ஏப்.01ஆம் திகதிக்கு முன் 34,000 பேருக்கு நியமனம்
உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமென்கிறார் −கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த
நாடு முழுவதுமுள்ள தமிழ் மொழி மூலமான பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை எதிர்வரும் ஏப்ரல் மாதத்துக்குள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படுமென கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையில் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் எம்பி எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
தமிழ் மொழி மூலமான பாடசாலைகளில் தகவல்கள் திரட்டும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதால் அது நிறைவடைந்ததும் எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதிக்கு முன்னர் அந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படமென்றும் கல்வி அமைச்சர் சபையில் தெரிவித்தார். அது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர்:
ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்பும் வகையில் 26,000 பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் கல்வியியற் கல்லூரிகளில் பயிற்சி பெற்ற 8.000 ஆசிரியர்களையும் இணைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மூன்றாம் தவணை நிறைவடைவதற்கு முன் எதிர்வரும் மார்ச் 24 ஆம் திகதிக்கு முன்னர் அந்த நியமனங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் எம். பி தமது கேள்வியின் போது,
களுத்துறை மாவட்டத்தில் அமைந்துள்ள தமிழ் மொழி மூல பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குறிப்பாக களுத்துறை மாவட்டத்திலுள்ள தமிழ் பாடசாலைகளில் கணிதம் மற்றும் விஞ்ஞான ஆசிரியர்களுக்கான குறைபாடு நீண்ட காலமாக நிலவுகின்றது. அதனால் பெருமளவு மாணவர்கள் உயர்தரத்தில் கலைத் துறையையே தேர்ந்தெடுக்கும் நிலை உருவாகியுள்ளது. இந்த நீண்ட கால பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
අප්රේල් 1 ට පෙර 34,000 ක් ගුරු පත්කිරීම කඩිනම් පියවරක් – අධ්යාපන ඇමැති සුෂිල් ප්රේමජයන්ත
දිවයින පුරා දෙමළ මාධ්ය පාසල්වල දැනට පවතින ගුරු පුරප්පාඩු ලබන අප්රේල් මාසය වන විට පිරවීමට පියවර ගන්නා බව අධ්යාපන අමාත්ය සුෂිල් ප්රේමජයන්ත මහතා පාර්ලිමේන්තුවේදී පැවසීය.
අමාත්යවරයා මේ බව පැවසුවේ ඊයේ පාර්ලිමේන්තුවේදී වාචික ප්රශ්න අතරතුර පාර්ලිමේන්තු මන්ත්රී ඉමිතියාස් බාකීර් මාකාර් මහතා යොමුකළ ප්රශ්නයකට පිළිතුරු ලබාදෙමිනි.
දෙමළ මාධ්ය පාසල්වල තොරතුරු රැස්කිරීමේ කටයුතු මේ වනවිට සිදුකෙරෙන බැවින් එය අවසන් වූ පසු එළඹෙන අප්රේල් 01 වැනිදාට පෙර එම අඩුපාඩු පිරවීමට පියවර ගන්නා බව අධ්යාපන අමාත්යවරයා සභාවට දැනුම් දුන්නේය. අමාත්යවරයා මේ සම්බන්ධයෙන් වැඩිදුරටත් මෙසේද පැවසීය.
ගුරු පුරප්පාඩු පිරවීම සඳහා උපාධිධාරී ගුරුවරුන් 26,000ක් සහ අධ්යාපන විද්යාපීඨවල පුහුණුව ලැබූ ගුරුවරුන් 8,000ක් බඳවා ගැනීමට පියවර ගැනේ. තුන්වන වාරය අවසන් වීමට පෙර එළැඹෙන මාර්තු 24 වැනිදාට පෙර එම පත්වීම් සිදුකිරීමට කටයුතු කරනවා.
මේ වසරේ ගුරු පුරප්පාඩු පිරවීම සඳහා අමාත්ය මණ්ඩල අනුමැතිය ඇතුළු සියලු අනුමැතිය ලැබී තිබෙනවා. මධ්යම රජය යටතේ පවත්වාගෙන යනු ලබන පාසල්වල සහ පළාත් සභාව යටතේ පවතින පාසල්වල පවතින සියලුම පුරප්පාඩු පිරවීමට පියවර ගන්නා බව ඔහු පැවසීය.
ඉමිතියාස් බාකීර් මාකාර් එම්. බී ඔහුගේ ප්රශ්නය අතරතුර,
කළුතර දිස්ත්රික්කයේ පිහිටි දෙමළ මාධ්ය පාසල්වල පවතින ගුරු හිඟය පියවීමට රජය පියවර ගත යුතුයි.
විශේෂයෙන් කළුතර දිස්ත්රික්කයේ දෙමළ පාසල්වල ගණිත හා විද්යා ගුරුවරුන්ගේ හිඟයක් දීර්ඝ කාලයක් තිස්සේ පවතී. එබැවින් සිසුන් විශාල පිරිසක් උසස් තත්ත්වයේ කලා අංශය තෝරා ගනී. දීර්ඝ කාලයක් තිස්සේ පවතින මෙම ගැටලුවට කඩිනමින් විසඳුමක් ලබා දෙන ලෙස ද ඔහු ඉල්ලා සිටියේය.