கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேற்றை எதிர்வரும் ஜூன் மாதம் இறுதியில் வெளியிட எதிர்பார்ப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.
நேற்று (20) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போது அவர் இதனைக் குறிப்பிட்டார். உயர் தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளுக்கு விண்ணப்பித்துள்ள ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக அவர் கவலை தெரிவித்தார். இது பிரச்சினையாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மதிப்பீட்டுப் பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் நாளாந்தக் கொடுப்பனவு போதுமானதாக இல்லை எனவும் தற்போது வழங்கப்படும் 500 ரூபா நாளாந்தக் கொடுப்பனவை அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த கொடுப்பனவு ரூபாய் 3000 வரை உயர்த்துவற்கு கல்வி அமைச்சின் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ள போதிலும் அது வாய்மூல வாக்குறுதியே தவிர சுற்றுநிருபத்தின் அடிப்படையில் வெளியிடப்படவில்லை என ஆசிரியர் சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
පසුගියදා අවසන් වූ අ.පො.ස. උසස් පෙළ විභාගයේ ප්රතිඵල ලබන ජුනි මස අවසානයේ දී නිකුත් කිරීමට බලාපොරොත්තු වන බව විභාග කොමසාරිස් ජනරාල් අමිත් ජයසුන්දර පවසයි.
අද (20) කොළඹ පැවැති මාධ්ය හමුවකට එක්වෙමින් විභාග කොමසාරිස්වරයා සදහන් කළේ උසස් පෙළ උත්තර පත්ර පරීක්ෂාව සඳහා ගුරුවරුන් සැලකිය යුතු සංඛ්යාවක් අයදුම් නොකිරීමෙන් ගැටලුකාරි තත්ත්වයක් මතුව ඇති බවයි.
ඊට හේතුව ගුරුවරුන්ට ලබාදෙන දෛනික දීමනාව ප්රමාණවත් නොවීම වේ.
මේ අතර මේ වන විට ගුරුවරුන්ට රු. 500ක දීමනාවක් ලබාදෙන අතර එය කිසිසේත් ප්රමාණවත් නොවන බව ගුරුවරුන් සදහන් කර තිබේ.
එම දීමනාව රුපියල් 3000ක් දක්වා ඉහළ නැවීමට අධ්යාපන අමාත්යවරයා කැබිනට් මණ්ඩලයේ අනුමැතිය ලබාගත්ත ද එය පොරොන්දුවලට පමණක් සීමා නොකර චක්රලේඛයක් ලෙස නිකුත් කළ යුතු බව ගුරු සංගම් පවසයි.