ஆசிரியர் தினத்திற்கு 300 ரூபா வழங்காமையினால் அதிபரால் தாக்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நுவரெலியா கல்வி வலயத்துக்குட்பட்ட கொட்டகலை – போகாவத்த பிரதேச பாடசாலையொன்றில் தரம் பத்தில் கல்வி பயிலும் மாணவியொருவரே அதிபரின் தாக்குதலுக்கு இலக்காகி காயங்களுடன் கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பின்னர் மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக கொட்டகலை பிரதேச வைத்திய அதிகாரி சாவித்ரி சர்மா தெரிவித்துள்ளார்.
பாடசாலையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆசிரியர் தின நிகழ்வுக்காக தனது சகோதரன் 300 ரூபா செலுத்தவில்லை எனத் தெரிவித்து, குறித்த அதிபர் மாணவியின் சகோதரனை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.
இதனையடுத்து மாணவி, சகோதரனை தகாத வார்த்தைகளால் திட்ட வேண்டாம் என்றும் எனது தந்தை அருகில் வேலை செய்வதால் அவரிடமிருந்து பணத்தை வாங்கித் தருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்தே அதிபர் குறித்த மாணவியை பிரம்பால் தாக்கியதாகவும் இதனையடுத்து பாடசாலைக்கு அருகில் வேலை செய்துகொண்டிருந்த மாணவியின் தந்தை, மகளின் அலறல் கேட்டு, பாடசாலைக்கு வந்து மாணவியைக் காப்பாற்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தாக்குதலுக்கு இலக்கான மாணவியுடன் தனக்கு 4 குழந்தைகள் இருப்பதாகத் தெரிவித்த தந்தை, பொருளாதார பிரச்சினையில் தான் இருப்பதுடன், தனது மனைவி வெளிநாட்டில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளதுடன், தனது மகள் தாக்கப்பட்டமை தொடர்பில் திம்புள்ள பத்தனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடையும் செய்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் பாடசாலை அதிபரிடம் வினவியபோது, ஒழுக்கம் விடயமாகவே குறித்த மாணவியை சிறு தடியொன்றினால் தாக்கியதாகத் தெரிவித்துள்ளார்
ගුරු දිනයට රුපියල් 300ක් නොගෙවීම නිසා විදුහල්පතිවරයාගේ පහරකෑමට ලක්වූ දැරිය රෝහල් ගතකර තිබෙනවා.
නුවරඑළිය අධ්යාපන කලාපයට අයත් කොටගල – භෝගවත්ත ප්රදේශයේ පාසලක 10 වැනි පන්තියේ ඉගෙනුම ලබන සිසුවියක් විදුහල්පතිවරයාගේ ප්රහාරයකට ලක්ව තුවාල ලබා කොටගල දිසා රෝහලට ඇතුළත් කර තිබේ.
පසුව වැඩිදුර ප්රතිකාර සඳහා දික්ඔය රෝහලට මාරුකර යවා ඇති බව කොටකල ප්රාදේශීය වෛද්ය නිලධාරී සාවිත්රි ෂර්මා මහත්මිය පැවසුවාය.
පාසලේ සංවිධානය කර තිබූ ගුරු දින උත්සවයට තම සහෝදරයා රුපියල් 300ක් නොදුන් බව පවසමින් විදුහල්පතිවරයා සිසුවාගේ සොහොයුරාට නොගැලපෙන වචනවලින් බැණ වැදී ඇත.
මෙයින් පසු සිසුවිය පැවසුවේ තම සොහොයුරාට නොගැලපෙන වචනයෙන් බැණ නොගත යුතු බවත් තමන්ගේ පියා වැඩ කරන්නේ අසල බැවින් ඔහුගෙන් මුදල් ඉල්ලා දෙන බවත්ය.
විදුහල්පතිවරයා විසින් සිසුවාට පොල්ලකින් පහරදී ඇති අතර දියණියගේ කෑගැසීම ඇසී පාසල අසල සේවය කරමින් සිටි සිසුවියගේ පියා සිසිසුවිය බේරා ගැනීමට පාසලට පැමිණ ඇති බවයි වාර්තා වන්නේ.
ප්රහාරයට ලක්වූ දැරිය සමඟ තමාට දරුවන් 4 දෙනෙකු සිටින බව ප්රකාශ කළ පියා තමාට ආර්ථික අපහසුතා ඇති බවත් තම බිරිඳ විදේශගතව සිටින බවත් තම දියණියට පහරදීම සම්බන්ධයෙන් පතන පොලිස් ස්ථානයට පැමිණිල්ලක් ද ගොනු කර ඇති බවත් සඳහන් කළේය.
මේ සම්බන්ධයෙන් පාසලේ විදුහල්පතිවරයාගෙන් විමසූ විට ඔහු කියා සිටියේ විනය ප්රශ්නයක් හේතුවෙන් මෙම සිසුවාට කුඩා පොල්ලකින් පහරදුන් බවයි.