அடுத்த வருடத்திற்கான அரச சேவை ஆட்சேர்ப்பு நிறுத்தம்
அரச நிறுவனங்களுக்கு நிதி அமைச்சு அறிவிப்பு
அடுத்த வருடத்திற்கான அரச சேவை ஆட்சேர்ப்புக்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அனைத்து அரச நிறுவனங்களுக்கும் அறிவித்துள்ளது. அரசாங்கத்தின் வருவாய் சேகரிப்பு மற்றும் பெருகிவரும் செலவுகளில் குறிப்பிடத்தக்க குறைப்பே இந்த முடிவிற்கான காரணங்களாக குறிப்பிடப்பட்டுள்ளன.
இது தொடர்பான சுற்றறிக்கை ஒன்றை அரச நிறுவனங்களுக:கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இச்சுற்றறிக்கையின் படி, புதிய அலுவலக உபகரணங்களை கொள்வனவு செய்யக் கூடாது என்றும் அரச நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கான உத்தரவுகள், நிதி அமைச்சின் செயலாளர் கே.எம். மகிந்த சிறிவர்தனவினால் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
திணைக்களத் தலைவர்கள், அமைச்சின் செயலாளர்கள் மற்றும் மாகாண சபைகளின் பிரதம செயலாளர்கள் உட்பட்டவர்கள், அரச ஊழியர்களுக்கு வெளிநாட்டுப் பயிற்சிகளை வழங்குவதைத் தவிர்க்குமாறும் உள்ளூர் பயிற்சி மற்றும் முன்முயற்சிகளும் தேவைகளை கருதி கண்டிப்பாக கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.