இலங்கை திறந்த பல்கலைக்கழகம் நடாத்தும் பட்டப் பின் கல்வி டிப்ளோமா பாடநெறிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
பாடநெறி – பட்டப் பின் கல்வி டிப்ளோமா
அனுமதிக்கான தகைமைகள் :
1. அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமொன்றில் குறைந்தது 3 வருட காலத்தைக் கொண்ட இளமாணிப்பட்டம் பெற்ற பட்டதாரியாக அல்லது இலங்கை திறந்த பல்கலைக்கழக மூதவையினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட அதற்குச் சமனான தகைமை உடையவராகவும்
2. அங்கீகரிக்கப்பட்ட பாடசாலையில் ஆசிரியராக அல்லது அதிபராக அல்லது ஆசிரிய ஆலோசகராக அல்லது ஆசிரிய கல்வியியலாளராக அல்லது இலங்கை கல்வி நிர்வாக சேவை அலுவலராக தொழினுட்பக் கல்லூரிகள் ஆசிரியர் கலாசாலை போன்ற நிறுவனங்களில் முகாமையாளராக அல்லது தேசிய கல்வி நிறுவகத்தின் விரிவுரையாளராக இருத்தல்
பின்வருமாறு பிராந்திய நிலையங்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையான மாணவர்கள் தமிழ் மூலம் பாடநெறிக்கு உள்ளீர்க்கப்படுவர்
கொழும்பு – 135
கண்டி – 135
யாழ்ப்பாணம் – 180
அனுராதபுரம் – 45
குருணாகல் – 45
இரத்தினபுரி – 45
பண்டாவளை -45
மட்டக்களப்பு – 180
அம்பாறை – 90
வவுனியா – 90
திருகோணமலை – 90
ஹட்டன் – 90
புத்தளம் – 45
களுத்தறை – 45
கிளிநொச்சி – 45
பதுளை – 45
முல்லைத்தீவு – 45
மன்னார் 45
விண்ணப்பங்கள் எதிர்வரும் 10.01.2021 ஆம் திகதி முதல் 16.02.2021 வரை ஏற்றுக் கொள்ளப்படும்
விண்ணப்பங்கள் இலங்கை திறந்த பல்கலைக்கழக இணையத்தளத்தில் வெளியாகும். அதில் பிரசுரிக்கப்படும் இணைப்பின் ஊடாக விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.