தேசியப் பாடசாலைகள் மற்றும் மாகாணப் பாடசாலைகளில் இணைப்பு செய்யப்பட்ட அனைத்து தற்காலிக இணைப்பும் மார்ச் 24, 2023 வரை நீட்டிக்க கல்வி அமைச்சர் ஒப்புக்கொண்டதாக இலங்கை அரச ஆசிரியர்கள் சங்கத்தின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, டிசம்பர் 31, 2022 இல் முடிவடையவிருந்த அனைத்து இணைப்புகளும் 2022 ற்கான மூன்றாம் தவணை முடியும் வரை தொடரும்.
இலங்கை அரச ஆசிரியர்களின் சங்கத்தின் (GTSL) பொதுச் செயலாளர் ஷெஹான் திஸாநாயக்க, நிதிச் செயலாளர் திரு நாலக டி சில்வா உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவினால் இன்று கல்வி அமைச்சில் கௌரவ கல்வி அமைச்சருடன் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில், பெற்றோல் மற்றும் போக்குவரத்து பிரச்சினை காரணமாக இணைக்கப்பட்ட ஆசிரியர்களின் இடமாற்றம் தொடர்பான பல முக்கிய விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.
2022 கால கல்வி நடவடிக்கைகள் முடிவதற்குள் இணைக்கப்பட்ட ஆசிரியர்கள் மீண்டும் பழைய பாடசாலைகளுக்கு செல்வதன் காரணமாக பல ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் பிள்ளைகளுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் குறித்து அமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் இத்தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிவித்தல் அமைச்சரினால் இன்று வெளியிடப்பட உள்ளதாக இலங்கை அரசாங்க ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
අද දින අධ්යාපන අමාත්යාංශයේ දී ගරු අධ්යාපන අමාත්යතුමා සමග ශ්රී ලංකා රජයේ ගුරුවරුන්ගේ සංගමයේ ප්රධාන ලේකම් ශෙහාන් දිසානායක මහතා මූල්ය ලේකම්, නාලක ද සිල්වා මහතා ඇතුළු නියෝජිතයින් පිරිසක් විසින් විශේෂ සාකච්ඡාවක් පවත්වන ලදී.
එම සාකච්ඡාවේදී අනුයුක්ත ගුරු මාරු සම්බන්ධ ව වැදගත් කරුණු කිහිපයක් සාකච්ඡා කෙරුණු අතර වාරය අවසන් වීමට පෙර සිදුවන අනුයුක්ත ගුරු මාරු හේතුවෙන් බොහෝ ගුරු විදුහල්පතිවරුනට සහ දරුවන්ට සිදුවන අපහසුතාවය පිළිබඳ ව ඇමතිවරයා දැනුවත් කරන ලදී.
ඒ අනුව,
ජාතික පාසල් සහ පළාත් පාසල්වල සිදු කර ඇති සියලු අනුයුක්ත කිරීම් 2023. මාර්තු 24 දක්වා දීර්ඝ කිරීමට ඇමතිවරයා එකඟතාව පලකරන ලදී.
ඒ අනුව 2022 දෙසැම්බර් 31 දින අවසන් වීමට තිබූ සියලු අනුයුක්ත ගුරුවරුන්ගේ එම අනුයුක්ත කාල සීමාව තුන්වන පාසල් වාරය අවසන් වන තුරු ක්රියාත්මක කරනු ඇත.
මේ පිළිබඳ ව අද දින අමාත්යවරයා විසින් මාධ්ය නිවේදනයක් නිකුත් කිරීමට නියමිත ව ඇත.
මංජුල නවගමුව,
(මාධ්ය ප්රකාශක,)
ශ්රී ලංකා රජයේ ගුරුවරුන්ගේ සංගමය.