பல்வேறு நிறுவனங்கள் முறைசாரா முறையில் தேசிய விருதுகளை வழங்குவதை தடுக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்ற அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
குறிப்பிட்ட முறைப்படி அரசாங்கம் வழங்கும் விருதுகளுக்கு மேலதிகமாக, பல்வேறு அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் இணைந்து விருதுகளை வழங்குவதை தடுக்கு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக அமைச்சரவைப் பேச்சாளர், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அரசு வழங்கும் தேசிய விருதுகளுக்கு சமமான அதே பெயர் கொண்ட விருதுகள் வழங்கப்படுகின்றன.
வர்த்தமானி அறிவித்தல்களில் குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறைகளுக்கு அமைவாக விண்ணப்பங்களை கோருவதன் மூலம் முறையான நடைமுறைகளின்படி தெரிவு செய்யப்படும் தகுதியுள்ள நபர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட வேண்டுமென அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (21) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
අමාත්ය මණ්ඩලය විවිධ ආයතන මගින් අවිධිමත් ලෙස ජාතික සම්මාන පිරිනැමීම වැළැක්වීම සඳහා පාර්ලිමේන්තු පනතක් සම්මත කිරීමට තීරණය කර ඇත.
කැබිනට් ප්රකාශක, ප්රවාහන, මහාමාර්ග සහ ජනමාධ්ය අමාත්ය, ආචාර්ය බන්දුල ගුණවර්ධන මහතා පවසා ඇත්තේ විශිෂ්ට ලෙස ඇගයිය යුතු තැනැත්තන් වෙත රජය මගින් නිශ්චිත ක්රමවේදයට අනුව ලබාදෙන සම්මානවලට අමතරව, විවිධ රාජ්ය නොවන සංවිධාන හා පුද්ගලයන් ද එම ජාතික සම්මානවලට සමාන නමකින් යුත් සම්මාන ප්රදානය කිරීමේ ඉඩකඩ වළක්වාමින්, ආණ්ඩුව පිරිනමන සම්මාන වඩා ගෞරවාන්විතව පිරිනැමීම මෙහි අරමුණ බවයි.
ඇමති මණ්ඩලය තීරණය කළ ඇත්තේ ගැසට් නිවේදනවල දක්වා ඇති පටිපාටීන්ට අනුගතව අයදුම්පත් කැඳවා, විධිමත් පටිපාටීන්ට අනුව තෝරාගන්නා සුදුස්සන් වෙනුවෙන් මෙම සම්මාන පිරිනැමිය යුතු බවයි.
රජයේ ප්රවෘත්ති දෙපාර්තමේන්තුවේදී අද (21) පැවති කැබිනට් තීරණ දැනුම්දීමේ මාධ්ය හමුව අමතමින් ඇමතිවරයා මේ බව පැවසුවේය