பாடசாலை மேற்பார்வை/மதிப்பீட்டுச் செயன்முறை (School Supervision / Evaluation of Quality of Education)
A.M.Mahir (LLB , MDE , SLAuS)
கடந்த தொடரில் ஆராயப்பட்ட பாடசாலைக் குழுக்கள் தொடர்பான விடயங்களை முகாமைத்துவம் செய்வதில் மட்டுமன்றி உயிரோட்டமான ஒரு பாடசாலையின் முக்கிய / பிரதான இடத்தினை வகிப்பது மேற்பார்வையாகும்.
பாடசாலையின் செயற்பாடுகள் அனைத்தும் செவ்வனே நடைபெறுவதை அவதானிப்பதும், தேவையேற்படும் சந்தர்ப்பங்களில் மாற்றங்களை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு உத்திகளை கையாண்டு திட்டங்களை நடைமுறைப்படுத்துவதும் மேற்பார்வை மூலம் பெற்றுக்கொள்ளும் அனுகூலமாக அமையும்.
முன்னைய கட்டுரைகள் பாடசாலையில் தாக்கம் செலுத்தும் ஏனைய குழுக்கள் பாடசாலையின் உள்ளக் குழுக்கள் பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர் சங்கம் தொடர்பான பிரச்சினைகளும் தீர்வுகளும்
ஆனால் சமகாலத்தில் “மேற்பார்வை என்பது மேற்பார்வையாளர், தனது அதிகாரங்களை தவறாக பிரயோகிப்பதன் மூலம் பிழையான நடைமுறைகளை தேடிக்கண்டு பிடித்து பலரிடையே குறைகூறி விமர்சித்தல்” எனும் புதிய வடிவம் பெற்றுள்ளது. இதற்கான பிரதான காரணம் பொருத்தமற்றவர்கள் (மேற்பார்வை என்பது அதிகாரத்தை பிரயோகித்தல் எனும் மோசமான எண்ணக்கருவை உடையவர்கள்) மேற்பார்வை தரத்தினராக உள்வாங்கப்பட்டிருப்பதாகும்.
மேற்பார்வையின் வியாபகத்தை இவ்வாறானவர்களுக்கு தௌpவான முறையில் தெளிவுபடுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கின்றது.
மேற்பார்வையின் போது காணப்படும் குறைபாடுகளை சுட்டிக்காட்டுவது இலகுவான விடயமாகும். ஆனால் அவற்றிற்கான தீர்வூகளைப் பெற்றுக்கொடுக்க வழிகாட்டுவதே சிறந்த ஒரு மேற்பார்வையாளரின் பண்பாகும். இதற்கான உதாரணமாக பின்வரும் உண்மைச் சம்பவம் காணப்படுகின்றது.
உண்மைச் சம்பவம்: மாகாணப் பாடசாலையாக இருந்த காலப்பகுதிகளில் ஒரு பாடசாலையின் வருடாந்த அமுலாக்கல் திட்டம்இ வரவு செலவுத் திட்டம் போன்றவை அனுமதிக்காக வலயக் கல்வி / மாகாணக் கல்வி அலுவலகங்களுக்கு சமர்ப்பிக்கப்பட்டால், அவற்றில் ஏராளமான பிழைகள் சுட்டிக்காட்டப்படும். அதை நிவர்த்திப்பது தொடர்பாக எவ்வித ஆலோசனைகளும் வழங்கப்படாததுடன் அதன் அதிகாரிகள் ஆளுக்கு ஆள் பொறுப்புக்களை சாட்டி இவரிடம் கேளுங்கள், அவரிடம் கேளுங்கள் என்று அலைக்கழிப்பர். அவ்வாறே முட்டி மோதி பிழைகளை திருத்தம் செய்து சமர்ப்பித்தாலும் கூட, அவற்றிற்கான அனுமதி உரிய காலத்தில் கிடைக்கப்பெறாது. உரிய அதிபரை (அவ்வதிபர் பாடசாலையின் முன்னேற்றத்தில் அக்கறை கொண்டு நேர்மையாக செயற்படுபவர் என்பது குறிப்பிடத்தக்கது.) அலைக்கழிக்க வைப்பதில் குறிப்பிட்ட வலயக் கல்வி அலுவலகம் / மாகாணக் கல்வி அலுவலக அதிகாரிகளுக்கு அலாதிப் பிரியம் உண்டு.
-
Teachmore WhatsApp Group - https://bit.ly/teachmore4
-
Teachmore FB page - https://bit.ly/Teachmorefb
-
Telegram Group - https://t.me/teachmorelk
மேற்குறிப்பிட்ட அப்பாடசாலை தேசிய பாடசாலையாக மாற்றப்பட்டு நிரல் கல்வி அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்ட பின்னர் அவ்வதிபரை கல்வி அமைச்சின் அதிகாரிகள் வரவேற்ற முறையும்இ அப்பாடசாலையின் வருடாந்த அமுலாக்கல் திட்டம், வரவு செலவுத் திட்டத்தில் ஒரு சில பிழைகள் இருந்த போதிலும், அவைகள் எதிர்காலத்தில் எவ்வாறு திருத்தப்பட வேண்டும் என்ற அறிவுறுத்தல்களுடன் ஒரே தடவையில் அங்கீகரித்து வழங்கியமையும் மேற்கூறிய வலய / மாகாணக் கல்வி அலுவலக அதிகாரிகள் / ஊழியர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடமாகும்.
வலய / மாகாணக் கல்வி அலுவலக அதிகாரிகள், பாடசாலைகளுக்கு தேவையான விடயங்களை செய்துகொடுப்பதற்கு வசதிகளை ஏற்படுத்துபவராகவும், மாணவர், பாடசாலையின் முன்னேற்றத்துக்கு அனுசரணையாளராகவும், இருக்க வேண்டுமேயன்றி போலி கௌரவத்தையும், அதிகார தோரணையையும் கொண்டவர்களாக செயற்படக்கூடாது. “பதவியின் தரம் அதிகரிக்கும் போது கடமைகளும் பொறுப்புக்களும் வகைகூறுதலும் அதிகரிக்கவேண்டும்” எனும் எண்ணக்கருவிற்கு மாற்றமாக, வலய / மாகாண கல்வி அலுவலக அதிகாரிகள் சிலரின் எண்ணக்கரு “பதவியின் தரம் அதிகரிக்கும் போது, விழா மேடைகளையும், சபைகளையும் அலங்கரித்துக்கொண்டு தங்களுக்கு கிடைக்க வேண்டிய கௌரவமும், சமூக வலைத்தளங்களில் வலம் வருதலும் அதிகரிக்க வேண்டும்” என்பதாகும். இவ்வாறான மோசமான கலாச்சாரங்களில் இருந்து விலகி இதயசுத்தியுடன் தனது கடமைகளை நிறைவேற்ற உரிய அதிகாரிகள் வழிப்படுத்தப்படல் வேண்டும்.
தற்போதைய பாடசாலை மேற்பார்வை செயன்முறை பற்றி இனி ஆராய்வோம்.
பாடசாலை மேற்பார்வை எனும் போது அதனை இரு விதங்களாக எடுத்து நோக்கலாம்.
- பாடசாலை உள்ளக மேற்பார்வை.
- பாடசாலை வெளிவாரி மேற்பார்வை.
எவ்வாறாயினும், இவை இரண்டிற்குமிடையே பாரிய வேறுபாடுகள் காணப்படக்கூடாது. இவ்விரு விதங்களிலும் மேற்பார்வைத் தரத்தினர் வேறுபடலாமே தவிர மேற்பார்வை செய்யப்படும் விடயங்களில் வேறுபாடுகள் ஏற்படக்கூடாது.
ஒரு பாடசாலையில் எவற்றை, எவ்வாறு, எதன் அடிப்படையில், மேற்பார்வை செய்ய வேண்டும் என்ற விடயங்கள் உள்ளக மற்றும் வெளிவாரி மேற்பார்வையில் பொதுத்தன்மை வாய்ந்ததாக அமைதல் வேண்டும். அதற்காக கல்வி அமைச்சு பொதுவான சுற்றுநிருபங்களையும், வழிகாட்டல் கைந்நூல்களையும், அறிவுறுத்தல்களையும் வழங்கியுள்ளது. அவற்றிக்கு மேலதிகமாக பல மேற்பார்வைத் திட்டங்களை சில கல்வி வலய அலுவலகங்கள் தங்களின் அதிகாரத்தினை பாடசாலைகளில் பிரயோகிக்கும் நோக்கோடு நடைமுறைப்படுத்தி வருகின்றன.
கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் மேற்பார்வை செய்ய முயற்சிப்பதுடன் மனிதர்கள், கருவிகள், முறைமைகள் என்பவற்றை பொருத்தமாக இணைவுறச் செய்வது மேற்பார்வையில் அடிப்படையானதும், அவசியமானதுமாகும் என கல்வி அமைச்சின் 17 / 1991 ஆம் இலக்க சுற்று நிருபம் சுட்டிக்காட்டியுள்ளது.
அச்சுற்றுநிருபத்தில் மேற்பார்வை செய்யப்பட வேண்டியதும், அதற்காக பேணப்பட வேண்டியதுமான விடயங்களை இங்கே சுருக்கமாக குறிப்பிடுகின்றேன்.
- மேற்பார்வை திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டிய ஆவணங்கள்.
- நேரசூசி (Master / Class / Teacher Time Tables)
- வருடாந்த வேலைத்திட்டம் (Annual Plan)
- வருடாந்த பாடசாலை நாட்காட்டி (Annual School Calendar)
- கணக்குகள் / நிதிக்கூற்றுக்கள்
- மாணவர் அனுமதிப் புத்தகம் (Students Admission Register – C 32 )
- பாடக்குறிப்புக்கள் (Lesson Plan)
- பாட வேலைத்திட்டம் (Lesson Scheme Work)
- பாடப்பதிவூப் புத்தகம் (Record Book)
- கடமைப் பட்டியல்களும் அவை தொடர்பான ஆவணங்களும் (Duty Charts & Related Documents )
- வகுப்பு ரீதியான மாணவர் தொகை
- உரிய நாளுக்கான மாணவர் வரவு
- ஆசிரியர் தொகை
- உரிய நாளுக்கான ஆசிரியர் வரவு
- நிருவாகக் கட்டமைப்பு
- பொதுப்பரீட்சைப் பெறுபேறுகள்
- நேரசூசி
- பாட ஒதுக்கீட்டுக் கிரயம்
- வருடாந்த வேலைத்திட்டம்
- வகுப்பு தினவரவு இடாப்புக்கள் (C 31)
- புள்ளிப் பதிவுகள் (தவணை, விசேட பரீட்சைகள், பாடசாலை மட்டக் கணிப்பீடு)
- மாணவர் அனுமதிப்பதிவு
- அமைச்சின் தவணை நாட்கள் தொடர்பான சுற்றுநிருபத்திற்கேற்ப பாடசாலைத் தவணைகளும், பாடசாலை நடைபெற வேண்டிய நாட்களின் எண்ணிக்கையும் திட்டமிடப்படுதல் வேண்டும்.
- கோட்டக் கல்வி அலுவலரின் முறையான அனுமதி இன்றி அதிபர்களோ, ஆசிரியர்களோ, மாணவர்களோ தமது சேவையை தனிப்பட்ட நிறுவனங்கள் / தாபனங்களுக்கு வழங்குதல் கூடாது.
- அதிபர்களோ, ஆசிரியர்களோ, பாடசாலை சம்பவத்திரட்டுப் புத்தகத்தில் குறிப்பொன்றினை இடாது பாடசாலை நேரத்தில் பாடசாலையை விட்டு வெளியில் செல்லக் கூடாது.
- பாடசாலையின் “பேண்ட்” வாத்தியக் குழு (இசைக்குழு), தனி நடனக்குழு என்பவற்றை உற்சவங்களில் பாவிப்பது தொடர்பாக கல்வி, உயர்கல்வி அமைச்சின் 1990/14 ஆம் இலக்க 1990.04.30 ஆம் திகதிய சுற்றுநிருபம் பின்பற்றப்படல் வேண்டும். (குறிப்பு – பாடசாலை விழாக்கள் நடாத்துதல், பாடசாலை மாணவர்களை பொது விழாக்களில் பங்கு பெறச்செய்தல் மற்றும் பாடசாலையின் “பேண்ட்” வாத்தியப் பாவனை தொடர்பாக தற்போது கல்வி அமைச்சின் 50/2019 ஆம் இலக்க சுற்றுநிருபம் மற்றும் கல்வி அமைச்சின் 25/1995 ஆம் இலக்க சுற்றுநிருபங்கள் மேலதிக அறிவுறுத்தல்களைத் தருகிறது. அவை கட்டாயமாக பின்பற்றப்படல் வேண்டும். (அதை முழுமையாக வாசிக்க)
- பாடசாலையின் பலம், பலவீனங்களை இனம் காணுதல்.
- பலத்தை கொண்டு பலவீனங்களை குறைக்கும்ஃ நிவர்த்திக்கும் திட்டங்களை வகுத்தல்.
- பொருத்தமான / உரிய சுற்றுநிருபங்களைப் பின்பற்றுதல்
- பாடசாலையின் தேவைப்பாடுகளை இனம் கண்டு அவற்றை அடைந்துகொள்ளும் வகையில் குறிக்கோள்களாக மாற்றுதல்.
- அவை தொடர்பான திட்டங்களை வருடாந்த அமுலாக்கல் திட்டத்தில் உள்ளடக்குதல்.
- அதற்கான உத்தேச செலவு, தேவைப்படும் காலம், பொறுப்பாளர்களை தீர்மானித்தல்.
- பொறுப்பாளர்களுக்கான கடமைப் பட்டியல்களை தயாரித்தல்.
- திட்டத்தை கண்காணித்தல், மதிப்பிடல், மீளாய்வு செய்தல், பின்னூட்டல் வழங்குதல்.
- உள்ளக மேற்பார்வைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
- அங்கீகரிக்கப்பட்ட நேரசூசி அமுலில் உள்ளது.
- 06/2021 ஆம் இலக்க கல்வி அமைச்சின் சுற்றுநிருபத்தின் பிரகாரம் ஆசிரியர் பணிக்குழு ஒன்றை அமைக்கக்கூடிய ஆளணி காணப்படுகிறது
இச்சுட்டியுடன் தொடர்பான ஒரு பாடசாலையின் பலவீனங்கள் பின்வருமாறு,
- உள்ளக மேற்பார்வைக் குழுவிற்கான முறையான கடமைப் பட்டியல் ஒன்று காணப்படவில்லை.
- நேரசூசி மேற்பார்வை தொடர்பாக போதிய அறிவு மேற்பார்வைக் குழுவினருக்கு இல்லாமை.
- ஆசிரியர்களின் அதிகரித்த லீவின் காரணமாக பதில் பாட ஒழுங்குகளை மேற்கொள்ளுவதில் சிரமம்.
- மேற்பார்வைக் குழுவினரின் மேற்பார்வைச் செயற்பாடுகளை வலுவூட்டுதல்.
- ஆசிரியர்களின் மனப்பாங்குகளை மாற்றியமைப்பதன் மூலம் ஆசிரியர் வரவினை அதிகரித்தல்.
- வெளிவளவாளர்களைக் கொண்டு பயிற்சிக் கருத்தரங்குகளை நடாத்துதல்.
- மேற்பார்வை செய்யப்பட்ட விடயங்களை ஆவணப்படுத்த முறைமை ஒன்றை ஏற்படுத்துதல்.
- மேற்பார்வை தொடர்பான கடமைப்பட்டியலை தயாரித்து செயற்படுத்துதல்.
- இம்மதிப்பீட்டுச் செயன்முறையினை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக பாடசாலை மட்ட, கோட்ட / வலய மட்ட, மாகாண மட்ட கடமைக் கூறுகள் வரையறுக்கப்பட்டுள்ளன. (வாசித்து அறிக)
- பாடசாலை உள்ளக மதிப்பீட்டுக் கண்காணிப்புக் குழுவில் அதிபர் மற்றும் முகாமைத்துவக் குழு செயற்படுதல் வேண்டும்.
- குறைந்தபட்சம் வருடத்திற்கு ஒரு முறையேனும் உள்ளக மதிப்பீடு நடாத்தப்படல் வேண்டும்.
- சுற்றுநிருபத்தின் இணைப்பு 1 , 2 , 3 , 4 என்பவற்றைப் பூரணப்படுத்தி உரிய அலுவலகங்களுக்கு அனுப்பி வைத்தல் வேண்டும். அத்துடன் உள்ளக, வெளிவாரி மதிப்பீட்டு அறிக்கைகளை முறையாக கோவைப்படுத்தி வைத்திருப்பதுடன் மதிப்பீட்டுச் சிபாரிசுகளை உடனடியாக செயற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படல் வேண்டும்.
- மாகாண, வலய, கோட்ட மட்டங்களில் பாடசாலைகளில் உள்ளக, வெளிவாரி மதிப்பீட்டுச் செயன்முறைகள் தொடர்பான அவ்வவ் மட்டங்களுக்குரிய அறிவுறுத்தல்களை வழங்குதல் வேண்டும்.
- மாகாண, வலய, கோட்ட மட்டங்களில் பாடசாலைகளில் உள்ளக, வெளிவாரி மதிப்பீட்டுச் செயன்முறைகள் நடைபெறுகின்றனவா என்பதை அவ்வவ் மட்டங்கள் கண்காணித்தல் வேண்டும்.
- பாடசாலையால் முன்வைக்கப்படும் மதிப்பீட்டு அறிக்கைகள் தொடர்பாக, காரணிகளுக்கேற்ப பாடப் பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசர்கள் இணைந்து, கோட்ட, வலய மட்டங்களில் கலந்துரையாடி பின்னூட்டல் வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும்.
- பாடசாலையின் உத்தேச இலக்கை நோக்கி செயற்பாடுகள் நடைபெறுவதை உறுதிப் படுத்திக்கொள்ளுதல்.
- பாடசாலையின் பௌதீகஇ மனித வளங்களில் உச்ச விளைதிறனைப் பெற்றுக்கொள்ள வழிகாட்டுதல்.
- பாடசாலையின் ஒட்டுமொத்த செயற்பாடுகளின் பண்புரீதியான, அளவுரீதியான அபிவிருத்தி அல்லது பின்னடைவை அறிந்துகொள்ளுதல்.
- பாடசாலை செல்ல வேண்டிய திசையைத் தெளிவுடுத்துதல்.
- தவிர்த்துக்கொள்ளப்பட வேண்டிய பலவீனங்கள் தொடர்பாக அறிந்துகொள்ளல்.
- நிறுவனத்தின் பலம், பலவீனங்களைப் போன்றே ஏற்படக்கூடடிய தாக்கங்களையும் இனம்காணுதல்.
- பாடசாலையின் பங்கேற்றல் முகாமைத்துவப் பாங்கினை கட்டியெழுப்புவதற்கு வழி காட்டுதல்.
- காலைக்கூட்டம்
- வகுப்பு வட்டம்
- பாடசாலை அபிவிருத்திச்சங்கக் கூட்டம்
- விழாக்கள்
- திட்டமிடப்பட்ட கலந்துரையாடல்கள்
- 31/2014 சுற்றுநிருபத்தின் பிரதி
- உள்ளக மதிப்பீட்டுத் திட்டம் (31/2014 சுற்றுநிருபத்தின் பின்னிணைப்பு 01)
- உள்ளக மதிப்பீட்டுக்குழு உறுப்பினர்களின் பெயர்ப்பட்டியல்
- உள்ளக மதிப்பீட்டு புள்ளிச் சுருக்கமும் கல்விப்பண்புத்தர சுட்டி தயாரித்தலுக்கான படிவமும் (31/2014 சுற்றுநிருபத்தின் பின்னிணைப்பு 02)
- வருடாந்த கல்விப்பண்புத்தர சுட்டி தொடர்பான அறிக்கை (31/2014 சுற்றுநிருபத்தின் பின்னிணைப்பு 03)
- உள்ளக மதிப்பீட்டுக்கு அமைவாக பாடசாலை தொடர்பான வெளிப்பாட்டு அறிக்கை (31/2014 சுற்றுநிருபத்தின் பின்னிணைப்பு 04)
- உள்ளக / வெளிவாரி மதிப்பீடு தொடர்பாக கோட்ட, வலய, மாகாண, கல்வி அமைச்சு மட்டத்தில் கிடைக்கப்பெறும் அறிவுறுத்தல் கடிதங்கள்.
- உள்ளக மதிப்பீட்டு சுருக்க அறிக்கை.
- வெளியக மதிப்பீட்டு சுருக்க அறிக்கை
- துறைக்கான உள்ளக மதிப்பீட்டுகுழு உறுப்பினர்களின் பெயர்ப்பட்டியல்
- உரிய துறைக்கான உள்ளக மதிப்பீட்டுத் திட்டம்
- மதிப்பீட்டுப் படிவம்
- உரிய துறை தொடர்பாக பாடசாலையில் நடைமுறைப்படுத்துகின்ற வேலைத்திட்டங்கள்/செயற்திட்டங்கள் / செயற்பாடுகள் தொடர்பான தகவல்களும் சான்றுகளும், மதிப்பீட்டுக்குரிய சான்றுகள் தொடர்பாக பயன்பாட்டுக் குறிப்புக்களும்.
- பாடசாலையில் நடைமுறைப்படுத்தப்படுகின்ற பல்வேறு ஆவணங்கள்
- கடிதங்கள்
- புகைப்படங்கள்
- காட்சிப்படுத்தப்பட்டுள்ள தகவல்கள்
- ஞாபகார்த்தக வலயம்
- ஞாபகார்த்தக குறிப்புக்கள்
- கையொப்பப் படிவங்கள்
- செய்தித்தாள் அறிக்கைகள்
- கூட்டறிக்கைகளின் பிரதிகள்
- பணிக்குழுவினருடன் மாதாந்த / தவணை முடிவில் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தை நடாத்துதல்.
- அந்தந்த துறையின் முன்னேற்றத்தை மதிப்பிடுதல்.
- முன்னேற்றம் தொடர்பான அறிக்கைகளை பேணுதலும், பின்னூட்டல் வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துதலும்.
- முன்னுரிமை அடிப்படையில் அபிவிருத்தியடைய வேண்டிய விடயங்களை இனம் காணலும், அவற்றை வருடாந்தத் திட்டத்தில் உள்ளடக்குதலும்.
- பாடசாலையின் உள்ளக மதிப்பீடு உரிய முறையில் முன்னெடுக்கப்படுவதை பல்வேறு முறையியல்களிலினூடாக தொடர்ச்சியாகக் கண்காணித்தலும், பணிக்குழுவினரை மதிப்பீட்டிற்கு உட்படுத்துதலும்.
- பண்புத்தரத்தின் அபிவிருத்திற்கு பாத்திரமான சிறந்த செயற்பாடுகளை இனம்காணலும் அவற்றை முன்வைத்தலும்.
- முன்னேற்ற மீளாய்வுக் கூட்டங்கள் பற்றிய குறிப்புக்கள்.
- துறையொன்றின் நியத்திகள், சுட்டிகள் தொடர்பான கண்காணிப்புச் செயற்பாடுகள் பற்றிய குறிப்புக்கள்.
- ஒப்படைக்கப்பட்ட துறைகள் தொடர்பான பணிகள் பற்றிய குறிப்புக்கள்.
- பாடசாலையின் பண்புத்தரத்தைப் பேணுதல்
- பாடசாலையின் அபிவிருத்திக்கான ஆலோசனைகளை வழங்குதல்
- பின்னூட்டலுக்கான வாய்ப்புக்களை ஏற்படுத்துதல்
- பாடசாலை சமூகத்தின் கவனத்தை பாடசாலையின் பால் தூண்டுதல்
- உள்ளீடு மற்றும் வெளியீடு தொடர்பாக பாடசாலை முகாமைத்துவத்திலும், ஆசிரியர்களின் பொறுப்புக்கள், வகைகூறல் என்பனவற்றை தெளிவாக காண்பதற்கான பின்புலத்தை உருவாக்குதல்.
- பாடசாலையின் உள்ளக / சுய மதிப்பீட்டிற்காக தேவையான வசதிகளை ஏற்படுத்துதல்.
- பாடசாலையில் அபிவிருத்தியடைய வேண்டிய பிரிவுகளை இனங்காணுதல்.
- பாடசாலையின் அபிவிருத்திக்கு தேவையான உதவிகள், வழிகாட்டல்கள் பெறப்படுதல்.
- பாடசாலையின் அபிவிருத்திக்கு சிபாரிசுகள் / முன்மொழிவுகளை சமர்ப்பித்தல்.
- பாடசாலைகளில் சிறந்த செயற்பாடுகள் தொடர்பாக உறுதிப்படுத்துதல்.
- மேற்படி மேற்பார்வையூடன் தொடர்பான மதிப்பீட்டுச் செயன்முறைக்கு மேலதிகமாக முகாமைத்துவக் குழுவினராலும், ஆசிரிய ஆலோசகர்களினாலும் பாடசாலையின் நாளாந்த கற்றல் – கற்பித்தலுடன் தொடர்பான செயற்பாடுகள் மேற்பார்வை செய்யப்பட்டு தேவையான வழிகாட்டல்கள் பாடரீதியாகவும், செயற்பாட்டு ரீதியாகவும் வழங்கப்படல் வேண்டும்.
- இவை தவிர விடுதிகள் அமைந்துள்ள பாடசாலைகளில் விடுதி மேற்பார்வை, பாடசாலையின் பாதுகாப்பு தொடர்பான மேற்பார்வை, மாணவர்களின் நடவடிக்கைகள் தொடர்பாக வகுப்பாசிரியர், பாட ஆசிரியர்களின் மேற்பார்வை, சகபாடிகள் மேற்பார்வை, சில நிபந்தனைகளின் கீழ் பாடசாலையில் நடைபெறும் மேலதிக வகுப்புக்கள் தொடர்பான மேற்பார்வை (மேலதிக வகுப்புக்களை நடாத்துதல் தொடர்பாக கல்வி அமைச்சின் 1961/30 ஆம் இலக்க சுற்றுநிருபத்தினை வாசிக்க), பாடசாலையில் இடம்பெறும் நிர்மாண, திருத்த வேலைகள் தொடர்பான மேற்பார்வை, களஞ்சிய அறைகளின் பாதுகாப்பு மேற்பார்வை, மைதானங்கள் / நீச்சல் குளங்கள் போன்றவற்றை மாணவர்கள் பயன்படுத்தும் போதான மேற்பார்வை போன்ற மேற்பார்வைகளும் பாடசாலைகளில் இடம்பெற வேண்டும்.
- அரசாங்கத்தால் அமுல்படுத்தப்படும் சில விஷேட செயற்திட்டங்கள், அவற்றிற்கான வழிகாட்டல்களைப் பின்பற்றி மேற்பார்வை செய்யப்படுதல் வேண்டும்.
- ஒவ்வொரு பாடசாலைத் தவணைக்குள்ளும் எல்லா விடயங்கள் தொடர்பாகவும் ஆற்றப்பட வேண்டிய பணிகளும் பல்வேறு துறை சார்ந்த, ஒவ்வொரு நாளும் ஆற்றப்பட வேண்டிய வேலைகளும் ஆசிரியர்களால் பேணப்படும் குறிப்பு ஏடுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது என்பதை அதிபர்கள் உறுதிசெய்தல் வேண்டும். இக்குறிப்பு ஏடுகள் காலத்திற்குக் காலம் அதிபரால் பரிசீலனைக்குட்படுத்தப்பட்டு ஒப்பமிடப்படல் வேண்டும். பாடசாலைகளுக்கு திடீர் விஜயம் செய்யும் போதும் வருடாந்த மேர்பார்வைகளின் போதும் இக்குறிப்புப் புத்தகங்கள் கல்வி அதிகாரிகளின் பரிசீலனைக்கு உட்படுத்தப்படும். (சுற்று நிருப இலக்கம் 1981 / 13 – மனித வலுவிலிருந்து உச்சப்பயனைப் பெறாதிருத்தல்.)
- மாணவர் இடாப்பு (Attendance Register C – 31)
- வகுப்பறைப் பாட வேலைத்திட்டம் (Class Scheme Work)
- மாணவர் அடைவுமட்டப் புள்ளிப் பதிவேடு ( BA, Term)
- வகுப்பறைப் பதிவு புத்தகம் (Class Record Book)
- ஆசிரியர் நேரசூசி (Teacher Time Table)
- ஆசிரியர் அறிக்கைப் புத்தகம் (Teacher Record Book)
- ஆசிரியர் தரங்கணிப்புப் படிவம் (Teacher Appraisal Form)
- ஆசிரியர் பாட மேம்பாட்டுத் திட்டம் (Teacher Subject Progress Plan)
- ஆசிரியர் அறிவூறுத்தல் கைந்நூல் (Teacher Guide Book)
- பாடத் திட்டம் (Lesson Plan)
- பாட வேலைத்திட்டம் (Scheme of Work)
- பாடக் குறிப்பு (Notes of Lesson)
- மாணவர் அடைவுமட்டத்தை அதிகரிப்பதற்கான விஷேட வேலைத்திட்டங்களுக்கான ஆவணங்கள் (S pass project / A pass project)
- மாணவர் அடைவுமட்ட முன்னேற்ற அறிக்கை (Students Progress Reports)
- சுயமாக பொறுப்பேற்ற வேலைகளுக்கான ஆவணங்கள் (Ex: Waste Management Project )
- அதிபரால் வழங்கப்பட்ட பிற பணிகளுக்கான ஆவணங்கள் (Ex: Co-Curricular Activities)
- வருடாந்த மேற்பார்வைத்திட்டம் (Year Supervision Frame Work)
- வகுப்பறை மதிப்பீட்டுப் படிவங்கள் (Class Assessment Forms)
- சுயமாகப் பொறுப்பேற்ற வேலைகளுக்கான மதிப்பீட்டுப் படிவங்கள் (Ex: Appraisal)
- தரங்கணிப்பாளர்கள் நாளாந்தப்பணிப் பதிவேடு (Reflective Journal)
- வகுப்பறை சுற்றுப்புற சுத்தம்
- மைதான செயற்பாடுகள்
- கழிவகற்றல் / மலசலகூட சுத்தம்
- பாடசாலையின் வெளிப்புற / சுற்றுப்புற சுத்தம்
- உடைந்த/ பாவனைக்குதவாத பொருட்களை அகற்றுதல் அல்லது பொருத்தமான நடவடிக்கை மேற்கொள்ளுதல்
- களஞ்சிய அறை ஒழுங்குகள்
- பாடசாலையின் முக்கிய பதிவேடுகளைப் பேணுதலும் இற்றைப்படுத்துதலும்
- ஆவணங்களைக் கோவைப்படுத்துதல்
- அலுவலகரீதியான கடிதத்தொடர்புகள்
பாடசாலை உள்ளக மற்றும் வெளிவாரி மதிப்பீட்டு அறிக்கைகளின் சுருக்கம்(Summary of School Internal and External Evaluation Report)
- உள்ளக மற்றும் வெளிவாரி மதிப்பீட்டுத் தகவல்களை இலகுவில் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருத்தல்.
- ஒவ்வொரு மதிப்பீட்டுத் துறைகளின் பண்புத்தரத்தினை இனங்கண்டு கொள்ளக் கூடியதாக இருத்தல்.
- மதிப்பீடுகளின் வெளிப்பாடு மற்றும் அதற்கென மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை இனங்கண்டு கொள்ளக்கூடியதாக இருத்தல்.
- மதிப்பீட்டுச் செயற்பாடுகள் மற்றும் பின்னூட்டல் வேலைத் திட்டங்களின் கண்காணிப்பிற்கு வசதியளித்தல்.
- கடந்த சில வருடங்களில் பாடசாலை முன்னேற்றத்தை ஒப்பீட்டளவில் கேட்டறியக் கூடியதாக இருத்தல்.
- பாடசாலைகளின் தரரீதியிலான அபிவிருத்திக்கென இலக்கை உருவாக்குவதற்கும் பாடசாலை திட்டமிடலுக்குத் தேவையான இலக்குகளை இனம்காண்பதற்கும் இலகுவாக இருத்தல்.
- இலங்கை ஆசிரிய ஆலோசகர்கள் பாடசாலையைத் தரிசிக்கும் போதும், வெளிச் செல்லலின் போதும் பாடசாலையின் அதிபர் /ஆசிரியர் வரவுப்பதிவுப் புத்தகத்தில் உரிய நேரத்தைக் குறிப்பிட்டு ஒப்பமிடல் வேண்டும்.
- பாடசாலையினுள் குறைந்தது 05 மணித்தியாலங்கள் மேற்பார்வைப் பணியில் / ஏனைய கடமைகளில் ஈடுபடுவதோடு, குறைந்தது 04 பாடவேளைகள் மாதிரிக் கற்பித்தல் பணியில் ஈடுபடல் வேண்டும்.
- ஒரு பாடசாலையில் குறிப்பிட்ட பாடத்துடன் தொடர்பான அனைத்து ஆசிரியர்களினதும் கற்றல் – கற்பித்தல் செயற்பாடுகளையும் தனித்தனியாக மேற்பார்வை செய்து, அவர்கள் இடர்படும் விடயங்கள் தொடர்பாக தான் அவதானித்த விடயங்களையும், ஆசிரியர்கள் எதிர்நோக்கும் இடர்பாடுகளுடன் தொடர்பாக அவர்களிடம் கேட்டறிந்த விடயங்களையும் ஆராய்ந்து பரிகார நடவடிக்ககைள் மேற்கொள்ள நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
- ஆரம்ப தரத்திலிருந்து உயர்தரம் வரை தமது விடயம் / பாடம் சார்ந்த துறைக்கான சகல பரிந்துரைப் பத்திரங்கள், பாடசாலை இலவச நூல்கள், வேலைத்திட்டங்கள், ஆசிரியர்கள் கைந்நூல்கள், பயிற்சிப் புத்தகங்கள் ஆகியவற்றை கற்று, மேற்பார்வையின் போதான குறைபாடுகளை நிவர்த்திக்கும் வகையில் அவ்வறிவின் மூலம் ஆசிரியர் / மாணவர்களை வழி நடாத்துதல்.
- பாடசாலை மட்டத்தில் தவணைப் பரீட்சைகளை நடாத்துவதற்காக (16/2010 ஆம் இலக்க கல்வி அமைச்சின் சுற்றுநிருபம்) பரீட்சை வினாத்தாள்கள் தயாரிப்பதற்கு தனது பாடதிற்குரிய ஆசிரியர்களுக்கு வழிகாட்டுதல் வேண்டும்.
- பொதுப் பரீட்சைஇ தவணைப் பரீட்சை நிறைவு ஒரு மாத காலத்தினுள் அவ்வவ் பாடத்திற்குப் பொறுப்பான உதவிக்கல்விப் பணிப்பாளரிடம் தத்தமது பாடத்திற்குரிய பரீட்சை ஆய்வு அறிக்கை, பரீட்சைப் புள்ளிப் பகுப்பாய்வு அறிக்கை என்பவற்றை தயாரித்தல் வேண்டும்.
- தவணைக்கு ஒருமுறை, தவணை விடுமுறை காலங்களில் தத்தமது பாடத்திற்குரிய ஆசிரியர்களுடனான சந்திப்பை, குறிப்பிட்ட படத்திற்கான உதவிக் கல்விப் பணிப்பாளருடன் இணைந்து நடாத்துதல் வேண்டும்.
- வலயமட்ட மதிப்பீட்டுச்செயன்முறைகளின் போது உரிய நியமங்களின் பிரகாரம் சுட்டிகளுக்கான புள்ளிகள் வழங்குவதற்கான மேற்பார்வை செயன்முறைகளில் உதவுதல்
- தனது பாடம்ஃவிடயம் தொடர்பான இணைப்பாட விதான செயற்பாடுகளில் (கண்காட்சி, போட்டி நிகழ்ச்சிகள், முகாம்கள், விளையாட்டுக்கள் போன்றவை … ) கோட்டம், வலயத்திற்கு உதவுதல்.
- தமது விடயத்திற்குரிய க.பொ.த. சாதாரண தரம் , உயர்தரப் பரீட்சைப் பரிந்துரைகள், பரீட்சை சட்டங்கள், உயர்தர பாடப்பரப்புக்கள், பல்கலைக்கழகப் பிரவேசத்திற்கான தகமைகள் தொடர்பான விளக்கத்தைப் பெற்றுஇ சந்தர்ப்பத்திற்கேற்ப உரிய மாணவர்கள்/ ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வூட்டலும், ஆலோசனை, வழிகாட்டல் வழங்குதலும்.