கடந்த முறை விடைத்தாள்களை திருத்தம் செய்தவர்கள் இம்முறை பணிக்கு வரவில்லை என்றால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களின் சொத்துகளையும் பறிப்பேன்.
அடுத்த வாரத்திற்குள் ஆசிரியர்கள் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளில் ஈடுபட இணக்கப்பாட்டுக்கு வர மறுத்தால் அவசரச் சட்டத்தின் கீழ் கல்வி அத்தியாவசிய சேவையாக மாற்றப்பட்டு அவசர நிலமையின் கீழ் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எச்சரித்துள்ளார்.
கல்வி அமைச்சின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.
அங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பிள்ளைகளின் கல்வியை பணயமாக எடுத்துக்கொள்ளமாட்டோம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
உயர்தர பரீட்சை விடைத் தாள்களைத் திருத்தும் பணிகளுக்கான மாற்று யோசனைகள் மற்றும் உரிய வேலைத்திட்டங்களை இவ்வார இறுதிக்குள் அறிவிக்குமாறு கல்வி துறைசார் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
பரீட்சைப் பணிகளை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தத் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி இதன்போது அறிவுறுத்தியுள்ளார்.
விடைத்தாள் திருத்தும் பணிகளை முடக்குவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவும் ஆலோசனை வழங்கியுள்ளார்.
வருடாந்தம் 10,000 பொறியியல் பட்டதாரிகளையும் 5,000 மருத்துவ பட்டதாரிகளையும் உருவாக்க அரச மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் ஒன்றிணைந்து நடவடிக்கை. எந்தவொரு குழுவினரும் பாடசாலை மாணவர்களை பணயக் கைதிகளாக பயன்படுத்த இடமளிக்கபோவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
கல்வி மற்றும் உயர்கல்வி, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சுக்களின் 2023 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட யோசனைகள் தொடர்பிலான பகுப்பாய்வுக் கூட்டம் இன்று (19) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பரீட்சைப் பணிகளை அத்தியாவசிய செயற்பாடுகளாக முன்னெடுத்துச் செல்வதற்கு அவசியான சட்ட ஏற்பாடுகளை ஏற்படுத்த எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, கடந்த வருடம் பரீட்சை விடைத்தாள்களைத் திருத்தும் பணிகளில் ஈடுபட்ட குழுவினரை, கொண்டு இம்முறை விடைத் தாள்களைத் திருத்தும் பணிகளை முன்னெடுக்குமாறும் பணிப்புரை விடுத்தார்.
கடந்த வருடம் விடைத்தாள் திருத்தும் பணிகளில் ஈடுபட்டவர்கள் இம்முறையும் வர வேண்டும். இல்லைேயேல் அவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்து சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என்றார்
உயர்தர பரீட்சை விடைத்தாள்களைத் திருத்தும் பணிகளுக்கான மாற்று யோசனைகள் மற்றும் உரிய வேலைத்திட்டங்களை இவ்வார இறுதிக்குள் அறிவிக்குமாறு அறிவுறுத்திய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பரீட்சைகள் தொடர்பிலான பணிகளை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தத் தேவையான பணிகளை முன்னெடுக்குமாறும் கல்வி துறைசார் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
இப்பணிகளில் ஈடுபட மறுப்போருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இது தொடர்பில் சட்டமா அதிபருடன் கலந்தாலோசிக்க உள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
கல்வி அமைச்சர் இது தொடர்பில் அறிவித்துள்ள விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்து அதற்குரிய அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் கல்வித் துறைசார் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி வலியுறுத்தினார்.
கல்வி மற்றும் உயர்கல்வி, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சுக்களின் 2023 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட விஷேட யோசனைகளின் முன்னேற்றங்கள் குறித்தும் இதன்போது பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டது.
கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சையில் அதிக மதிப்பெண்களை பெற்றுக்கொள்ளும் மாணவர்களில் குறைந்தபட்சம் வருடத்திற்கு நால்வரையேனும் ஒக்ஸ்போர்ட், கேம்பிரிஜ் மற்றும் ஹார்வட் பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பி வைப்பதற்கான வேலைத்திட்டம் ஒன்றைத் தயாரிப்பது தொடர்பில் ஆலோசனைகளை வழங்கிய ஜனாதிபதி, வருடாந்தம் மாணவர் எண்ணிக்கையில் அதிகரிப்பை ஏற்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் அறிவுறுத்தினார்.
அரச பல்கலைக்கழகங்களைப் போன்றே தனியார் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் அவ்வாறான வாய்ப்புக்களைப் பெற்றுக்கொடுக்கும் அதேநேரம், தொழில்நுட்ப கல்வியில் மாணவர்களை அதிகளவில் ஈடுபடுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
உயர் கல்வி மற்றும் சாதாரண தர கல்வி வசதிகள் கொண்ட சகல பாடசாலைகளுக்கு, இணைய வசதிகளை பெற்றுக்கொடுப்பதற்கான வேலைத்திட்டமொன்றை முன்மொழியுமாறு தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
அதேபோல் வருடாந்தம் 10,000 பொறியியல் பட்டதாரிகளையும் 5,000 மருத்துவ பட்டதாரிகளையும் உருவாக்குவதற்கான வேலைத்திட்டமொன்றை அரசாங்க மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் இணைந்து முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்திய ஜனாதிபதி அதற்குரிய குழுவொன்றை நியமித்து அறிக்கையொன்றை சமர்பிக்குமாறும் அறிவுறுத்தினார்.
மேலும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் 350இற்கும் மேற்பட்ட தொழில்நுட்ப மற்றும் தொழில் பயிற்சி கல்லூரிகளை ஒன்றிணைத்து வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுப்பதன் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
நடைமுறையிலிருக்கும் தொழிலாளர் சட்டம் தொழிலாளர்களுக்கு அவசியமான பல்வேறு மூலங்களை கொண்டுள்ளதால், அதற்கு மாறான தனிப்பட்ட தொழில்முறைச் சட்டம் (Unified Labor Law) ஒன்றை உருவாக்கப்பட வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்த ஜனாதிபதி, அதற்கு அவசியமான சட்டமூலத்தை மே மாதத்திற்குள் சமர்பிக்குமாறு தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
පාසල් සිසුන් ප්රාණ ඇපකරුවන් බවට පත්කර ගැනීමට කිසිසේත් ඉඩ දෙන්නේ නැහැ
උසස් පෙළ පිළිතුරු පත්ර ඇඟයීම සම්බන්ධව මෙම සතිය අවසන් වීමට පෙර විකල්ප යෝජනා හා විසඳුම් ඇතුලත් නිශ්චිත වැඩපිළිවෙලක් ඉදිරිපත් කරන්න- ජනපතිගෙන් අධ්යාපන බලධාරින්ට උපදෙස්.
විභාග සම්බන්ධ කාර්යයන් අත්යාවශ්ය සේවාවක් ලෙස නම් කිරීමට පියවර
පිළිතුරු පත්ර ඇඟයිම් කටයුතු අඩාල කළහොත් නීතිමය ක්රියාමාර්ග
වර්ෂයකට ඉංජිනේරු හා තාක්ෂණ උපාධිධාරීන් 10,000ක් හා වෛද්ය උපාධිධාරීන් 5,000ක් බිහිකිරීම සඳහා රාජ්ය හා පෞද්ගලික විශ්වවිද්යාල ඒකාබද්ධ වැඩපිළිවෙළක්
පාසල් සිසුන් විවිධ කණ්ඩායම්වල ප්රාණ ඇපකරුවන් බවට පත්කර ගැනීමට කිසිසේත් ඉඩ නොතබන බව ජනාධිපති රනිල් වික්රමසිංහ මහතා අවධාරණය කළේය.
උසස් පෙළ පිළිතුරු පත්ර ඇඟයීම් සම්බන්ධයෙන් මෙම සතිය අවසන් වීමට පෙර විකල්ප යෝජනා හා විසඳුම් ඇතුලත් නිශ්චිත වැඩපිළිවෙලක් ඉදිරිපත් කරන ලෙස අධ්යාපන බලධාරීන්ට උපදෙස් දුන් ජනාධිපතිවරයා විභාග සම්බන්ධ කාර්යයන් අත්යාවශ්ය සේවාවක් ලෙස නම් කිරීමට අවශ්ය පියවර ගන්නා බව ද ප්රකාශ කළේය.
ජනාධිපති රනිල් වික්රමසිංහ මහතා මේ බව සඳහන් කළේ අධ්යාපන හා උසස් අධ්යාපන, කම්කරු සහ විදේශ රැකියා අමාත්යාංශවල 2023 වර්ෂයේ ක්රියාත්මක කරන ලද විශේෂ අයවැය යෝජනාවල ප්රගතිය සමාලෝචනය වෙනුවෙන් අද (19) පෙරවරුවේ ජනාධිපති කාර්යාලයේ පැවති සාකච්ඡාවට එක් වෙමිනි.
විභාග කටයුතු හදිසි සේවාවක් ලෙස පවත්වාගෙන යාමට අවශ්ය නිති සම්පාදනය කිරීමට ද අපේක්ෂා කරන බව පැවසූ ජනාධිපතිවරයා පසුගිය වසරේ පිළිතුරු පත්ර ඇඟයීම සඳහා සම්බන්ධ වු කණ්ඩායමම යොදා ගනිමින් මෙවර උසස් පෙළ පිළිතුරු පත්ර ඇඟයීම් කටයුතු සිදු කරන ලෙස ද උපදෙස් දුන්නේය.
එම කටයුතු සඳහා සහභාගී නොවුනහොත් අදාළ පාර්ශ්වයන්ට එරෙහිව නීතිමය පියවර ගැනීමට අපේක්ෂා කරන බවත්, ඒ පිළිබඳ නීතිපතිවරයා සමග ද සාකච්ඡා කරන බවත් ජනාධිපති රනිල් වික්රමසිංහ මහතා සඳහන් කළේය.
අධ්යාපන අමාත්යවරයා මේ සම්බන්ධව කර ඇති ප්රකාශය පිළිබඳව ද අවධානය යොමු කර ඒ අනුව ඉදිරි කටයුතු සැලසුම් කරන ලෙසද ජනාධිපතිවරයා අධ්යාපන බලාධාරින්ට දැනුම් දුන්නේය.
අධ්යාපන හා උසස් අධ්යාපන, කම්කරු සහ විදේශ රැකියා අමාත්යාංශ වල 2023 වර්ෂයේ ක්රියාත්මක කරන ලද විශේෂ අයවැය යෝජනාවල ප්රගතිය මෙහිදී දීර්ඝ ලෙස සමාලෝචනයට ලක් කෙරිණි.
අපොස උසස්පෙළ විභාගයෙන් ඉහළම ලකුණු ලබා ගන්නා සිසු සිසුවියන් අතරින් අවම වශයෙන් වසරකට සිසුන් සිව් දෙනෙකු හෝ ඔක්ස්පර්ඩ්, කේම්බ්රිජ් හා හාවඩ් වැනි විදේශීය විශ්වවිද්යාල වල උපාධි පාඨමාලා සඳහා ඇතුළත් කර ගැනීමේ වැඩපිළිවෙළක් සකස් කිරීම පිළිබඳ මෙහිදී නිලධාරින්ට උපදෙස් දුන් ජනාධිපතිවරයා වාර්ෂිකව එම සංඛ්යාව ඉහළ නංවා ගැනීමට කටයුතු කිරීමේ අවශ්යතාවය ද පෙන්වා දුන්නේය. රාජ්ය මෙන්ම පෞද්ගලික විශ්වවිද්යාල සිසුන්ට ද එම අවස්ථාව ලබාදීමටත්, තාක්ෂණික විෂයන් සඳහා සිසුන් වැඩි පිරිසක් යොමු කිරීමේ වැදගත්කමත් මෙහිදී අවධාරණය කෙරිණි.
උසස් පෙළ සහිත පාසල් වලට සහ අනතුරුව සාමාන්ය පෙළ දක්වා අධ්යාපන පහසුකම් ඇති සියලු පාසල්වලට වසර දෙකක් තුළ අන්තර්ජාල පහසුකම් ලබාදීමට අවශ්ය වැඩපිළිවෙළක් සකස් කරන ලෙස මෙහිදී ජනාධිපති රනිල් වික්රමසිංහ මහතා විදුලි සංදේශන නියාමන කොමිෂන් සභාවට (TRC) උපදෙස් දුන්නේය.
වර්ෂයකට ඉංජිනේරු හා තාක්ෂණ උපාධිධාරීන් 10,000ක් හා වෛද්ය උපාධිධාරීන් 5,000ක් බිහිකිරීම සඳහා රාජ්ය හා පෞද්ගලික විශ්වවිද්යාල ඒකාබද්ධ වැඩපිළිවෙලක් සකස් කරන ලෙස උපදෙස් දුන් ජනාධිපතිවරයා මේ සඳහා සුදුසු කමිටුවක් පත් කර ගනිමින් වාර්තාවක් සකස් කර ඉදිරිපත් කරන ලෙස ද දැනුම් දුන්නේය.
එමෙන්ම 350කට අධික රජය යටතේ පාලනය වන තාක්ෂණ සහ වෘත්තීය පුහුණු ආයතන ඒකාබද්ධ කර පුහුණු වැඩසටහන් ක්රියාත්මක කිරීමේ අවශ්යතාවය ද ජනාධිපතිවරයා පැහැදිළි කළේය.
පවතින කම්කරු නීති කම්කරුවන්ට බලපාන මූලාශ්ර රැසකින් සමන්විත වන බැවින් ඒ වෙනුවට ඒකාබද්ධ තනි කම්කරු නීතියක් (Unified Labor Law) සකස් කිරීමේ අවශ්යතාවය පෙන්වා දුන් ජනාධිපති රනිල් වික්රමසිංහ මහතා එය බලාත්මක කිරීම සඳහා අවශ්ය පනත් කෙටුම්පත එළැඹෙන මැයි මාසය වන විට ඉදිරිපත් කරන ලෙස කම්කරු හා විදේශ රැකියා පිළිබඳ අමාත්යාංශයේ නිලධාරින්ට උපදෙස් දුන්නේය.
එම්.එල්.ඒ.එම්. හිස්බුල්ලා මහතා විසින් ආරම්භ කර ඇති නැගෙනහිර පෞද්ගලික විශ්වවිද්යාලය පිළිබඳ සොයා බැලීමට රාජ්ය ඇමති සීතා අරඹේපොල මහත්මියගේ ප්රධානත්වයෙන් පත්කර ඇති අනු කමිටුවේ කටයුතු පිළිබඳව ද මෙහිදී සාකච්ඡාවට ලක් විය.
ජාතික ආරක්ෂාව පිළිබඳ ජනාධිපති ජ්යෙෂ්ඨ උපදේශක හා ජනාධිපති කාර්ය මණ්ඩල ප්රධානි සාගල රත්නායක, ජනාධිපති ලේකම් සමන් ඒකනායක, ආර්ථික කටයුතු පිළිබඳ ජනාධිපති උපදේශක ආචාර්ය ආර්.එච්.එස්. සමරතුංග, මුදල් අමාත්යාංශයේ ලේකම් මහින්ද සිරිවර්ධන, අධ්යාපන අමාත්යාංශයේ ලේකම් එම්.එන්. රණසිංහ, කම්කරු හා විදේශ රැකියා අමාත්යාංශයේ ලේකම් ආර්.පී.ඒ. විමලවීර, පරිසර අමාත්යාංශයේ ලේකම් වෛද්ය අනිල් ජාසිංහ යන මහත්වරු ඇතුළු අමාත්යාංශ ලේකම්වරු සහ රාජ්ය නිලධාරිහු මීට එක්ව සිටියහ.