கல்வித்துறையின் சீர்திருத்தங்களின் படி, ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளின் கடினத்தன்மையைத் தளர்த்துவதற்கு கல்வி அமைச்சு தயாராகி வருகிறது.
எதிர்காலத்தில் பாட விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் எண்கள் மற்றும் எழுத்து அறிவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வினாத்தாள் தயாரிக்கப்பட உள்ளது.
இது தொடர்பில் விளக்கிய கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த, எழுதுவதற்கும் வாசிப்பதற்கும் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்பது கல்விமான்களின் அபிப்பிராயம் எனவும், சுற்றாடல் சார் செயற்பாடுகள் போன்ற பாடங்கள் தொடர்பான சில விடயங்களை உள்ளடக்க முடியும் எனவும் தெரிவித்தார்.
தற்போது தயாரிக்கப்பட்டு வரும் வினாத்தாள் மாணவர்களுக்கு அதிக கனதி கொண்டதாக இருப்பதாலும், தற்போதைய சூழ்நிலையில் குழந்தைகளின் திறமைகளை சீரான முறையில் அளவிடும் சூழ்நிலை இல்லாததாலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
தற்போதைய பரீட்சையின் மூலம் குழந்தைகளின் மனம் சிதைந்துவிடும் என்றும் அமைச்சர் கூறினார்.
අධ්යාපන ක්ෂේත්රයේ ප්රතිසංස්කරණවලට අදාළව පහ ශ්රේණියේ ශිෂ්යත්ව විභාග ප්රශ්න පත්රය ද ලිහිල් කිරීමට අධ්යාපන අමාත්යාංශය සූදානම් වෙයි.
මින් ඉදිරියට එම ප්රශ්න පත්රය සකස් කිරීමට නියමිතව ඇත්තේ විෂය කරුණුවලට ප්රමුඛතාව ලබා දීමකින් තොරව සංඛ්යා හා අක්ෂර පිළිබඳ දැනුමට වැඩි ප්රමුඛතාවක් ලබා දෙමිනි.
ලිවීමේ හා කියවීමේ හැකියාවට ප්රමුඛතාව දිය යුතුය යන්න විද්වතුන්ගේ අදහස වී තිබෙන බවත් පරිසරය වැනි විෂයයන්ට අදාළ කරුණු තරමකින් ඇතුළත් කිරීමට හැකි වන බවත් මේ සම්බන්ධයෙන් අප කළ විමසුමකට පිළිතුරු දුන් අධ්යාපන ඇමැති ආචාර්ය සුසිල් ප්රේමජයන්ත පැවසීය.
දැනට සකස් කෙරෙන ප්රශ්න පත්රය දරුවන්ට බර වැඩි හෙයින් මෙම පියවර ගන්නා බවත් දැනට පවතින තත්ත්වය යටතේ දරුවන්ගේ දක්ෂතා සමබරව මැනෙන තත්ත්වයක් දක්නට නැති බවත් ඇමැතිවරයා සඳහන් කළේය.
දැන් ක්රියාත්මකව පවතින තත්ත්වය යටතේ දරුවන්ගේ මනස විකෘති වන බවත් ඇමැතිවරයා කීවේය.