பாராளுமன்ற உறுப்பினர்களின் எரிபொருள் கொடுப்பனவு இரண்டு லட்சத்தால் அதிகரிப்பு

பாராளுமன்ற உறுப்பினர்களின் எரிபொருள் கொடுப்பனவு இரண்டு லட்சத்தால் அதிகரிப்பு


அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களின் எரிபொருள் கொடுப்பனவுகளும் திடீரென கிட்டத்தட்ட இரண்டு இலட்சத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி யாழ்ப்பாணம் போன்ற தொலைதூர பிரதேசங்களிலுள்ள ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு மாதாந்தம் எரிபொருளுக்காக கிட்டத்தட்ட இரண்டு இலட்சம் மேலதிக தொகை வரவு வைக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

மற்ற மாகாணங்களின் பாராளுமன்ற உறுப்பினர்களும் 100,000க்கு மேல் பெறுவார்கள்.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு வந்த எரிபொருள் கொடுப்பனவு கடந்த ஜூன் மாதம் வரை பழைய எரிபொருள் விலைக்கே மாற்றியமைக்கப்பட்டது.

பொருளாதார நெருக்கடி காரணமாக, முன்னாள் நிதியமைச்சர் திரு.பசில் ராஜபக்ஷவின் உத்தரவிற்கு அமைய, அதிகரித்த எரிபொருள் விலையின் அடிப்படையில் கொடுப்பனவு கொடுப்பனவு கடந்த காலங்களில் நிறுத்தப்பட்டது.

பொருளாதார நெருக்கடிகளை கருத்தில் கொண்டு புதிய எரிபொருளின் விலைக்கு ஏற்ப கொடுப்பனவு வழங்குமாறு பல பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்க அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

அந்த கோரிக்கைக்கு அமைய எரிபொருள் கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

எரிபொருள் பிரச்சினை காரணமாக வெகு தொலைவில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் சமீபகாலமாக பாராளுமன்றத்திற்கு வருவது மிகவும் குறைவாகவே இருந்ததாக கூறப்படுகிறது.

-லங்காதீப

SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!