புதிய அதிபர்களுக்கான சேவை ஆரம்ப பயிற்சி
புதிய அதிபர்களை பயிற்றுவிப்பதற்கான வளவாளர்களைப் பயிற்றுவிக்கும் அமர்வுகள் கடந்த வாரம் சிங்கள மொழியில் நடைபெற்றது. இவ்வாரம் திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய தினங்களில் தமிழ் மொழி மூலமான அமர்வுகள் நடைபெறுகின்றன.
புதிய அதிபர்களை பயிற்றுவிப்பதற்கான விடய உள்ளடக்கம்.
1. அதிபர் – நிர்வாகியாக – 3 நாட்கள்
2. அதிபர் -பெளதீக வள முகாமையாளராக – 4 நாட்கள்
3. அதிபர் – நிதி வள முகாமையாளராக – 2 நாட்கள்
4. அதிபர் – திட்டமிடலாளராக – 2 நாட்கள்
5. அதிபர் – கலைத்திட்ட முகாமையாளராக – 2 நாட்கள்
6. அதிபரின் வாண்மைத்துவம் – நாட்கள்
பயிற்சிக் காலம் – 2023.11.16 முதல் 2023 12.15
- முதல் கட்டம் -15 நாட்கள் – விரிவுரையும் செயன்முறைப் பயிற்சியும்
- இரண்டாவது கட்டம் – 5 நாட்கள் – பாடசாலை ஒன்றை மையப்படுத்தி 5 கருப்பொருளின் கீழ் ஒப்படை
- மூன்றாம் கட்டம் – 2 நாட்கள்
- பிரயோகப் பரீட்சை
- எழுத்துப் பரீட்சை
பயிற்சிகள் பின்வருமாறு அமையும்
- ஒப்படை
- தமது இருப்பிடத்திற்கு அண்மையில் பயிலுநரின் சேவை நிலையமல்லாத பாடசாலை ஒன்றில் அவர் இணைக்கப்படுவார்.
- ஒவ்வொரு கருப்பொருளுக்கும் ஒப்படை வழங்கப்படும்
- பாடசாலையை அவதானித்து 6 ஒப்படைகைளுக்குமான அறிக்கையைத் தயார் செய்ய வேண்டும்.
- அதில் ஒன்றைத் தெரிவு செய்து இறுதி முன்வைப்பை மேற்கொள்ள வேண்டும்.
- எழுத்துப்பரீட்சை
- கருப்பொருள்கள் 6 க்குமாக ஒவ்வொரு கருப்பொருளுக்கும் 20 நிமிடங்கள் வீதம் 2 மணித்தியாலத்திற்கான வினாத்தாள் வழங்கப்படும்.