2022 ஏப்ரலில் கோரப்பட்ட ஆசிரிய இடமாற்ற விண்ணப்பங்களை பரிசீலிக்கும் நடவடிக்கைகள் இந்நாட்களில் செயல்படுத்தப்படுகிறது.
2023 புதிய கல்வியாண்டு தொடங்குவதற்கு முன் ஆசிரியர் இடமாற்றங்கைள வழங்க எதிர்பார்க்கப்படும் அதே வேளை அதுவரை இடாற்ற விண்ணப்பங்கள் எதனையும் ஏற்றுக் கொள்வதில்லை எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து சிரமம் காரணமாக இணைப்புச் செய்யப்பட்ட ஆசிரியர்களின் இணைப்புக்கள் ஆகஸ்ட் 31, 2022 அன்று முடிவடையும் என்று பரிந்துரைக்கப்பட்டாலும், அந்த ஆசிரியர்கள் கடிதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள திகதி வரை பாடசாலை அதிபரின் ஒப்புதலுடன் மட்டுமே ஒதுக்கப்பட்ட அதே பாடசாலையில் பணியாற்ற முடியும், மற்றும் 31.12.2022 க்குப் பிறகு, போக்குவரத்து சிரமங்கள் காரணமாக இணைக்கப்பட்ட ஆசிரியர்கள் கடிதங்கள் மீண்டும் வழங்கப்பட மாட்டாது என்று அனைத்து அதிபர்களுக்கும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இருப்பினும், கர்ப்பிணி ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இணைப்பு, மருத்துவ அறிக்கைகள் மற்றும் பாடசாலைகளின் சேவைத் தேவைகளின் அடிப்படையில் வழங்கப்படும் இணைப்புக்கள் சுகாதார காரணங்களின் அடிப்படையில் வழங்கப்படும் இணைப்புக்களுக்கு மேற்கண்ட நடைமுறை பொருந்தாது எனவும் அவ்வாறான இணைப்புக்களை கல்வி அமைச்சின் ஆசிரிய இடமாற்ற பிரிவு வழங்கும் எனவும் அமைச்சு அறிவித்துள்ளது.