நாட்டின் தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் நிலவும் சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில மொழி மூலமான ஆசிரியர் வெற்றிடங்களுக்காக அரச சேவையிலுள்ள பட்டதாரிகளை இலங்கை ஆசிரியர் சேவைக்கு சேர்த்துக்கொள்வதற்கான போட்டிப் பரீட்சை – 2023
மேற்படி போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்படுவதற்கான அறிவித்தல் 2023.01.27 ஆம் திகதி அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளதுடன், விண்ணப்பிப்பதற்கான இறுதித் திகதி 2023.02.10 ஆகும். இப் போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் applications.doenets.lk/exams எனும் இணையதளத்தில் பிரவேசித்து பரீட்சைக்கு விண்ணப்பித்தல் வேண்டும்.