யூரியா உரம் விற்பனை செய்து பெறப்பட்ட பணத்தில் இருந்து டிசம்பர் மாத சம்பளம் அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்டதாக விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் திரு.மகிந்த அமரவீர தெரிவித்தார்.
விவசாய அபிவிருத்தி திணைக்களம் கடந்த சிறு போகத்திலும் இந்த வருட பெரும் போகத்திலும் யூரியா உரங்கள் மற்றும் ஏனைய உரங்களை விற்பனை செய்து 10.05 பில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டியுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
இந்த பணம் திறைசேரிக்கு அனுப்பப்பட்டதாகவும், கடந்த டிசம்பரில் அந்த பணத்தில் ஒரு பகுதியை அரசு ஊழியர்களுக்கு உரிய சம்பளம் வழங்க அரசு பயன்படுத்தியதாகவும் விவசாய, வனவிலங்கு மற்றும் வனவள பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
விவசாய அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இந்த விடயங்களை வெளிப்படுத்தினார். 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட ஆவணத்தில் ஒதுக்கப்பட்ட நிதியைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் விவசாயத் திட்டங்கள் தொடர்பான மீளாய்வுக் கூட்டத்தில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
දෙසැම්බර් මාසයේ රාජ්ය සේවක වැටුප් ගෙවන ලද්දේ යුරියා පොහොර අලෙවියෙන් ලත් මුදල්වලින් බව කෘෂිකර්ම වනජීවි හා වනසම්පත් සංරක්ෂණ අමාත්ය මහින්ද අමරවීර මහතා පැවසීය.
පසුගිය යල කන්නයේ දී හා මෙවර මහ කන්නයේ දී යුරියා පොහොර හා අනෙකුත් පොහොර අලෙවි කිරීම මගින් රුපියල් බිලියන 10.05ක මුදලක් ගොවිජන සංවර්ධන දෙපාර්තමේන්තුව විසින් උපයා තිබෙන බව අමාත්යවරයා කීය.
එම මුදල් මහා භාණ්ඩාගාරය වෙත යොමු කරන ලද අතර පසුගිය දෙසැම්බර් මාසයේ දී රාජ්ය සේවකයින් සඳහා නියමිත වැටුප් ගෙවීම සඳහා එම මුදල්වලින් කොටසක් භාවිතා කිරීමට රජයට සිදු වූ බව කෘෂිකර්ම, වනජීවී හා වනසම්පත් සංරක්ෂණ අමාත්ය මහින්ද අමරවීර මහතා පැවසීය.
අමාත්යවරයා මෙම කරුණු අනාවරණය කළේ කෘෂිකර්ම අමාත්යාංශයේ දී පැවැති සාකච්ඡාවක දීය. 2023 වසර සදහා අයවැය ලේඛනයෙන් වෙන් කරන ලද මුදල් ප්රතිපාදන යොදා ගනිමින් සිදු කරන කෘෂිකාර්මික ව්යාපෘති පිළිබඳ සමාලෝචන රැස්වීමකදී අමාත්යවරයා මෙි බව කීය.