• Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact US
  • Advertise with Us
TeachMore
  • Home
  • News
  • CIRCULARS
  • COURSES
  • Applications
  • EXAMS & RESULTS
  • TEACHINGS
    • Modules for EB
    • கட்டுரைகள்
No Result
View All Result
  • Home
  • News
  • CIRCULARS
  • COURSES
  • Applications
  • EXAMS & RESULTS
  • TEACHINGS
    • Modules for EB
    • கட்டுரைகள்
No Result
View All Result
TeachMore.lk
Home கட்டுரைகள்

பிள்ளைகளின் கல்வி விருத்திக்கான குடும்ப தலைமைத்துவம்.

December 13, 2022
in கட்டுரைகள், TEACHING
Reading Time: 21 mins read
பிள்ளைகளின் கல்வி விருத்திக்கான குடும்ப தலைமைத்துவம்.
Share on FacebookShare on WhatsAppShare on Telegram

பிள்ளைகளின் கல்வி விருத்திக்கான குடும்ப தலைமைத்துவம்.

(2013.7.10 ஆந்திகதி மன்னார் சித்தி விநாயகர் இந்து கல்லூரியில்  நிகழ்த்தப்பட்ட நிறுவுனர் அமரர் குமரையா முத்துக்குமாரு நினைவுப் பேருரை.) க.சுவர்ணராஜா (ஓய்வு பெற்ற பீடாதிபதி, வவுனியா தேசிய கல்வியியல் கல்லூரி)

அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய பாடசாலையின் தலைவர் அவர்களே, இன்றைய பரிசளிப்பு விழாவில் கலந்து கொள்ளும் பெருமைக்குரிய பிரதம விருந்தினர் அவர்களே, மற்றும் சிறப்பு விருந்தினராக வருகை தந்திருக்கும் மதிப்பிற்குரியவர்களே, அறிவையும் ஒழுக்கத்தையும் இரண்டறக் கலந்து தனது பண்பு சார்ந்த நடத்தைகளால் எதிர்கால தலைவர்களை உருவாக்கிட தம்மை அர்ப்பணித்து உழைக்கும் ஆசிரிய மணிகளே, பாடசாலை அபிவிருத்தி சங்கத்தவர்களே, அன்புக்குரிய பெற்றோர்களே, உறுதிப்பாடு மிக்க மாணவர்களே, கல்வியியலாளர்களே, பாடசாலையின் கல்விசாரா உத்தியோகத்தர்களே, நலன்விரும்பிகளே உங்கள் அனைவருக்கும் எனது இனிய வணக்கங்கள் உரித்தாகட்டும்.

54 வருடங்கள் வரலாற்றைக் கொண்டு மன்னார் மாவட்டத்திலும், தேசிய மட்டத்திலும், சர்வதேச மட்டத்திலும் தனக்கென ஒரு தனி இடத்தைப் பெற்றுக் கொண்ட மன்னார் சித்தி விநாயகர் இந்துக் கல்லூரியின் பரிசளிப்பு விழாவில் நின்று நிறுவுனர் நினைவுப் பேருரையை சமர்ப்பிப்பதில் பெருமை அடைகின்றேன். அத்துடன் சித்தி விநாயகர் கல்லூரியின் வரலாற்றுப் பின்புலம், அதன் அபிவிருத்திப் போக்கு, அதன் கல்விசார் பெறுமதி என்பவற்றிற்கு அடித்தளம் இட்ட நிறுவுனர் அமரர் குமரையா முத்துக்குமாரு அவர்களின் சிந்தனையில் எழுந்த பிரதிபலிப்புக்களை உங்கள் முன் சமர்ப்பிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.

மன்னார் மாவட்டத்தின் தனித்துவமிக்க சித்தி விநாயகர் இந்துக் கல்லூரி 14.05.1959 இல் ஸ்தாபிக்கப்பட்டு 01.01.1961 இல் அரச பாடசாலையாக மாற்றப்பட்டது.

சைவ மரபின் ஒரு வளர்ச்சியாக அமைந்த உப்புக்குளம் பிரதேசத்தில் திருவானைக்கூடம் என்ற பெயரில் கட்டப்பட்;ட ஒரு பலநோக்கு கருத்திட்டத்தின் ஒரு மையப்பகுதியாக சித்தி விநாயகர் ஆலயத்தினையும், சித்தி விநாயகர் இந்துக் கல்லூரியையும் 10 ஏக்கர் பிரதேசத்தில் அமரர் குமரையா முத்துக்குமாரு நிறுவினார். ஆகவே சைவ மரபை ஒட்டி ஆன்மீகமும், ஆலய வழிபாடும் இணைந்த ஒரு பண்பாட்டில் சித்தி விநாயகர் இந்துக் கல்லூரியின் கல்விச் செயற்பாடுகள் முளைவிடத் தொடங்கின எனலாம்.

எமது நாட்டில் உருவாகி பல சவால்களுக்கு மத்தியில் வளர்த்தெடுக்கப்பட்ட சைவ பாரம்பரியம் மிக்க பாடசாலைகளில் இன்றும் என்றும் தனித்துவம் மிக்கதாக மன்னார் சித்தி விநாயகர் இந்துக் கல்லூரி திகழ்கிறது என்பது மிகையான கூற்றல்ல.

சைவப் பாரம்பரியம் மிக்க சமூக மேனிலை பெற்ற கல்வியியலாளர்களான சிவமணி.சேர்.கந்தையா வைத்தியநாதன், திரு.துரையப்பா, திரு.வைத்தியலிங்கம், திரு.மூ.சின்னத்தம்பி, திரு.ரகுநாதன், திரு.மூ.வைத்தியலிங்கம், திரு.மா.கந்தசாமி, திரு.பரமகுரு, திரு.க.பத்மநாதன், னுச.ந.சுப்பிரமணியம், திருமதி.மங்களேஸ்வரி ஆகிய பல முன்னோடிகளால் கட்டிக் காத்து வளர்க்கப்பட்ட இக் கல்லூரி இதன் முதல் அதிபராக திரு.ச,வீரசிங்கம் அவர்களையும், இன்றைய அதிபராக திரு.யு.ஐ.தயானந்தராஜா அவர்களையும் கொண்டுள்ளது.

சிறந்த தொழில்சார் நிபுணத்துவமும், சைவப் பாரம்பரியத்தின் மீதான தீவிர பற்றுணர்வும் மாணவ ஒழுக்கத்தின் மீது மூடாத விழி கொண்டவராகவும், நவீன கல்விச் சிந்தனைகளை சைவ பாரம்பரியத்தோடு உள்வாங்கும் துணிவும் கொண்ட இன்றைய அதிபர் திரு.யு.ஐ.தயானந்தராஜா, அமரர்.குமரையா முத்துக்குமாரு அவர்களின் சிந்தனையை செயலாக்கும் விதைகளில் ஒன்றாக அமைகிறார்

குடும்பம் ஒரு சமூக அலகு

குடும்பம் ஒரு சமூக அலகு என்ற முறையில் உணர்வு பூர்வமான பிணைப்புக்கள், ஒரு வரலாறு மற்றும் ஓர் எதிர்காலம் என்பவற்றை பகிர்ந்து கொள்ளும் ஓர் தனி நபர்களின் குழு ஒன்றை கொண்டதாக இருந்து வருகிறது.

குடும்ப கட்டமைப்பு ஒவ்வொரு குடும்பம் தொடர்பாகவும் வேறுபட்டதாக இருந்து வர முடியும். ஆனால் குடும்பத்தின் செயற்பாடுகள் ஒரே விதமானவையாகவே உள்ளன.

குடும்பத்தின் கட்டமைப்பு வேறுபட்டதாக மாறினாலும் அது சில அடிப்படை கருமங்களை நிறைவு செய்து வருகிறது. பாதுகாப்பு, உயிர் வாழ்க்கை, பிள்ளைகளை சமூக மயப்படுத்துதல், ஆதரவு மற்றும் போசித்து வளர்த்தல், பாலுறவுகளின் சட்ட பூர்வத் தன்மை, மகப்பேறு, சமூக மற்றும் பொருளாதார தாபனம் என்பன இத்தகைய கருமங்களாகும். இத்தகைய கருமங்களை செவ்வனே ஆற்றுவதற்கு குடும்பத்தின் தலைமைத்துவம் ஒரு முக்கிய காரணியாக அமைகிறது.

இந்த நினைவுப் பேருரையானது பிள்ளைகளின் கல்வி விருத்தியில் குடும்பத் தலைமைத்துவத்தின் அவசியம், அதன் போக்கு என்பவற்றை நோக்குவதாக உள்ளது. மீண்டும் ஒரு முறை கல்லூரியின நிறுவுனர் அமரர்.குமரையா முத்துக்குமாரு அவர்களது நினைவுப் பேருரையை ஆற்றுவதற்கு சந்தர்ப்பம் அளித்த கல்லூரியின் தலைவர். திரு.யு.ஐ.தயானந்தராஜா அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டு எனது உரையை தொடர்கின்றேன்.

தலைமைத்துவம்

தலைமைத்துவம் என்னும் எண்ணக்கரு மனிதனது சிந்தனையை தகர்விக்கும் ஒரு கருப்பொருளாக எல்லாக் காலமும் இருந்து வந்துள்ளது. மனிதன் காடுகளிலும் குகைகளிலும் வாழ்ந்தகாலம் முதல் பேசப்பட்டுவரும் தலைமைத்துவமானது, இன்று தேசங்களை வழிநடத்தவும், சமூகங்களையும், நிறுவனங்களையும் வழிநடத்தவும் குடும்பங்களை கட்டிக் காத்திடவும் முக்கியமானதொரு எண்ணக்கருவாக நாளுக்கு நாள் எம்மிடையே விரிவடைந்து வருகின்றது.

தலைமைத்துவம் என்பதனை நாம் பின்வருமாறு வரையறுக்கலாம். இலக்குகளை அடைவதற்கு ஆர்வத்துடன் செயற்படக் கூடியதாக மற்றவர்களில் செல்வாக்குச் செலுத்தும் கலையை அல்லது செயன் முறையை தலைமைத்துவம் எனலாம். அதாவது மனிதனின் தரிசன நோக்கங்களை உயர்மட்டத்திற்கு உயர்த்துவதற்கு தலைமைத்துவம் அவசியமாகும்..

மனிதனின் செயலாற்றுகையை உயர்தரத்தில் கொண்டு செல்வதற்கு மனிதனின் ஆளுமையை அதனுடைய சாதாரண எல்லைக்கு அப்பால் கட்டியெழுப்புவதற்கும் தலைமைத்துவத்தின் பணி இன்றியமையாதது ஆகும்.

குடும்ப தலைமைத்துவம்

குடும்ப தலைமைத்துவம் என நாம் நோக்கும் போது குடும்ப தலைமைத்துவமானது பெற்றோர்களினால் குடும்பத்தின் மீது செலுத்தப்படும் அர்த்தப்பூர்வமான ஆழ்ந்த ஈடுபாட்டினையும், வழிநடத்தல்களையும் குறித்து நிற்கின்றது. பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் அனைத்து நலன்கள் தொடர்பாகவும், தேவைகள் செயற்பாடுகள் தொடர்பாகவும் தீர்மானமெடுத்தலையும், இது தொடர்பாக சரியான தொடர்புபடுத்தல்களையும், ஒருங்கிணைப்;புகளையும் மேற்கொண்டு பிள்ளைகளின் இலட்சியங்களை நிறைவேற்ற உதவுவதை குடும்பத் தலைமைத்துவம் எனலாம்.

ஒரு குடும்பத்தைப் பொறுத்தவரையில் இரு முக்கிய கருமங்கள் இருந்து வருகின்றன. அவையாவன.

1.உள்ளக கருமங்கள்:- அதாவது குடும்ப உறுப்பினர்களின் உளவியல் சமூக பாதுகாப்பாகும்.

2.வெளியக கருமங்கள்:- வெளியக கருமங்கள் எனும் போது குறிப்பிட்ட கலாசாரத்திற்கு இடமளித்து அந்த கலாசாரத்தை ஊடுகடத்தல். என்பதோடு குடும்ப உறுப்பினர்களின் சுய தன்மையை விருத்தி செய்தலாகும்.

மேற் கண்ட உள்ளக கருமங்கள், வெளியக கருமங்கள் இரண்டிலும் குடும்ப தலைமைத்துவத்தின் அறிவு, திறன், மனப்பாங்கு என்பன பின்னி பிணைந்திருக்கின்றது.

“வாழ்க்கையிலான தலைமைப் பண்பு என்பது குடும்பத்தின் தலைமைப்பண்பிலிருந்து தொடங்குகின்றது. எமது வாழ்வின் நிரந்தர அர்த்தம் எமது அன்றாட வேலைகளில் எமக்கு கிடைக்கும் வெற்றிகளில் மட்டும் தங்கியிருக்கவில்லை அது எமது குழந்தைகளில் நாம் உருவாக்கும் நற்பண்புகளில் தங்கியுள்ளது” என குஷ்னர் என்ற சமூகவியலாளர் கூறுகின்றார்.

“எமது பிள்ளைகளில் சிறுவயதில் தென்படும் அறிகுறிகளின்படியே அவர்கள் வளர்வதற்கு எமது குடும்ப தலைமைத்துவம் உதவியாக அமைந்தால் மேதைகளைத் தவிர வேறொருவரும் நம்மிடையே இருக்க முடியாது என “கெதே” என்னும் அறிஞர் குறிப்பிடுகின்றார்.

மேற்கண்ட கூற்றுக்கள் இரண்டும் உலகிலேயே மிக உயர்ந்த தலைமைத்துவம் குடும்பத் தலைமைத்துவமே ஆகும். குடும்ப தலைமைத்துவம் சிறப்பாக அமைந்தால் மற்றையவை சிறப்பாக அமையும் என்பதை எமக்கு புலப்படுத்துகின்றன.

குடும்ப தலைமைத்துவத்தின் அவசியம்.

வாழ்க்கையில் தலைவனாக இருப்பதென்பது இல்லத்தில் தலைவனாக இருப்பதிலிருந்து தொடங்குகின்றது. தலைமைத்துவம் ஒரு குடும்பத்தின் வளர்ச்சிக்கும் விருத்திக்கும் அடிப்படையானது. குடும்பத்தின் எதிர்காலம் பற்றிய மனக்காட்சியொன்றை உருவாக்கி, அம்மனக்காட்சியை நோக்கி குடும்ப உறுப்பினர்களை இயக்குவதற்கு குடும்ப தலைமைத்துவம் அவசியமானது. குடும்ப தலைமைத்துவமானது குடும்ப அங்கத்தவர்களின் ஒத்துழைப்பினைப் பூரணமாகப் பெற்று குடும்ப அங்கத்தவர்களின் இணக்கத்துடன் குடும்பவிருத்திக்கான செயற்பாடுகளில்; பங்கேற்றுச் செயற்பட , குடும்ப அங்கத்தவர்களை வழிநடத்தும் பொறுப்பினையுடையது.

ஓர் தனியாளின் தலைமைத்துவத்திற்குரிய உள் ஆற்றலானது சிக்கலான உயிரியல், சமூக மற்றும் உளவியல் செயல்முறைகளின் கூட்டினால் நிர்ணயிக்கப்படுகின்றது. இவ்வுள் ஆற்றலை நல்லமுறையில் செயற்படுத்தினால் மாத்திரமே அது பயனுள்ளதாக மாறும். ஒருவர் தலைமைத்துவப் பண்புகளைத் தம்முள்ளே கொண்டிருந்த போதிலும் அதனைச் செயற்படுத்தாதவராக இருக்கலாம். பல்வேறு சந்தாப்பங்களில் இப்பண்புகள் வெளிப்படக்கூடும். சூழலும் அது வழங்கும் வாய்ப்புக்கள் வரையறைகள் என்பவையும் தலைமைத்துவத்தைச் செயற்படுத்துவதில் செல்வாக்குச் செலுத்தக் கூடிய காரணிகளாகும்.

குடும்ப அங்கத்தவர்களின் விருத்தி தொடர்பாக மிக அக்கறையுடனும், ஆர்வத்துடனும் செயற்படுவதற்கு குடும்ப தலைமைத்துவத்தை விட வேறு யாரும் சிறப்பாக முன்வர முடியாது. பல்வேறு சவால்கள் தடைகள், துன்பங்கள் வந்த போதிலும் செழுமையான வாய்ப்புகளும் வசதிகளும் கிடைத்த போதிலும் எவ்லாவற்றையும் எதிர்நோக்கி சிறப்பான இல்டசியத்தின்பால் குடுமபத்தினை வழிநடத்துவதற்கு ஆற்றல்மிகு குடும்ப தலைமைத்துவம் அவசியமானதாகும்.

மேலும் குடும்ப தலைமைத்துவமானது பொதுவாக பின.வரும் காரணங்களுக்காக அவசியம் எனலாம்.

•குடும்பத்தில் அடிப்படையான மாற்றங்களை ஏற்படுத்தவதற்கும் , மாற்றங்களை குடும்ப அங்கத்தவர்கள் மகிழ்ச்சியாகவும் அர்த்தபூர்வமாக ஏற்றுக் கொள்வதற்கும் உதவுதல்

•குடும்ப அங்கத்தவர்களிடையே ஆரோக்கியமான உடல் உள நிலையை பேணுவதற்கு பாடுபடல்

•பிள்ளைகளின் அறிவாற்றல் திறன்களை ஊக்கவிப்பதற்கும் அவர்களது கல்வி நிலையை மேம்படுத்துவதற்கும் வழிகாட்டல்.

•வெற்றிகரமானதும் ஆரோக்கியமானதுமான குடும்பச் சூழலை உருவாக்கி அதனை பேணிக்காப்பதற்கு முன்நிற்றல்.

•நிலைத்திருக்கவல்லதும், சிறப்பானதுமான குடும்ப பொருளாதார நிலையை உருவாக்குவதற்கு முன்மாதிரியாக திகழுதல்.

•பண்பார்ந்த கலாசாரம், ஆன்மீக ஈடுபாடு , ஒற்றுமையுணர்வு பரஸ்பர ஒத்துழைப்புமிக்க குடும்ப கவின்நிலையை உருவாக்கி பேணுதல்.

•குடுமபத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல்

•குடும்பத்தை சமூகத்துடன் இணைத்து வழிநடத்துவதற்கும் சமூக நல்லியல்புகளை ஊடுகடத்துவதற்கும் பாலமாக அமைதல்

•குடும்ப அங்கத்தவர்கள் ஒருவரின் வளர்ச்சியில் ஒருவர் பங்கேற்று உதவும் ஆரோக்கிய நல்லுறவை விருத்தியாக்குவதற்குமான தொடர்பகளை உருவாக்குதல்.

•அடுத்த சந்ததியினரை உருவாக்குவதற்கான தொடர்பாடலையும், வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல்.

என்பனவாகும்.

குடும்ப தலைமைத்துவத்தின் இலக்குகள்

குடும்ப தலைமைத்துவமமானது பின்வரும் இலக்குகளை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். இவ்விலக்குகள் ஒன்றுடன் ஒன்று நெருங்கி பிணைப்புடையதாகும். இவ்விலக்குகள் சமச்சீராய் இருக்க வேண்டும் . இவ்விலக்குகளில் ஒன்று சரிவுற்றாலும் குடும்ப தலைமைத்துவம் பிரச்சினைகளை எதிர்;கொள்ள வேண்டியிருக்கும். குடும்ப தலைமைத்துவத்தின் இலக்குகள் பின்வருமாறு அமைகின்றன.

1.குடும்பம் — நாம் வாழ்வது பிழைப்பை நடத்துவது நம்முடைய அன்பைப் பெற்றவர்களுக்குhகத்தான்.

2.பொருளாதார நிலை -நமது வேலைகளையும் பணத்தால் வாங்க முடிந்த பொருள்களையும் குறிக்கும்.

3.உடல்நிலை -நமக்கு உடல் நலம் இல்லையென்றால் எதற்குமே பொருளில்லை.

4.மனநிலை -அறிவையும் ஞானத்தையும் பிரதிபலிக்கிறது.

5.சமுதாய நிலை- ஒவ்வொருவருக்கும் நிறுவனத்திற்கும் சமுதாயப் பொறுப்பு இருக்கிறது. அது இல்லாவிட்டால் சமுதாயம் மெல்லச் சாகத் தொடங்கிவிடும்.

6.ஆன்ம நிலை- நமது பண்பு அமைப்பு நெறியையும் நடத்தையையும் பிரதிபலிக்கிறது.

குடும்ப தலைமைத்துவம் கொண்டிருக்க வேண்டிய பண்புகள்.

குடும்ப தலைமைத்துவமானது குடும்ப கட்டமைப்பினையும், குடும்பத்தின் இயங்குநிலையினையும் ஒன்று சேர நிர்வகிக்கும் பொறுப்பினையும் கடமையினையும் கொண்டதாகும். அதாவது குடும்ப தலைமைத்துவமானது தான் குடும்பம் என்ற அலகிற்கு சொந்தமானவர் என்ற உணர்வினையும், தான் குடுமபத்தின் தனித்த ஒரு கூறாக உள்ளேன் என்ற உணர்வினையும் ஒன்று சேர்த்த உணர்வுக்கலவையுடன் தன்னை வெளிப்படுத்த வேண்டியுள்ளது. இதற்காக குடும்ப தலைமைத்துவமானது பின்வரும் பண்பகளைக் கட்டாயம் கொண்டிருக்க வேண்டியுள்ளது அவையாவன.

•குடும்ப அங்கத்தவர்களுடன் தொடர்ச்சியாக உரையாட விருப்பம் கொண்டிருத்தல்.

•குடும்ப அங்கத்தவர்களை பாராட்டவும் விமர்சிக்கவும் தயாராக இருத்தல்

•சிறப்பான முன்மாதிரியாக திகழுதல்

•பொறுப்புணர்வும் சுதந்திரமும் உள்ளவராக இருத்தல்

•சுயக் கட்டுப்பாட்டுடனும் ஒத்துணர்வுடனும் இருத்தல்

•உண்மை தன்மையுடன் நடந்துக் கொள்ளல்

•குடும்பத்தின் சகல விடயங்களிலும் அக்கறையை வெளிக்காட்டுதல்

•உடல் ஆரோக்கியம் தொடர்பாக கவனஞ் செலுத்துதல்.

•குடும்ப இரகசியங்களைப் பாதுகாத்தல்

•குடும்ப நன்மைக்காக அயராது உழைத்தல்

•சிறந்த ஒழுக்க விழுமியங்களை வாழ்வில் கடைப்பிடித்தல்

•அனுபவங்களை பகிர்ந்துக் கொள்ள விரும்புதல்

•சவால்களை ஏற்றுக் கொள்ளல்

•குடும்ப தேவைகளைப் பூர்த்தி செய்ய தயாராக இருத்தல்.

•உடன்பாடான மனப்பாங்குடன் எதனையும் நோக்குதல்

•வெறித்தனமான நேர்மையுடன் இருத்தல்.

•மனித நம்பிக்கையை வளர்ப்பவராக இருத்தல் என்பனவாகும்

குடும்ப தலைமைத்துவத்தின் நடையியல்கள்.

குடும்ப தலைமைத்துவம் பற்றி நோக்கும் போது குடும்ப தலைமைத்துவத்தின் நடையியல்கள் பின்வருமாறு அமைகின்றது. அவையாவன

1.அதிகாரமுள்ள குடும்ப தலைமைத்துவம்

அதிகாரமுள்ள குடும்ப தலைமைத்துவமானது குடும்ப உறுப்பினர்கள் மீது; அதிக எதிர்பார்ப்புகளைக் கொண்டதாகவும், கடுமையான சட்டவிதிகளால் குடும்ப உறுப்பினர்களைக் கட்டுப்படுத்துவதாகவும் இருக்கும். குடும்ப உறுப்பினர்கள் தொடர்பான எல்லா முடிவுகளையும் குடும்ப தலைவரே எடுப்பார். குடும்ப தலைமைத்துவத்திற்கும் குடும்ப உறுப்பினர்களக்கும் இடையிலான தொடர்பாடல் இங்கு குறைவாகவே காணப்படும். இத்தகைய குடும்ப தலைமைத்துவம் குடும்பத்தில் வெளிப்படையான நிலையை தோற்றுவிக்கமாட்டாது. மாறாக குடுமபத்தில் கட்டுப்பாடான நிலை காணப்பட்டாலும் அங்கு மகிழ்ச்சி குறைவாகவே காணப்படும்

2.ஆதரவளிக்கும் குடும்ப தலைமைத்துவம்

ஆதரவளிக்கின்ற குடும்ப தலைமைத்துவம் குடும்ப உறுப்பினர்களின் நண்பர்கள் போன்று நடந்துக் கொள்ளும். குடும்ப உறுப்பினர்களின் செயற்பாடுகளில் இவர்களது பங்குபற்றுதல் தவறாது இருக்கும். சினேகபூர்வமான உறவாடல் அங்கு காணப்படும். இங்கு கவனமாக செவிமடுத்தல், சனநாயகமுள்ள தொடர்பாடல் , கலந்தரையாடல் மூலமாக தீhமானமெடுத்தல், தலைமைத்துவத்திற்கு கட்டுப்படல்.போன்ற நல்லம்சங்கள் அதிகமாக காணப்படும்.

3.தயவு காட்டுகின்ற குடும்ப தலைமைத்துவம்

தயுவுகாட்டுகின்ற குடும்ப தலைமைத்துவம் குடும்ப உறுப்பினர்களின் தேவைகளுக்கு அதிக முன்னூரிமை

வழங்கும்;. கிட்டத்தட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு அடங்கி நடக்கின்ற தலைவராக இருப்பார்கள். இங்கு குடும்ப உறுப்பினர்களின சில பொருத்தமற்ற நடத்தைகள் கூட குடும்ப தலைமையினால் விரும்பி ஏற்கப்படும் அபாயம் காணப்படும்.

4.தலையிடாத குடும்ப தலைமைத்துவம்

தலையிடாத குடும்ப தலைமைத்துவம் பெரும்பாலும் தமது தேவைகளை முன்னிறுத்தி குடும்ப உறுப்பினர்களின் தேவைகள் , குடும்ப உறுப்பினர்களின் விருத்தி என்பவற்றை கவனத்தில் எடுக்காமல் இருக்கும்;.இந்நிலைமை குடும்ப உறுப்பினர்களின விருத்தியில் பாரிய எதிர் தாக்கங்களை உருவாக்கும்.

பிள்ளைகளின் கல்வி விருத்தியில் குடும்ப தலைமைத்துவத்தின் பங்களிப்பு

அம்சமாக உள்ளது. நவீன சமூகத்தில் தனி மனித குடும்ப தேசிய மேம்பாட்டுக்கு உறுதுணையானவலுவான கருவி கல்வி என்பது முடிந்த முடிவாகி விட்டது. இது வளர்ச்சியடைந்த மந்றும் வளர்முக நாடுகள் சகல வற்றுக்கும் பொருந்தும் ஆயினும் ;இதற்கு கல்வி முறை கூடிய வினைதிறன் வாய்ந்ததாக அமைதல் வேண்டும் மறுபுறம் நாடுகள் வகுத்துக் கொண்ட அபிவிருத்தி இலக்குகளை அடைய உதவக் கூடிய கற்றறிவு உடையததும் பயிந்சுp பெற்றதுமான மனித வளத்தை கல்விமுறையினுடாகவே உருவாக்க முடியும் இவ்வாறான மனித வளம் தேசிய உலகளாவிய அபிவிருத்திற்கும் நாகரீக வளர்ச்சிக்குமான அடிப்படை நிபந்தனையாகும்.

கல்விமுறையின் வினைத்திறன் மிகமுக்கியமானதாகும். கல்விமுறையின் வினைதிறனை உறுதிப்படுத்துவதந்கு தனித்து பாடசாலைகள் பங்காற்ற முடியாhது அத்தோடு இன்று பிள்ளைகளின் கல்வி விருத்தி என்பது தனித்து பாடசாலைகளினால் மட்டும் நிறைவு செய்யப்பட முடியாது பி;ளளைகளின் கல்விவிருத்திக்கான அடித்தளம் இடுவதில் குடும்பத்தலைமைத்துவத்தின் செயற்பாடுகள் அடிப்படையாக விளங்கவேண்டியுள்ளன.

உணவுஇ உடைஇ வீடு முதலிய அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொண்டு நன்றாக வாழ்தல் பெரும்பாலானோர்க்குச் சவாலாகும். வெள்ளம்இ வரட்சிஇ உண்ணாட்டு யுத்தம்இ நோய்கள் ஆகியவற்றுக்கு முகங்கொடுக்க நாம் ஆயத்தமாக வேண்டும் இவற்றுக்கு முகங்கொடுத்து எதிர்கொள்ளும் திறன் இலங்கையில் வதியும் எமக்குமட்டுமன்றி உலகில் வேறு பல நாடுகளிலும் வதியும் மக்களுக்கும் இருக்க வேண்டும். யப்பான் பொருளாதார ரீதியாக எவ்வளவு தான் அபிவிருத்தியடைந்த போதிலும் யப்பானிய மக்கள் எரிமலை வெடிப்பு முதலிய சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளது. அபிவிருத்தியடைந்த நாடுகள் எனக் கருதப்படும் பல நாடுகளில் கூட இன்று தொழிலின்மை நிலவுகின்றது. இளைஞர் விரக்கி ஏற்படுவதற்கு மூல காரணம் தொழிலின்மையாகும்.

பிள்ளைகளின் கட்டுப்படுத்தல்

பிள்ளைகளைக் கட்டுப்படுத்தல் தொடர்பாக பெற்றோர்கள் தெளிவான உணர்வினைக் செயற்படுத்த வேண்டும். பொருத்தமான விதிகளைவிடுத்து அவற்றை பெற்றோர் பின்பற்றிய படியே பிள்ளைகளின் கட்டுப்பாட்டிற்கு வழிவகுத்தல் வேண்டும். பெற்றோர்களின்

பின்ளைகளின் கல்விவிருத்தியில் குடும்பத் தலைமைத்துவம் காட்டும் ஈடுபாடானது பின்வரும் 5 விடயங்களை அர்த்தத்துடன் உள்ளடக்கியதாக அமைதல் வேண்டும்

அவையாவன.

1.பல்துறைசார்ந்த விடயங்களை பிள்னைகள் கற்பதற்கு விருப்புடைய மனநிலையை பிள்ளைகளிடம் உருவாக்குதல். அதாவது தனித்து ஒரு துறையோடு மட்டும் தனது கற்றலை மட்டுப்பழுத்தாமல் பல்வேறு துறைசார்ந்த விடயங்களை சம விருப்பத்துடன் கற்கும் விருப்பு நிலையை உருவாக்குதல் வேண்டும்

உூம் கணிதத்தை விரும்பிக் கற்கும் ஒரு மாணவன் வரலாறு குடியியல்இ முகாமைத்துவம் போன்ற விடயங்களில் சம விருப்பத்துடன் கற்பதற்கு துண்டுதல் வேண்டும். பிள்ளைகள் சிறப்பாக சிந்திக்கவும் பிரச்சினைகளை விடுவிக்கவும் பல்துறைசார்ந் ஆற்றல் தேவையானதாகும். அது மட்டுமின்றி பல்வேறு வழிகள் பல்வேறு நூட்பங்களில் கற்றுக் கொள்வதற்கு பல்துறைசார்ந் அறிவு பிள்ளைக்கு அவசியமாகும்.

குடும்பத்தலைமைத்துவத்தினால் வழங்கப்படும் சுதந்திரம் பிள்ளைகள் சுயாதினமாக தீர்மானம் எடுக்க தூண்டுதல். பல்வேறு துறைசார்ந்த விடயங்கள் பற்றி விவாதித்தல் .பிள்ளைகள் கற்கும் சகல பாடங்களுக்கும் சமனான முக்கியாத்துவமளித்தல் பல்வேறு துறைசார்ந்த விடயங்களில் குடும்ப அங்கத்தவர்கள் பங்குகொள்ளல் என்பன பிள்ளைகளின் பல்துறைசார்ந்த கற்றலை விருத்தியாக்குகிள்றன.

2.பகுப்பாய்வு செ;ய்து கற்றுக் கொள்ளும் மனப்பழக்கத்தினை குழந்தைகளிடம் உருவாக்குதல். அதாவது பல்வேறுப்பட்ட தகவல்களிருந்து கற்றலுக்குத் தேவையான தகவல்களைத் தெரிவு செய்து அதனைப் பகுப்பாய்வு செய்து தேவையான முடிவுகளை பெற்றுக் கொள்ளும் திறனை பின்ளைகளிடம் வளர்த்தல் ஆகும். வெறுமனே அப்பாடநூல்களில் மட்டும் மட்டுப்படாமல் பல்வேறு தகவல் மூலங்களிலிருந்து கற்பதற்கான ஆற்றலை பிள்ளைகளிடம் விருத்தியாக்குதல் வேண்டும்.

குடும்பத்தில் அன்றாட செயன்முறைகளில் வெளிக்காட்டப்படும் பிரச்சினை விடுவித்தல் திறன்கள் ஒரு விடயத்திற்கான ஆதாரங்களை தேடும் முறை நல்லது கேட்டது என மதிப்பிடும் தன்மை கடந்தகால அனுபவங்களிலிருந்து பாடங்களில் பெற்றுக் கொள்ளுமு; தன்மை என்பன பிள்ளைகளின் பகுப்பாய்வுத் கற்றல் திநனை மேம்படுத்துகின்றன.

3.ஆக்கப்பூர்வமான விடயங்களில் அக்கறைக்காட்டிக் கற்கும் மனமுள்ளப் பிள்ளைகளை உருவாக்குதல். இன்று உலகெங்கும் ஆக்க ரீதியான விடயங்கிளில் கூடிய அக்கறைச் செலுத்தப்படுகின்றது. கல்விஇ வேலைவாய்ப்புஇ சுயதொழில் முயற்சிகள் என்பவற்றை ஆக்கபூர்வமான மனமுடையோருக்கு தனியிடம் கிடைக்கிள்றது. ஆக்கம்இ புதுமைப்படைத்தல் என்பன சாதாரண வாழ்விலும் தொழில் நுட்ப வாழ்விலும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளன. ஒருவர் தான் கற்றவற்றை வெளிப்படுத்தும் நிலை கூட ஆக்கப்பூர்வமான தன்மையை எதிர் பார்க்கப்படுகின்றது.

குடும்பங்களில் வெளிக்காட்டப்படும் அழகிய ஆக்க படைப்புகளுக்கு வழங்கப்படும்

மதிப்பு பெறுமதி என்பன பிள்ளைகளின் ஆக்க விருத்திக் கற்றலை மேம்படுத்துகின்றன.

4.மரியாதை மதிப்பளித்துக்கற்கும் மனமுள்ள பிள்ளைகளை உருவாக்கல். இன்று தனிமனித வாழ்விலும் சமூக ரீதியான வாழ்விலும் மனிதன் செயற்படும் போது பரஸ்பரம் மரியாதை கொடுத்தலும் ஒருவரையொருவர் மதித்தலும் ஒருவரையொருவர் சகித்துக் கொள்ளலும்இ ஒருவரோடு ஒருவர் நெகிழ்ச்சியுடன் வாழ்வதும் மிகவும் தேவைப்படும் ஒரு பண்பாக காணப்படுகிறது. இந்நிலையில் பிள்ளைகளின் கற்றலும் மற்றவர்களுக்கு மரியாதையளித்தலும் நோக்கியமைந்தால் அது தனிமனித வாழ்வுக்கு சமூக விருத்திக்கு அடிப்pபடையாக அமைகிறது. குடும்ப மட்டத்தில் வெளிக் காட்டப்பபடும் பரஸ்பர மரியாதை விட்டுக் கொடுத்தல் பேந்ற பண்புகள் பிள்ளைகளிடத்தே மறாற்றத்தை உருவாக்கும் மறாக குடும்பத்தலைமைத்துவத்திற்கு கட்டுப்படாமை குடும்பத்தில் அமைதியின்மை என்பன பிள்ளைகளின் கற்றலிலம் தாக்கம் செலுத்தும்.

5.நீதி நெறி நின்று வாழும் மனமுள்ள பிள்ளைகளை உருவாக்குதல் நாம் நல்ல நேர்மையான உழலற்ற வெளிப்படைதன்மையுள்ள உலகத்திலேயே வாழ விரும்புகின்றோம். குடும்ப வாழ்விலும் பொது வாழ்விலும் நேர்மையாக வாழ முயற்சிக்கின்றேர். சிறப்பான விழுமியப்பண்புகளின் அடிப்படையில் நீதி நெறி நிpன்று வாழ்வதற்காக பிள்ளைகள் சிறு வயதிலிருந்தே கற்றுக்கொள்ள வேண்டும். குடும்பத்தில் பேன்பபடும் நீதி நெறித் தவறாத செயற்பாடுகள் பிள்ளைகளின் நேர்மையான கற்றலுக்கு வழிகாட்டுகின்றன. நேர்வழயில் நின்று மற்றவர்களுக்கு முன்மாதிரியாக வாழ்வதற்கான வழிகாடடல்கள் பிள்ளைகளுக்கு சிறப்பான வழிகாட்டிகளாகும். மேந்கண்ட கற்றல் விருத்தியை பிள்ளைகளிடம் ஏற்படுபடுத்துவதற்கு குடும்பத் தலைமத்துவம் பின்வரும் பண்புகளைக் கொண்டிருக்கவேண்டும்.

1. முன்மாதியான தலைமைத்துவத்திற்கு வழிகாட்டல்.

2. சேவையாற்றுவதற்கான தலைமைத்துவத்திற்கு வழிகாட்டல்.

3. உறவு முறைகளை பொருத்தமாகப் பேணி வெளிக்காட்டும் தலைமைத்துவம்.

4. பொருமைமிகு குடும்பத்தலைமைத்துவம்

5. வினைத்திறன் மிகு கற்பிக்கும் தலைமைத்துவம்.

6. பங்கேற்பின் விருப்பு கொண்;ட தலைமைத்துவம்.

7. கூட்டாக தீர்மானம் எடுக்கும் தலைமைத்துவம்

8. நட்புறவுடன் கூடிய தலைமைத்துவம்.

9. பலம்இபலவீனங்களை ஏற்றுக்கொள்ளும் தலைமைத்துவம்

10. தன்னை சரியாக வெளிப்படும்தும் தலைமைத்துவம்

11. அனுபவங்களை வெளிப்படுத்தும் தலைமைத்துவம்

12. சவால்களையும் எதிர்ப்புக்களையும் எதிர்கொள்ள தயாரான தலைமைத்துவம் என்பனவாகும்.

நன்றி.

Everyone needs a house to live in, but a supportive family is what builds a home — Anthony Liccione

Related

Previous Post

மாணவர்களின் கற்றல் குறைபாடுகளை நீக்குவதற்காக செயற்றிட்டங்கள் மூலம் கற்பித்தல் 

Next Post

ஆசிரிய தலைமைத்துவத்தின் வகிப்பங்குகள்.

Related Posts

National School Teacher Transfer – 2nd Update

National School Teacher Transfer – 2nd Update

February 6, 2023
Application for Graduate Teaching Appointment – 13 Points

Application for Graduate Teaching Appointment – 13 Points

January 27, 2023
Online Application for Graduate Teaching Appointment 2023

Online Application for Graduate Teaching Appointment 2023

January 28, 2023
Request to upload teachers information in NEMIS information management system

Request to upload teachers information in NEMIS information management system

January 16, 2023
Next Post
ஆசிரிய தலைமைத்துவத்தின் வகிப்பங்குகள்.

ஆசிரிய தலைமைத்துவத்தின் வகிப்பங்குகள்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Page

WhatsApp Group

Telegram Group

Recent Posts

நவம்பரில் சாதாரண தரம் உயர் தரத்துக்கான வகுப்புக்கள் ஆரம்பம்

October 29, 2021

கிராம உத்தியோகத்தர்கள் போராட்டத்தில் குதிக்க தீர்மானம்

February 27, 2019
Picsart 22 07 08 15 46 03 304

தரம் 1 மாணவர் அனுமதி-விண்ணப்ப முடிவுத் திகதி நீடிப்பு

July 8, 2022
TeachMore.lk

Help Menu

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact US
  • Advertise with Us

Main Menu

  • Home
  • News
  • CIRCULARS
  • COURSES
  • Applications
  • EXAMS & RESULTS
  • TEACHINGS
    • Modules for EB
    • கட்டுரைகள்

Recent Posts

  • Examination Calendar for March 2023
  • Interview-Second Stage – NCOE Jaffna
  • 3000 vacancies for Lecturers in University

© 2022 Teachmore.lk

No Result
View All Result
  • Home
  • News
  • CIRCULARS
  • COURSES
  • Applications
  • EXAMS & RESULTS
  • TEACHINGS
    • Modules for EB
    • கட்டுரைகள்

© 2022 Teachmore.lk

error: Content is protected !!