மாணவர்களின் கற்றல் குறைபாடுகளை நீக்குவதற்காக செயற்றிட்டங்கள் மூலம் கற்பித்தல்
க.சுவர்ணராஜா.
ஆசிரியர்கள் தமது பொறுப்பிலுள்ள மாணவர்களின் கற்றல் குறைபாடுகளை சிறிய செயற்றிட்டங்கள் ஊடாக நிவர்த்தி செய்யலாம். அதற்கான சில உபாயங்களை எடுத்துரைப்பதாக இக் குறிப்புகள்அமைகின்றது.
செயற்றிட்டங்கள் என்றால் என்ன?
செயற்றிட்டங்கள் என்பது தற்காலிகமான ஒருசெயற்பாடகும். Projeects are Temporaryin nature, While Operations are ongoing” என்கிறார் Kim Heldman என்பார்.
ஆகவே ஒரு நிறுவனத்தின் ஒழுங்கமைத்த செயற்பாடுகளின் தொடர்ச்சி நிலையில் செயற்றிட்டங்கள் தற்காலிகமான செயற்பாடுகள் எனலாம்.
ஒரு விசேட தேவைக்கோ அல்லது விசேட நிலைமைக்காக செயற்றிட்டங்கள் முன் வைக்கப்படுகின்றன. உதாரணமாக ஒரு கார் உற்பத்தி நிறுவனத்தில் வழமையான மாதிரியை விட ஒரு மாதிரியை வடிவமைத்தல் ஒரு செயற்றிட்டமாகும்.
இங்கு கார் உற்பத்தி என்ற செயற்பாடுகள் தொடர்ச்சியானது ஆனால் புதிய வடிவமைப்பை புதியரகத்தை ஏற்படுத்துதல் செயற்றிட்டமாகும்.
பாடசலைகளைப்பொறுத்தவரையில்ஒரு குறிப்பிட்ட வகுப்பு பிள்ளைகளின்மொழித்திறனை குறிப்பிட்ட சதவீதத்தால் குறிப்பிட்ட காலத்திற்குள் உயர்த்துதல் ஒரு செயற்றிட்டமாகும் இருப்பினும் பாடசாலையின் நாளாந்த கலைத்திட்ட அமுலாக்கல் செயன்முறை தொடர்ச்சியாக நிகழ்ந்துகொண்டிருக்கும்.
செயற்றிட்டங்களின் குணப்பண்புகள்
பொதுவாக எல்லாச் செயற்றிட்டங்களும் பின்வரும் மூன்று குணப்பண்புகளைக்கொண்டிருக்கும் அவையாவன.
1.செயற்றிட்டங்கள் குறிப்பானவை அல்லது தனித்தன்மை
( Projects are unique) வாய்ந்தவை செயற்றிட்டங்கள் குறித்த ஒரு செயற்பாட்டுடன் தொடர்புடையது எனலாம்.
செயற்றிட்டத்தின் மூலம் அடைய எதிர்பார்க்கப்படும் இலக்கு விசேடமானதாகும். அத்துடன் அவை குறுகிய காலத்தினுள் அடையக் கூடியதாகவும் காணப்படும். ஒரு செயற்றிட்டம் அடைய வேண்டிய இலக்கு மிகவும் தெளிவானதாக எளிமையானதாக காணப்படும்.
2.செயற்றிட்டங்கள் தற்காலிகமானவை
ஒரு நிறுவனத்தின் செயற்பாடுகளுடன் ஒப்பிடும்போது செயற்றிட்டங்கள் தற்காலிகமானதாக காணப்படும் வரையறுக்கப்பட்ட காலத்தை ( Limited Tieme Frame) (கொண்டிருக்கும்.செயற்றிட்டம் தொடங்கும் திகதி முடிவடையும் திகதி திட்டவட்டமாக குறிப்பிடப்பட்டிருக்கும்.
3.செயற்றிட்டத்தின் இலக்குகள் அடையப்படும் நிலையில் செயற்றிட்டங்கள் முடிவுறுத்தப்படும்
செயற்றிட்டத்தால் அடையப்பட வேண்டியவை தெளிவாக குறிப்பிடப்பட்டிருப்பதால்செயற்றிட்டத்தின் இலக்குகள் அடையப்பட்டவுடன் அவை முடிவுறுத்தப்படும்.
செயற்றிட்டங்களை ஆக்கி நடைமுறைப்படுத்துவதன் மூலம் ஆசிரியர்கள் அடையக் கூடிய நன்மைகள் அல்லது விருத்திகள் பின்வருமாறு அமைகின்றன.
01. வாழ்க்கையில், கற்பித்தலில் சவால்களை எதிர் கொள்ளப் பழகுதல்.
02. செயன்முறைத் தகைமைகளைப் பெறல்.
03. உழைப்பின் மகத்துவத்தை உணர்தல்.
04. சமூகத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளல்.
05. அணியாக செயற்படும் மனப்பாங்கினை விருத்தி செய்தல்.
06. தமது இயலுமையை உணர்தல்.
07. சுற்றாடல் வளங்களை இனங்காணலும் காத்தலும்
08. சமூகப் பிரச்சினைகளை இனங்காணலும் அவற்றுக்கு தீர்வு காணலும்.
09. யாதேனும் பிரச்சினை தொடர்பாக முற்போக்கான பொது கருத்தை உருவாக்கல்.
10. தொடர்பாடல் திறன்களை விருத்தி செய்து கொள்ளல்.
11. அழகியலை மதித்தலும் நயத்தலும்
12. சுயகட்டுப்பாடு, சுயமதிப்பீடு விருத்தியடைதல்.
13. சனநாயக வாழ்க்கை முறையை மதித்தல்.
14. ஓய்வு நேரத்தைப் பயனுடையவாறு கழித்தல்
15. அபிவிருத்திச் செயன்முறையில் பங்கு கொள்ளல்.
16. முகாமைத்துவ திறன் விருத்தி.
17. நிதி பயன்பாட்டு முகாமைத்துவ திறன் விருத்தி.
18. பௌதீக வள முகாமைத்துவ திறன் விருத்தி.
19. கணிப்பீட்டு, மதிப்பீட்டு மேற்பார்வை திறன் விருத்தி.ஆசிரியர்களுக்கிடையே சுய மதிப்பு உருவாகுதல் என்பனவாகும்
ஒரு செயற்றிட்டத்தின் ஐந்து பிரதான விடயங்கள்.
1) நோக்கங்கள்
2) நியாயப்படுத்தல்
3) செயற்பாடுகள்
4) வெளியீடு
5) உள்ளீடு
செயற்றிட்ட திட்டமிடலும் பிரச்சினை மரமும்
ஆசிரியர்கள் செயற்றிட்ட மொன்றினைத் திட்டமிடுவதற்கு பிரச்சினை மரம் உபாயத்தைக் கையாளலாம்
பிரச்சினை மரம் .
பிரச்சினை மரம் என்பது பிரச்சினை, அதற்கான காரணங்கள் அதன் விளைவுகள் என்பவற்றை கண்டறிவதற்கான ஒரு கருவியாகும்.
பிரச்சினை தரம் ஆறு மாணவர்கள் சுய வாசிப்பில் குறைவான அக்கறை உடையவர்களாக உள்ளனர்
இப்பிரச்சினையை பிரச்சினை மரத்தில் குறிக்கும் போது அது பின்வருமாறு அமையும்
மேற்கண்ட பிரச்சினை மரத்தில் பிரச்சினை பிரச்சினைக்கான காரணங்கள் அதனால் ஏற்பட்ட விளைவுகள் என்பன தெளிவாகுகின்றன.
பிரச்சினை மரத்தினை கற்பனையாக நோக்க மரமாக மாற்றினால் அது பின்வருமாறு அமையும்.
செயற்றிட்ட பிரேரணை தயாரித்தல்
1.தலைப்பு:மாணவர்கள் வாசிக்கும் அளவை அதிகரித்தல் காலம்: இரண்டு மாதங்கள்
2.நோக்கங்கள்:
o மொழிவிருத்தி
o அடைவுமட்ட அதிகரிப்பு
o தரமான பொழுது போக்கு மனப்பாங்கினை விருத்தியாக்கல்
3.நியாயப்படுத்தல்: மாணவர்கள் சுயமாக வாசிக்கும் திறன் பகுறைந்தவர்களாக உள்ளனர்.இந்நிலை நீடிக்குமாயின் மாணவர்களின் மொழிவிருத்தியிலும் அடைவு மட்டத்திலும் தாக்கம் ஏற்படலாம். இதனால் பரீட்சைகளில் சித்தியடையும் தரத்தின் அளவு குறைவதோடு உயர்கல்வியிலும் ◌தாக்கம் ஏற்படலாம்.அத்துடன் எதிர்கால வாழ்க்கைக்கு தேவையான கிரகிப்பு தொடர்பாடல் எழுதாக்கம் போன்றவற்றிலும் மாணவர்கள் பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டி ஏற்படலாம். அதனால் விசேட செயற்றிட்டத்தின் மூலம் மாணவர்களின் சுய வாசிப்புத்திறனை மேம்படுத்தலாம் எனக் கருதுகின்றேன்.
4.செயற்பாடுகள்
இச்செயற்றிட்டத்தின் காண்ற் அட்டவணை பின்வருமாறு அமையும்
(காலம் செலவு என்பன இடப்படல் வேண்டும்)
5.வெளியீடுகள்:வகுப்பறை நூலகம் , நூல்கள், ஒப்படை பத்திரங்கள்,அறிக்கை மாணவர் பின்னனூட்டல் படிவங்கள் ,புகைப்படங்கள்
6.பெறுபேறுகள்:சுயமாக வாசிப்பில் ஈடுபடும் மாணவர்கள்.
மேலதிக குறிப்புகள்
குறிப்பு:1
செயற்றிட்டத்தை திட்டமிடல்.
01. தலைப்பை தெரிவு செய்யும் போது கவனிக்க வேண்டியவை
· பொருத்தமானது
· போதிய நியாயப்படுத்தல் உள்ளதாக
· உரிய காலத்தில் நிறைவேற்றக் கூடியதாக
· மன நிறைவு தரக் கூடியதாக
· ஓரளவு புதுமை போக்கு உடையதாக
· குறைந்த செலவில் அதிக பயனை தரக் கூடியதாக
· சமூகம் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக
· ஏனையோரின் உயரிய ஒத்துழைப்பை பெறக் கூடியதாக
· வளங்களின் கிடைப்பனவு
· தடைகள் பற்றிய எதிர்பார்ப்பு
குறிப்பு:- செயற்றிட்டம் தொடர்பான நியாயப்படுத்த வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தல் நியாயப்படுத்தல் எனப்படும். உதாரணமாக பின்வரும் வினாக்களை எழுப்புதல் நியாயப்படுத்தலை ஏற்படுத்த உதவியாக இருக்கும்.
· செயற்றிட்டம் நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியம் யாது
· இச் செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்துவதால் எவ்வகையான பயன் மிகு மாற்றங்களை ஏற்படுத்தலாம்
· இச் செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்தாவிடின் ஏற்படக் கூடிய மோசமான விளைவுகள் எவை
· இச் செயற்றிட்டத்தை நடைமுறைபடுத்துவதன் ஊடாக ஆசிரியர் என்ற வகையில் உங்களுக்கு ஏற்படும் நன்மைகள் எவை
· இச் செயற்றிட்டத்தின் இலக்கு குழுவினர்க்கு ஏற்படும் நன்மைகள் எவை
குறிப்பு 2:-
செயற்றிட்ட நோக்கங்கள்
உங்களால் தெரிவு செய்யப்பட்ட செயற்றிட்டத்தினை மேற்கொள்வதன் மூலம் நீங்கள் அடையும் இறுதிப் பேறுகளை செற்றிட்ட நோக்கங்கள் குறித்து நிற்கின்றது
செயற்றிட்ட நோக்கங்கள் பின்வரும் பண்புகளை கொண்டதாக இருத்தல் வேண்டும்.
SMART
SPECIFIC:குறிப்பானதாக இருத்தல்
· MEASURABLE :அளக்கக் கூடியதாக இருத்தல்
· ACHIEVABLE: அடையக் கூடியதாக இருத்தல்
· RELEVANT:தொர்புடையதாக இருத்தல்
· TIME:கால வரையறை குறிப்பிடப்படல் வேண்டும்
குறிப்பு:3
செயற்றிட்ட அமுலாக்கம்
1. செயற்றிட்ட பிரேரணையை வாசித்தல்
2. செற்றிட்ட பிரேரணையில் குறிப்பிட்டவாறு செயற்பாடுகளுக்குரிய வளங்களை
உபகரணங்களை தகவல்களை சேகரித்தல்.
3. இலக்கு குழுவினருடன் கலந்துரையாடல்
4. செயற்றிட்ட பிரதேசத்தை அடையாளமிட்டு இலக்கு குழுவினர்க்கு காட்சிப்படுத்தல்.
5. கடமைகள், பொறுப்புக்களை பிரித்தளித்தல்.
6. செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்தல்.
7. முன்னேற்றத்தை மீளாய்வு செய்தல்.
8. அறிக்கை தயாரிப்பு
9. அறிக்கை சமர்ப்பிப்பு
குறிப்பு:4
செயற்றிட்டத்தை நெறிப்படுத்தும் போது முக்கியமாக அமையக் கூடிய சில விடயங்கள்
1. களக் குறிப்பேட்டை பேணல்.
2. செவ்வைபார்த்தல் பட்டியல் பயன்படுத்தல்.
3. விபரணக் கோவையை பேணல்.
4. தொடர்புகளை ஆவணப்படுத்தல்.
5. பிரதிபலித்தல் குறிப்புகளை பேணல்.
6. வேலைப்பகிர்வு பட்டியல் பேணல்.
7. சுயமதிப்பீட்டினை மேற் கொள்ளல்.