வாண்மைத்துவ உறவுகளும் அதனை ஊக்குவித்தலும்.
K. Suwarnarajah, Former President, Vavuniya National College of Education
ஆசிரியர்கள் மீது செல்வாக்கு பிரதான காரணிகள் எவை என நாம் சிந்திக்கும் போது பல்வேறு காரணிகள் எம் முன்னே தோன்றினாலும் பல்வேறு ஆசிரியர்களின் கருத்துக்களின்படி பாடசாலையின் தலைமைத்துவத்துடன் கொண்டுள்ள உறவு நிலை ஒரு முக்கியமான காரணியாக இருப்பது ஆய்வுகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.
தலைமைத்துவத்துடன் ஆசிரியர்கள் கொண்டிருக்கின்ற சிறப்பாhன உறவு நிலை, பாடசாலை பற்றிய காட்சித் தெளிவினை ஆசிரியர்கள் இலகுவாக பெற உதவுகின்றது. அத்துடன் பாடசாலையின் பணிகள் பற்றிய அர்ப்பணிப்பு உணர்வினை ஆசிரியர்களிடம் இலகுவாக விருத்தியாகின்றது.
மறுபுறத்தில் ஆசிரியர்கள், தமது பணிகள், பொறுப்புக்கள், தொடர்பான உடனடி பின்னூட்டல்களையும் நேரடியாக தலைமைத்துவத்திடமிருந்து பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புக்கள் உருவாகின்றன. ஆனால் பாடசாலை தலைமைத்துவத்துடன் ஆசிரியர் கொண்டிருக்கின்ற தொடர் முரண்பாடுகள், நிகழும் சிக்கலான தொடர்புகள், நட்பு ரீதியற்ற விமர்சனங்கள் ஆகியன ஆசிரியர்களின் வினைத்திறனில் பல்வேறு மோசமான விளைவுகளையும் ஏற்படுத்துகின்றன.
பாடசாலை தலைவர் ஒருதனி நபர் என நோக்குமிடத்து அவரிடம் காணப்படும் குறைபாடுகள், பொருத்தமற்ற போக்குகள் ஆசிரியர்களுக்கு வெறுப்பினை ஏற்படுத்துவதாக அமையலாம். அந்த பொருத்தமற்ற போக்குகளை ஒரு தனிநபர் நிலையிலிரு;து மாற்றியமைததுவிட முடியாது. ஆனால் பாடசாலை தலைமைத்துவம் ஒருபணி சார்ந்த, இலக்கு சார்ந்த, பல்வேறு வகைக் கூறல்களை உள்ளடக்கிய நடிபங்கு என ஆசிரியர்கள் உணர்ந்து அதனை நாடும் போதும் தனிநபர் குறைபாடுகளை பொருத்தமற்ற போக்குகளை மாற்றியமைத்து நல்ல உறவு நிலையினை உருவாக்கக்கூடிய சாத்தியம் எழுகின்றது எனலாம்.
உதவுதல், உதவிகளைப் பெற்றுக்கொள்ளுதல், சாதித்தல், சாதிக்க உடன் நிற்றல், என்றவாறு நோக்கும்போது பாடசாலையின் வெற்றிகரமான நிலைக்கு ஒவ்வொரு ஆசிரியரும் எவ்வாறு உதவிட முடியும் என்பதோடு ஆசிரியர் சிறப்பாக பணியாற்ற பாடசாலை தலைமைத்துவத்திடமிருந்து எவ்வாறான உதவிகளைச் இலகுவாக பெற்றுக்கொள்ள முடியும். என்பதும் இதனுள் அடங்குகின்றது.
தனிமனித சாதனையின் பின்னே மறைந்து நிற்கும் குழு முயற்சிகள், ஒத்துழைப்புக்கள் பற்றிய நோக்குகள், சாதித்தல், சாதிக்க உடன் நிற்றல் என்ற பரஸ்பர விருத்திக் கோட்பாட்டினை உருவாக்குகின்றது எனலாம்.
வாண்மைத்துவம்
நாம் வாழும் சமூகத்தின் முன்னேற்றத்திற்கும் மகிழ்ச்சியான வளமிகு வாழ்வுக்கும் அடிப்படையான சேவைகளை வழங்கும் தொழில்களை வாண்மைத்துவ மிகு தொழில்கள் எனலாம். வாண்மைத்துவம் சமூகத்திற்கு சேவையாற்றல் சம்பந்தமான உணர்வினைக் கொண்டிருப்பதோடு தொழில் சார்ந்த அர்ப்பணிப்பினையும் கொண்டுள்ளது எனலாம்.
வாண்மைத்துவம் பற்றிய மற்றுமொரு கண்ணோட்டம் பின்வருமாறு அமைகின்றது. பொதுவான ஒருவர் பெற்றுள்ள அறிவு, திறன், மனப்பாங்கினை விட மிகையான அறிவு, திறன், மனப்பாங்கிளை வாண்மையாளர் கொண்டிருப்பர் என்பதாகும். அதாவது தன்னிடம் சேவையைப் பெற வரும் பயனாளிகளை விட அச்சேவையை வழங்கும் வாண்மையாளர் அறிவு, திறன், மனப்பாங்கில் விருத்தி மிக்கவராக இருப்பர் என்பதாகும்.
வாண்மைத்துவம் பற்றி நாம் சிந்திக்கும் போது ஆசிரியர்களையும் வாண்மையாளர்களாக ஏற்றுக் கொள்வதில் இன்னமும் சமூகம் பல்வேறு வரையறைகளை விதித்து நிற்கின்றது எனலாம். இதற்கு காரணம் எல்லா ஆசிரியர்களும் வாண்மையாளர்களுக்குரிய அறிவு, திறன், மனப்பாங்கு, மற்றம் பண்புகளைக் கொண்டுள்ளனரா என்ற சந்தேகமே ஆகும். ஆசிரியர் ஒரு அரை வாண்மையாளர்கள் என நோக்கப்பட்டாலும் ஆசிரியர்களிடத்தே வாண்மைத்துவத்திற்குரிய பண்புகள் அதிகம் காணப்படுவதால் இக்கட்டுரை ஆசிரியர் வாண்மையானவர்கள் என்ற கருத்திலேயே தொடருகின்றது.
வாண்மைத்துவ உறவுகள்
பாடசாலை மட்டத்தில் பாடசாலையின் தலைவர் என்றழைக்கப்படும் அதிபரும், அங்கு கடமையாற்றும் ஆசிரியர்களும் வாண்மைத்துவ தொகுதிக்குள் உள்ளடக்கப்படுகின்றனர். பாடசாலை ஒரு சமூக நிறுவனம் என்ற நிலையில் சமூகத்தை போசித்து வளர்க்க Nவுண்டிய பணியின் தூண்டுதலாக பாடசாலையின் அதிபரும் அங்கு கடமையாற்றும் ஆசிரியர்களும் காணப்படுகின்றனர்.
இந்நிலையில் அதிபருக்கும் ஆசிரியர்களுக்கும் இடையிலான வாண்மைத்துவ உறவுகள் சிறப்பானதாகவும், நாகரீகம் மிக்கதாகவும் அமையாவிடின் அவர்கள் தம்மை வாண்மையாளர்களாக அடையாளம் காட்டிக் கொள்ள முடியாததோடு திருப்திகரமான பாடசாலையை உருவாக்கும் பணியிலும் தம்மை சிறப்பாக ஆட்படுத்திக்கொள்ள முடியாது.
கிடைக்கப்பெற்றுள்ள அதிகாரத்தினை உச்சமாகப் பிரயோகிக்க முயலும் நிலையில் எழும் நன்மைகளை விட தீமைகளே அதிகம் எனலாம். அதிகார பிரயோகம் அனேக சந்தர்ப்பங்களில் அதிகார து~;பிரயோகங்களாக மாறிவிடுகின்றன.
சிறப்பான பணி ஒன்றினை மேற்கொள்ள கூடிய நிபுணத்துவ அறிவுத் தொகுதியை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் வல்லமை கொண்டவராக ஒரு வாண்மையாளர் விளங்குகின்றார். அந்த அறிவுத் தொகுதியினை பிரயோகித்து அவர் ஆற்றும் பணிக்கும் செயலாற்றலுக்கும் போதிய கணிப்பும், ஊக்குவிப்பும் கிடைக்காவிடின், அப்பணியை ஆற்றுபவர் உளரீதியாக பாதிக்கப்படலாம். இதனால் அவர் கடமையாற்றும் நிறுவனத்தில் வாண்மைத்துவ உறவுகள் விருத்தியாகுவதற்குப் பதிலாக எதிர் மாறான ஒரு நிலைமையே உருவாகலாம்.
பாடசாலை மட்டத்தில் சிறப்பு தேர்ச்சிமிகு ஆசிரியர்களின் பணிகள் தலைமைத்துவத்தினால் போசிக்கப்படுவதற்கு பதிலாக, புறக்கணிக்கப்படும் நிலையும் காணப்படுகின்றது. உதாரணமாக உரிய ஆசிரியர்களின் சம்மதமின்றி நேரசூசியை மாற்றுதல், அவர் இதுவரை அடைந்திருக்கும் விசேட தேர்ச்சிகளை வெளிக்காட்டுவதற்கான சந்தர்ப்பங்களை திடடமிட்டு ஒடுக்குதல் என்பன விளக்கமற்ற தலைமைத்துவத்தினால் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளாக காணப்படுகின்றன. இதனால் பாடசாலை மட்டத்தில் வாண்மைத்துவ உறவுகள் பாதிப்படைகின்றன. இந்நிலைமை உரிய ஆசிரியர்களின் உள நிலைகளை பாதிப்பதோடு மட்டுமின்றி ஏனைய ஆசிரியர்களுடனான தொடர்பிலும் விரிசல்களை ஏற்படுத்துகின்றன எனலாம்.
வாண்மைப்பண்பு நலன்கள்
வாண்மைப்பண்பு நலன்கள் பேணப்படுதல் ஊடாக வாண்மைத்துவ உறவுகளை கட்டியெழுப்புதல் இலகுவானது. உறவு நிலைவிருத்திக்காக பேணப்படவேண்டிய வாண்மைப்பண்பு நலன்கள் வருமாறு.
1.எதை செய்தல், எதுவரை செய்தல் என்ற வரையறை தெளிவாக இருத்தல்
2.இவற்றுக்கு அடிப்படையான நிபுணத்துவத்தை வளர்ப்பதற்கு வாய்ப்புக்கள், வசதிகள்
தாராளமாக கிடைத்தல்
3.தொடர்ச்சியான சுய முன்னேற்றத்திற்கு வாய்ப்புக்கள் கிடைத்தல்
4.ஆற்றும்பணி சிறப்பாக கணிப்பிடப்படுவதற்குரிய ஒரு திட்டம் காணப்படல். தொழில் புரிவோர், தொழில் கொள்வோரால் கண்ணியமாக நடத்தப்படல்
5.வாடிக்கையாளர் முன்னால் கௌரவமாக நடத்தப்படல் போன்றவற்றை உள்ளடக்கியது எனலாம்.
இன்று சில பாடசாலை ஆசிரியர்கள் தமது தொழில் ஆற்றல்களை விருத்தியாக்குவதற்கு பாடசாலை மட்டத்தில் போதிய உதவிகள் ஒத்துழைப்புக்கள் கிடைக்கப் பெறாத நிலையில் காணப்படுகின்றனர். இந்நிலை பற்றி நோக்கினால் பாடசாலை அதிபர்கள் ஆசிரியர் வாண்மைத்துவ விருத்தி பற்றி அறியாத நிலையில் இருத்தல் அல்லது ஆசிரியர் விருத்திப்பற்றிய அக்கறை குறைந்தவராக இருத்தல் என்பன காரணமாக அமைகின்றன .இவை இரண்டுமே வாண்மைத்துவ உறவுகளில் எதிர் தாக்கங்களை உருவாக்கக் கூடும்.
பாடசாலை மட்டத்தில் வாண்மைத்துவ உறவுகளை ஊக்குவிப்பதற்கு தேவையான விடயங்கள்
1.பரஸ்பரம் ஒருவரை ஒருவர் மதித்துச் செயற்படல்.
2.தனியாட்களை விமர்சிப்பதை தவிர்த்து, கருத்துக்களை எண்ணங்களை விமர்சிக்கும் நல்ல
நிலை ஏற்படல்.
3.ஒவ்வொருவரை ஒருவர் அவதானமாக செவிமடுக்கும் ஆற்றலை விருத்தியாக்குதல்.
4.மற்றவர்கள் விளக்கும் வரை காத்திராது தாமாகவே விளங்கிக் கொள்வதற்கு முயற்சிக்கும்
அல்லது தேடும் திறன் உருவாகுதல்.
5.எண்ணங்களினுடான உணர்வுகளின் ஊடான, வினாக்களினூடனான பங்களிப்பு தொடர்ச்சியாக வழங்கப்படும் சூழல் உருவாகுதல்.
6.திறந்த மனத்துடன் செயற்படல்
7.பொறுப்புக்களை பகிர்ந்துக்கொள்ளல்
8.எல்லாக் கலந்துரையாடல்களிலும் தவறாது பங்குக்கொள்ளல் என்பதாக அமைகின்றது.
உறவுநிலை விருத்திக்கான தடைகளும்,உறவுநிலையை விருத்தியாக்குவதற்கான நடத்தைகளும்.
வாண்மைத்துவ உறவு விருத்திக்கான பாடசாலை தலைமைத்துவம்
பாடசாலை வாண்மைத்துவ விருத்திக்கான பாடசாலை தலைமைத்துவம் பின்வரும் ஆசிரிய பண்புகளை இனங்கண்டு க் கொள்ள வேண்டும். அவையாவன
· பாடசாலை தொலைநோக்கும் விழுமியங்களும்
· அறிவுநிலையும் விளக்கமும்
· தனித்திறமைகளும் சமூக மற்றும் ஆளிடை திறன்கள்
· உன்னதமான கற்றல் கற்பித்தல்
· உறவுநிலை மேலாங்கிய ஆசியர் குழாமும் மாணவர் விருத்தியும்
அடுத்து பாடசாலை வாண்மைத்துவ விருத்திக்கான பாடசாலை தலைமைத்துவம் பின்வரும் பண்புகளைக் கொண்டிருக்க வேண்டும்.
1. சாதனைகளை பாராட்டுதல்
2. அங்கீகாரமளித்தல்
3. சுவாரசியத்தை உருவாக்குதல்
4. பொறுப்புக்களை ஒப்படைதல்
மேற்கண்டவாறு பாடசாலை தொலை நோக்கும் விழுமியங்களுடன் ஆசிரியர்கள் பற்றிய அறிவுநிலையும் விளக்கமும் எனபன இணைக்கப்பட்டு ஆசிரியர்களின் தனித் திறமைகளும் சமூக மற்றும் ஆளிடை திறன்கள் எனபன இனங்காணப்பட்டு அதன் ஊடாக அவர்களது சாதனைகளைப் பாராட்டுதல், செயற்பாடுகளுக்கு உரிய அங்கீகாரமளிக்கப்படல்,கற்றல்- கறபித்தில் சுவாhசியத்தை உருவாக்குதல், உரியவாறு ஆசிரியர்களுக்கு பொறுப்புக்களை ஒப்படைத்தல் எனபனவற்றின் ஊடாக உன்னதமான கற்றல் கறபித்தலையும் உறவுநிலை மேலாங்கிய ஆசிரியர் குழாமும் மாணவர் விருத்தியையும் ஏற்படுத்த முடியும்