்டமிட்டு மேற்பார்வையிடுபவராக> பாடப்புத்தகக் கருத்துகள் அனைத்திலும் மிகு புலமை வாய்ந்தவராக> ஆலோசனை கூறி வழிகாட்டுபவராக> விளையாட்டுகளை ஒழுங்கமைத்து நடாத்துபவராக, பாடசாலையின் ஆவணங்களைச் சீராகப் பராமரிப்பவராக> நேர்மைமிக்கவகையில் பொதுநிதியைக் கையாள்பவராக> மாணவர்களின் உடல்> அறிவு மற்றும் ஒழுக்க நலன்களைப் பாதுகாப்பவராக என பல வகிபங்குகளை ஆற்ற வேண்டியிருந்தாலும் ஒரு அதிபரது முக்கிய வகிபங்குகளை பின்வருமாறு எடுத்துக்காட்டலாம்.
- திட்டமிடல் வகிபாகம் (Role in Planning)
- பாடசாலை ஒழுங்கமைப்பு வகிபாகம் (Role in School Organizing )
- கற்பித்தல் வகிபாகம் (Role in Teaching)
- மேற்பார்வை வகிபாகம் (Role in School Supervision)
- வழிகாட்டுதல் வகிபாகம் (Role in Guidance)
- உறவுகளைப் பேணுதல் வகிபாகம் (Role in Maintaining Relations)
- பொது நிர்வாகம் வகிபாகம் (Role in General Administration)
திட்டமிடல் வகிபாகம் (Role in Planning)
குழப்பங்கள் மற்றும் முயற்சியின் நகல்களைத் தவிர்க்க அனைத்துச் செயற்பாடுகளையும் சரியான நேரத்தில் திட்டமிட வேண்டும். இது பின்வருவனவற்றை கொண்டிருக்கும்.
- பாடசாலைத் தவணை ஆரம்பமாவதற்கு முன்னரான திட்டமிடல்
- பாடசாலை தவணை ஆரம்பித்து முதல் வாரத்திற்கான திட்டமிடல்
- ஒரு ஆண்டுக்கான திட்டமிடல்
- ஆண்டு இறுதித் திட்டமிடல்
- அடுத்த ஆண்டுக்கான திட்டமிடல்
பாடசாலை ஒழுங்கமைப்பு வகிபாகம் (Role in School Organizing)
- போதனா பணிகளை ஒழுங்கமைத்தல்
- பௌதீக வளங்களை ஒழுங்கமைத்தல்
- இணைப்பாடச் செயற்பாடுகளை ஒழுங்கமைத்தல்
- பாடசாலை அலுவலகத்தை ஒழுங்கமைத்தல்
கற்பித்தல் வகிபாகம் (Role in Teaching)
- சிறந்த அதிபர்கள் நல்ல ஆசிரியர்களாகவும் இருந்துள்ளனர்.
- அதிபர் முதலில் தன்னை ஒரு ஆசிரியராகவே கருத வேண்டும்.
- அவர் நிபுணத்துவம் பெற்ற பாடங்களில் நாளொன்றுக்கு குறைந்தது இரண்டு வகுப்புக்களுக்காவது கற்பிக்க வேண்டும்.
- சமீபத்திய கற்பித்தல் முறைகள், புதிய மறுசீரமைப்புக்கள், இற்றைப்படுத்தப்பட்ட பாட விடய அறிவு கொண்டவராக திகழ வேண்டும்.
மேற்பார்வை வகிபாகம் (Role in School Supervision)
மேற்பார்வை என்பது மேம்பாடு, கண்டறிதல் அல்லது தவறுகளைக் கண்டறிதல் போன்றவற்றை உள்ளடக்கியது. மேற்பார்வையின் அடிப்படைகளாவன>
- உதவி செய்தல்> ஊக்கப்படுத்ததல் மற்றும் வழிகாட்டுவதை நோக்காகக் கொண்டது.
- ஒத்துழைப்பு உணர்வோடு செய்யப்படுவது.
- வழமையாக வினைத்திறனோடு மேற்கொள்ளப்படுவது.
- இதில் பாரபட்சம்> பாராமுகம் இருக்கக் கூடாது.
- மேற்பார்வைக்கான நியதிகளை ஆசிரியர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும்
வழிகாட்டுதல் வகிபாகம் (Role in Guidance)
- மாணவர்களுக்கு சிரேஸ்ட இடைநிலைப் பிரிவுகளில் பாடங்களைத் தேர்ந்தெடுப்பதற்கும்> உயர்தரத்தில் துறைகளைத் தேர்ந்தெடுப்பதற்கும் அவர்களது அன்றாட நடவடிக்கைகளுக்கும் வழிகாட்டுதல்.
- ஆசிரியர்களுக்கு செயற்பாடுகளை ஒழுங்கமைக்கவும்> கற்பிக்கவும் விகாட்டுதல்.
- பெற்றோர்களுக்கு தமது பிள்ளைகளின் கல்வியை மேற்பார்வை செய்ய வழிகாட்டுதல்.
- உயர் நிறுவனங்களுக்கு கலைத்திட்ட மறுசீரமைப்பு> புதிய பாடப்புத்தகங்கள் அறிமுகம்> கற்றல் பொருட்கள் உருவாக்கம் போன்வற்றின் போது வழிகாட்டல்.
உறவுகளைப் பேணுதல் வகிபாகம் (Role in Maintaining Relations)
- பணிக்குழவினருடன் (The staff)
- மாணவர்களுடன் (Students)
- ஆசிரிய மாணவர்களுடன் (Teacher – trainees)
- பெற்றோருடன் (Parents)
- சமுதாயத்துடன் (The Community)
பணிக்குழவினருடனான தொடர்புகளைப் பேணும் போது அதிபர் கண்டிப்பாக பின்வரும் கோட்பாடுகளைப் பின்பற்ற வேண்டும்.
- அவர்களை அனுதாபம், இரக்கம் மற்றும் கருணையுடன் நடாத்த வேண்டும்.
- அவர்களுக்கு பணிகளை பொறுப்புக்களை வழங்கும் போது அவர்களிடமுள்ள தனியாள் வேறுபாட்டை அங்கிகரிக்க வேண்டும்.
- பாடசாலைப் பணிகளை அவர்களிடையே பகிர்ந்து கொள்ள வேண்டும்.
- ஆசிரியர்களது ஆலொசனைகளையும் பெற்றுக்கொள்ள வேண்டும். பணிக்குழக் கூட்டங்களை (Staff Meeting) நடாத்தி கலந்துரையாட வேண்டும்.
பொதுவான நிர்வாகம் சார் வகிபாகம்
(Role in General Administration)
- கல்வியமைச்சின் கொள்கைகளை> சுற்றுநிருபங்களை நடைமுறைப்படுத்துவதற்கு பொறுப்பானவராகவும் மற்றும் பாடசாலைக்கும் கல்வித் திணைக்களத்திற்கும் இடையே ஒரு இணைப்பாளராகவும் மாற வேண்டும்.
- பாடசாலையில் அல்லது பாடசாலையால் மேற்கொள்ளப்படும் அனைத்து நிகழ்வுகள் மற்றும் செயற்பாடுகளுக்குப் பொறுப்புக் கூற வேண்டும்.
- ஆசிரியர்களும் மாணவர்களும் தங்கள் கடமைகளுக்குச் சரியான நேரத்தில் வருகை தருவதை கண்காணித்தல்.
- மனித வளம் மற்றும் பௌதீக வளங்கள் போதுமான அளவில் இருப்பதை உறுதிப்படுத்துதல்.
- பரிந்துரைக்கப்பட்ட ஊத்தியோகபூர்வ நியமங்களுக்கேற்ப, சுற்றறிக்கைகளுக்கேற்ப பொருட்கள் சேவைகளைக் கொள்முதல் செய்தல்.
அதிபரது தொழிற்பாடுகள் (Functions of Principal)
- எதிர்பார்க்கப்படும் இலக்குகள் மற்றும் குறிக்கோள்களை அடைய, ஆசிரியர்கள்> பணியாளர்கள் மற்றும் மாணவர்களை இணைத்து ஒரு குழவாக செயலாற்றுதல்.
- செயற்பாடுகளை ஒருங்கிணைப்பதற்கும்> இலக்குகளை அடையும் வகையில் வளங்களைப் பயன்படுத்துவதற்கும் பொறுப்பாளராய் தொழிற்படல்.
- கல்விக் குறிக்கோள்களுக்கான திட்டங்கள்> கொள்கைகள் மற்றும் செயற்றிட்டங்களை ஒழுங்கமைத்துச் செயற்படுத்துதல்.
- முக்கிய முகாமைத்துவத் தொழிற்பாடுகள்
- திட்டமிடல்
- ஒழுங்கமைத்தல்
- ஒருங்கிணைத்தல்
- கட்டுப்படுத்ததல்
- இயக்குதல்
முக்கிய தொழிற்பாடுகள் (Important Functions)
- பாடசாலை நிர்வாகம் மற்றும் அதன் மூலோபாய திசையை நிறுவுதல் மற்றும் மேம்படுத்துதல்.
- கற்பித்தல் மற்றும் ஆய்வுகளுக்கு வழிகாட்டுதல் மற்றும் மேம்படுத்துதல்.
- பணிக்குழவினர்களுக்கு வழிகாட்டி, அபிவிருத்தி செய்தல் மற்றும் பணியாளர்கள் தொடர்பான பிரச்சினைகளை முகாமை செய்தல்.
- வினைத்திறனான திட்டமிடல்கள்> வருமானம் ஈட்டல்> வரவு செலவுத்திட்டம் மற்றும் செலவுக் கட்டுப்பாடு ஆகியவற்றின் மூலம் நிதி மற்றும் உள்கட்டமைப்பை முகாமை செய்தல்.
அதிபருக்குரிய தகுநிலைகளும் பொறுப்புக்களும்
(Qualities and Responsibilities)
- அதிபர் பாடசாலை நிர்வாக இயந்திரத்தின் அச்சாணி ஆவார்.
- பாடசாலை நிர்வாகம்> முகாமைத்துவம்> மற்றும் ஒழுங்கமைப்பின் முழுச் செயன்முறையிலும் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.
- முழு கல்வி நடவடிக்கைகளையும் நிரல்படுத்துதல்> செயற்றிட்டங்களைச் செயற்படுத்துதல்> கடமைகளையும் பொறுப்புக்களையும் பகிர்ந்தளித்தல்> செயற்பாடுகளை ஒருங்கணைத்தல் மற்றும் அவற்றை மதிப்பீடு செய்தல் போன்ற பணிகளை ஆற்றுகின்றார்.
- முழுமையான கல்வித் திட்டத்தின் சீரான> ஒழுங்கான மற்றும் இணக்கமான செயற்பாட்டை உறுதி செய்கின்றார்.
- பாடசாலை அதிபர் கட்டாயம் ஒரு ஆற்றல் மிக்க தலைவராக இருக்க வேண்டும். தரநிலைகளை அமைப்பதிலும்> பாடசாலையின் இலட்சியங்களை நிறுவுவதிலும் திறமையானவராக இருக்க வேண்டும்.
- பாடசாலையின் ஒட்டுமொத்த செயற்பாடுகளும் அவரையே சார்ந்தது. அவர் ஒழுங்கமைப்பாளர், ஆளுநர்> வணிக இயக்குனர்> ஒருங்கிணைப்பாளர்> மேலாளர்> முன்மாதிரியாளர்> நல்ல ஆசிரியர்> வழிகாட்டி> தத்துவவியலாளர் மற்றும் நண்பர். (P.C Wren)
- ஒரு கப்டன் ஒரு கப்பலில் முக்கிய பதவியை வகிப்பது போல பாடசாலையில் அதிபர் பதவி மிக மிக முக்கியமானதாகும். (Ryburn)
ஒரு அதிபருக்குரிய தகு நிலைகள்
(Qualities of the principal)
- தத்துவம்
- கலாசாரம்
- வளம் மேம்பாடு குறித்த நோக்கு
- நிர்வகிக்கும் ஆற்றல்
- புலமை
- தொழில் முறைப் பயிற்சி
- மக்கள் மீதான ஆர்வம்
- மற்றவர்களைத் தூண்டும் திறன்
தத்துவம்
- வாழ்க்கையின் உயர்ந்த இலட்சியங்கள் மீது நம்பிக்கையும்> தொழில் முறை இலட்சியங்களில் உண்மையான பக்தியையும் பேண வேண்டும்.
- வாழ்க்கை மற்றும் கல்வி பற்றி சிறந்த தத்துவத்தைக் கொண்டிருக்க வேண்டும்.
- தன்னலமற்ற செயல்> கடமையின் தீவிரம்> உளச்சமநிலை> மனிதாபிமானம் மற்றும் ஆன்மீக தத்துவங்களைப் பின்பற்ற வேண்டும்.
கலாசாரம்
- அவரது தோற்றம்> உள ஆரோக்கியம்> விழிப்புணர்வு> சாதுர்யம்> கண்ணியமான பழக்கவழக்கங்கள் அவருடைய நம்பிக்கையையும் மரியாதையையும் அதிகப்படுத்துகின்றன.
வளம் மேம்பாடு குறித்த நோக்கு
- கல்வித் திட்டம் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான முன்நிபந்தனைகள்.
- அனுபவம் மற்றும் கூர்மையான உணர்திறன்
நிர்வகிக்கும் ஆற்றல்
- இது அவரது ஒழுங்கமைக்கும் திறனால் வகைப்படுத்தப் படுகின்றது.
- பாடசாலைப்பணிகளைபுத்திசாலித்தனமாகத் திட்டமிடமிடுதல்.
- அதிகாரத்தை புத்திசாலித்தனமாகக் கையளித்தல்
- விரும்பிய தீர்மானங்களை எடுக்கவும் ஆற்றல்.
புலமை
பரந்த மற்றும் பொதுப் புலமை பெற்றவராக இருக்க வேண்டும். புலமை என்பது அவருக்குத் கீழ்வரும் அடிப்படையில் அவசியமாகும்.
- சிக்கலான சூழ்நிலைகளைப் புரிந்து கொண்டு கையாளுவதற்கு.
- பணியாளர்களை ஊக்கவிப்பதற்கு.
- உயர் மதிப்பு மற்றும் நற்பெயரை அனுபவிப்பதற்கு.
- கல்விப் புலத்தின் அனைத்து விடயங்களிலும் மதிப்பு மிக்க ஆலோசனை வழங்கவதற்கு தகுதி உள்ளவராய் இருப்பதற்கு.
- எழும் அவசர சூழ்நிலைகளில் ஆர்வத்தையும் தலைமைத்துவத்தையும் பேணுவதற்கு.
எனவே அதிபர் உளவியல்> தத்துவம்> சமூகவியல் பொருளாதார நெறிமுறைகளிலும் மிதமான அறிவுப் புலமை பெற்றிருக்க வேண்டும்.
தொழில் முறைப் பயிற்சி
- ஒரு பாடசாலையின் ஒழுங்கமைப்பு> மற்றும் நிர்வாகம் தொடர்பான கொள்கைகள் மற்றும் விடயங்களை நன்கு அறிந்திருத்தல்.
- ஆசிரியர் – மாணவர் உறவு மற்றும் ஒழுக்கம் ஆகியவற்றிலுள்ள சிக்கல்களை நன்கு அறிந்தவராகவும்> நன்கு பயிற்சிபெற்ற ஆசிரியராகவும் இருக்க வேண்டும்.
- பாடசாலையைப் பாதிக்கும் சட்டதிட்டங்களைப் புரிந்துகொள்ளக் கூடியவராக இருக்க வேண்டும்
- நிர்வாகம் முகாமைத்துவம் மற்றும் ஒழுங்கமைப்பு ஆகியவற்றின் பயனுள்ள கொள்கைகளை அறிந்திருக்க வேண்டும்.
மக்கள் மீதான ஆர்வம்
- தனது பணியாளர்களின் உறுப்பினர்களின் நலனில் உண்மையான அக்கறை எடுத்து அவர்களின் பிரச்சினைகளைப் புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும்.
- எப்போதும் ஒரு அனுதாப மனப்பான்மையை எடுத்து அவர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் உண்மையான மகிழ்ச்சியைக் காணவேண்டும்.
மற்றவர்களைத் தூண்டும் திறன்
- சக ஊழியர்களின் திறன்களை வளர்ப்பதில்> அவர்களைத் தூண்டுவதில் திறன்மிக்கவர்.
- இதற்காக அவர் தனது பணியாளர்களின் இலட்சியங்களை உயர்த்த வேண்டும்.
- இவ்வாறு செய்கின்ற போது அவர்கள் பாடசாலையில் மிகவும் பயனுள்ள வகையில் வேலை செய்வார்கள்.
- அதிபரது உத்வேக சக்தி மூலம் ஆசிரியர்கள் மிக உயர்ந்த கல்வித் தகைமைக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.
மேலும் வாசிக்க – 21 ஆம் நூற்றாண்டு கல்வியும் இலங்கைப் பாடசாலைகளும்