போக்குவரத்து செலவு அதிகரிப்பு காரணமாக அரச அதிகாரிகளுக்கு தமது இருப்பிடத்திற்கு அருகில் உள்ள அலுவலங்களுக்கு இடமாற்றம் வழங்கும் திட்டம் தொடர்பாக அரசு கவனம் செலுத்தியுள்ளது.
அதன்படி அரச பணியாளரின் வீட்டிற்கு அருகில் உள்ள அலுவலகங்களுக்கு இட மாற்றங்களை வழங்குவதற்கான வழிமுறைகள் செயல்படுத்தப்பட உள்ளது. ஜனாதிபதியின் சிரேஸ்ட பொருளாதார ஆலோசகர் கலாநிதி ஆர். எச். எஸ். சமரதுசங்க மற்றும் ஜனாதிபதியின் ஆலோசகர் அகில விராஜ் காரியவசம் ஆகியோர் இது தொடர்பில் கலந்துரையாடல் நடத்தியுள்ளனர்.
கடனுக்கான வட்டி வீதம் அதிகரித்துள்ளமையினால் தவணைப் பணம் செலுத்துவதற்கு முடியாத மற்றும் போக்குவரத்து செலவு அதிகரிப்பு காரணமாக அதிக செலவிட்டு பயணம் செய்தல் முதலானவற்றினால் அரச அதிகாரிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். .
இது தொடர்பாக மத்திய வங்கி உள்ளிட்ட அரசு நிறுவனங்களில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும், அரச ஊழியர்களுக்கு தமது வீடுகளுக்கு அருகில் இடமாற்றம் வழங்கப்படுவதற்கான திட்டத்தை தயாரிக்க குறிப்பிட்ட காலத்திற்குள் திட்டம் தயாரிக்கப்படல் வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ප්රවාහන වියදම් ඉහළ ගොස් ඇති බැවින් රාජ්ය සේවකයන්ට නිවස ආසන්නයේ රාජකාරි කළ හැකි කාර්යාලයක් වෙන් කර දීමට රජයේ අවධානය යොමු වී තිබේ.
ඒ අනුව රාජ්ය සේවකයෙක්ටම නිවසට ආසන්න ප්රදේශවලට මාරුවීම් ලබා දීමේ ක්රමවේදයක් සැකසීමට නියමිතය. ජනාධිපති ජ්යෙෂ්ඨ ආර්ථික උපදේශක ආචාර්ය ආර්. එච්. එස්. සමරතුංග සහ ජනාධිපති උපදේශක අකිල විරාජ් කාරියවසම් මේ සම්බන්ධව සාකච්ඡාවක් පවත්වා තිබේ.
ණය පොළී අනුපාත ඉහළ ගොස් තිබෙන බැවින් වාරික මුදල් ගෙවාගත නොහැකිවීමේ සහ ප්රවාහන ගාස්තු ඉහළ යාමෙන් වැඩි මුදලක් වියදම් කර බස් රථවලින් රාජකාරියට ගොස් ජීවත්විය නොහැකි වීමේ ගැටලුවකට රාජ්ය සේවකයන් මුහුණ දී සිටින බව අකිල විරාජ් කාරියවසම් පවසයි.
මේ සම්බන්ධව මහ බැංකුව ඇතුළු රජයේ ආයතනවල අවධානය යොමුවිය යුතු බවත් රාජ්ය සේවකයන්ට නිවසකට ආසන්න කාර්යාලයක් ලබා දීම සඳහා නිශ්චිත කාලයක් තුළ වැඩපිළිවෙළක් සකස් කරන බවත් හෙතෙම එහිදී අවධාරණය කළේය.